தமிழ்நாடு

”தேர்தலில் வெற்றி பெற்று 33% இட ஒதுக்கீடு சட்டத்தை இந்தியா கூட்டணி நிறைவேற்றும்” : சோனியா காந்தி உறுதி!

இந்தியா கூட்டணி பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை நிச்சயமாக நிறைவேற்றியே தீரும் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

”தேர்தலில் வெற்றி பெற்று 33% இட ஒதுக்கீடு சட்டத்தை இந்தியா கூட்டணி நிறைவேற்றும்” : சோனியா காந்தி உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டை யொட்டி, தி.மு.க மகளிர் அணி சார்பில் ‘மகளிர் உரிமை மாநாடு’ கழகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி , ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான ஆனி ராஜா ,ஆம் ஆத்மி கட்சியின் முன்னணி தலைவர் ராக்கி பிட்லன், திரிணாமுல் காங். செய்தி தொடர்பாளர் சுஷ்மிதா தேவ், பீகார் அமைச்சர் லெஷி சிங் உள்ளிட்ட INDIA கூட்டணியின் பல்வேறு முக்கிய அகில இந்தியத் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

”தேர்தலில் வெற்றி பெற்று 33% இட ஒதுக்கீடு சட்டத்தை இந்தியா கூட்டணி நிறைவேற்றும்” : சோனியா காந்தி உறுதி!

இந்த மாநாட்டில் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, " இந்த மகளிர் உரிமை மாநாட்டிற்கு அழைத்த முதலமைச்சருக்கு நன்றி. வாழ்க்கை முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு உழைத்தவர் கலைஞர். கவிஞர், எழுத்தாளர் என பன்முக தன்மை கொண்டவர்.

பல போராட்டங்கள் இருந்தாலும் நீண்ட நெறிய போராட்டத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் இந்திய பெண்கள் பல துறைகளில் சிறப்பாக திகழ்ந்து வருகின்றனர். ஏழை எளிய சகோதரிகள் பல போராட்டங்களை தாண்டி தான் சமத்துவ சாதனைகளை நிகழ்த்த முடிகிறது.

ஒரு பெண்ணிற்கு கல்வி கற்றுக்கொடுத்தால் குடும்பத்திற்கே கல்வி கற்றுக் கொடுத்ததாகும். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்று நிறைவேறி இருப்பதற்கு காரணமாக இருந்தவர் ராஜீவ் காந்திதான். அவர் காட்டிய பாதையில் இன்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியுள்ளது.

”தேர்தலில் வெற்றி பெற்று 33% இட ஒதுக்கீடு சட்டத்தை இந்தியா கூட்டணி நிறைவேற்றும்” : சோனியா காந்தி உறுதி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்கும் திமுக அரசின் முன்னெடுப்புகளால் தமிழ்நாட்டை இந்தியாவே புகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு மகளிருக்கான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தாய் - சேய் இறப்பு விகிதம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் குறைவாக உள்ளது.

ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கலைஞரின் ஆட்சியில் தான் காவல் துறையில் பெண்கள் என்ற உரிமையை கொண்டு வந்தார். தற்போது இருக்கும் காவல்துறையில் 4-ல் ஒரு பங்கு காவல்துறையில் பெண்களாக இருப்பது பெருமைக்குரியது. மற்றொரு முக்கியமான சீர்திருத்தம். அரசு பணியில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30 சதவிகிதம். அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 40 சதவிகிதமாக உயர்த்தி உள்ளார். இந்தியா கூட்டமைப்பு பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை நிச்சயமாக நிறைவேற்றிய தீரும். அனைவரும் சேர்ந்து போராடுவோம் நாம் அனைவரும் இணைந்து நிச்சயமாக இதனை சாதிப்போம்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories