தமிழ்நாடு

6 முதல் 12-ம் வகுப்பு வரை.. பாடப்புத்தகத்தில் விடுதலை வீரர்களின் வரலாறு - பட்டியலிட்டு ஆளுநருக்கு பதிலடி!

திராவிட இயக்கங்களின் ஆட்சியில் தமிழ்நாடு விடுதலை போராட்ட வீரர்களின் வரலாறுகள் பாடநூல்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் பேசியதற்கு திண்டுக்கல் ஐ லியோனி கண்டனம் தெரிவித்துள்ளார்.

6 முதல் 12-ம் வகுப்பு வரை.. பாடப்புத்தகத்தில் விடுதலை வீரர்களின் வரலாறு - பட்டியலிட்டு ஆளுநருக்கு பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திராவிட இயக்கங்களின் ஆட்சியில் தமிழ்நாடு விடுதலை போராட்ட வீரர்களின் வரலாறுகள் பாடநூல்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் நடைபெற்ற மருது சகோதரர்களின் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டு விடுதலை வீரர்களின் வரலாறும், அவர்களுக்கு தமிழ்நாடு அரசு செலுத்தும் மரியாதை எதுவும் தெரியாமல் ஆளுநர் பேசி வருவதாக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :

"தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசின் பாடநூல்களில் விடுதலைப் போராட்ட தியாகிகள் குறித்த வரலாறு பாடநூல்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்ற ஒரு அபாண்டமான சுமத்தியிருப்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு, கண்டனத்திற்குரியது. ஆளுநர் அவ்வாறு கூறும்போது குறைந்து பட்சம் தமிழ்நாடு பாட நூல்களை படித்துப் பார்த்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் - பாடநூல்களை தினமும் மாணவர்களுக்கு போதித்து வரும் ஆசிரியர்களிடம் கேட்டிருக்க வேண்டும்.

6 முதல் 12-ம் வகுப்பு வரை.. பாடப்புத்தகத்தில் விடுதலை வீரர்களின் வரலாறு - பட்டியலிட்டு ஆளுநருக்கு பதிலடி!

இரண்டையும் செய்யாமல் ஏனோதானோ என்று உயர் பொறுப்பில் இருக்கும் ஆளுநர் பேசியிருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல தமிழ்நாடு அரசின் பாட நூல்களைப் பொறுத்தவரை, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் பாடங்கள் உள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்கள் பற்றிய பாடங்கள், அவர்களின் வரலாறு, தியாகங்கள், அவர்கள் இந்திய விடுதலைக்காக ஆற்றிய பங்கு ஆகியவை படங்களுடன் தெளிவாக மாணவர்களுக்கு புரிந்துகொள்ளும்படி விளக்கப்ட்டுள்ளது தெரிவித்துக் கொள்கிறேன்.

* 6-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் தேசத்தந்தை மகாத்மா காந்தி, கர்ம வீரர் காமராசர், முண்டாசு கவிஞர் பாரதியார், வீரமிகு வேலு நாச்சியார் ஆகியோரின் தியாக வரலாறுகள் இடம்பெற்றுள்ளன.

* 7-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார், பசும்பொன் உ. முத்துராமலிங்கனார், கன்னியத்திற்குரிய காயிதே மில்லத் ஆகியோரின் விடுதலைப் போராட்ட தியாகங்களும்,

* 8-ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் அரசியல் சட்ட மேதை அண்ணல் டாக்டர் அம்பேகர் பங்களிப்பும்,

* 9-ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், தந்தை பெரியார், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் ஆகியோரின் வரலாறுகளும் இடம்பெற்றுள்ளன.

6 முதல் 12-ம் வகுப்பு வரை.. பாடப்புத்தகத்தில் விடுதலை வீரர்களின் வரலாறு - பட்டியலிட்டு ஆளுநருக்கு பதிலடி!

* 10-ம் வகுப்பு பாடநூலில் திலகர், கோகலே, வ.வே.சு, பிபின் சந்திர பால், மோதிலால் நேரு, விபின் சந்திரர், பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் வினோபா பாவே, பட்டாபி சீதாராமையா, அருணா ஆசப் அலி, சத்தியமூர்த்தி, மூதறிஞர் ராஜாஜி, தமிழறிஞர் திரு.வி.க., என எண்ணற்ற தியாக வரலாறுகள் இடம்பெற்றுள்ன.

* 10-ம் வகுப்பு வரலாற்றுப் பாடப்புத்தகத்தில் குயிலி, தீரன் சின்னமலை, ருக்மிணி லட்சுமிபதி, பூலித்தேவர், ஒண்டிவீரன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் உள்ளிட்ட பல விடுதலைப் போராட்ட தியாகிகள் பங்களிப்பும்,

* 11-ம் வகுப்பு வரலாற்றுப் பாடப்புத்தகத்தில் திப்பு சுல்தான், ஜான்சி ராணி லட்சுமி பாய் ஆகிய விடுதலை வீரர்கள் பங்களிப்பும்,

* 12-ம் வகுப்பில் வாஞ்சிநாதன், சுப்பிரமணிய சிவா, மவுலானா அபுல் கலாம் ஆசாத், அலி சகோதரர்கள், ஜவஹர்லால் நேரு, ஆசாத், பகத் சிங், உள்ளிட்ட பலரின் விடுதலைப் போராட்ட வரலாறுகள் மிக அழகாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

ஆனால் இந்த வரலாறு எல்லாம் படித்து பார்க்காமல்- படித்துப் பார்க்கவும் ஆர்வம் காட்டாமல் விடுதலைப் போராட்ட வீரர்களை சிறப்பித்து வரும் எங்கள் தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான திராவிட மாடல் அரசை குறை காண வேண்டும் என்ற குதர்க்க எண்ணத்தோடு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் ஆற்றியிருப்பது உரை அல்ல. அந்தப் பதவிக்கு பொருத்தமில்லாத ஆதாரமற்ற அரசியல் பேச்சு!

எனவே ஆளுநர் வெற்று மைதானத்தில் "கம்பு சுற்றுவதை” தவிர்க்க வேண்டும். சமூக நீதியைக் காக்கும் திராவிடம் ஒரு பழுத்த மரம். அதை மாண்புமிகு ஆளுநர் “பொய்” கல்லெறிந்து வீழ்த்தி விட முடியாது. திராவிடமும், சமூக நீதியும் வலுப்பெறும், உறுதியாகும்."

banner

Related Stories

Related Stories