தமிழ்நாடு

“தன்னுடைய 9 ஆண்டுகால ஆட்சி பற்றி மட்டும் மோடி பேசுவதே இல்லை..” - தயாநிதி மாறன் எம்.பி விமர்சனம் !

மக்களை ஏமாற்றி, திசை திருப்பும் வகையில் பிரதமர் மோடி பேசி வருவதாக திமுக எம்.பி தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார்.

“தன்னுடைய 9 ஆண்டுகால ஆட்சி பற்றி மட்டும் மோடி பேசுவதே இல்லை..” - தயாநிதி மாறன் எம்.பி விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக தென் சென்னை தென் மேற்கு மாவட்டம் சார்பில் சைக்கிளோத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 100 சைக்கிள் ரைடர்கள் சென்னை, கலங்கரை விளக்கத்திலிருந்து மாமல்லபுரம் சென்று மீண்டும் கலங்கரை விளக்கம் வரை சுமார் 100 கிலோ மீட்டர் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டனர். இவர்களுக்கு திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளரும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தயாநிதி மாறன் பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார்.

“தன்னுடைய 9 ஆண்டுகால ஆட்சி பற்றி மட்டும் மோடி பேசுவதே இல்லை..” - தயாநிதி மாறன் எம்.பி விமர்சனம் !

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தயாநிதி மாறன் எம்.பி கூறுகையில், மோடி தனது ஒன்பது ஆண்டுகால ஆட்சி குறித்து மட்டும் பேசாமல் இருப்பதாக விமர்சித்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது, "கலைஞர் நூற்றாண்டு சைக்ளோத்தான் போட்டி இன்று 100 கிலோமீட்டர் வரை நடைபெற்றுள்ளது. கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் சிறப்பான முறையில் தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் சைக்கிள் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். இன்று சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த ரமேசும் இந்த போட்டியில் கலந்து கொண்டு 100 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டியுள்ளார். உடல் பயிற்சி மேற்கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்ற நல்ல எண்ணத்தில் இது போன்ற போட்டிகளை தொடர்ந்து நடத்துகிறோம்.

“தன்னுடைய 9 ஆண்டுகால ஆட்சி பற்றி மட்டும் மோடி பேசுவதே இல்லை..” - தயாநிதி மாறன் எம்.பி விமர்சனம் !

கோயில்கள் தொடர்பாக பிரதமர் பேச்சுக்கு நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெளிவாக பதில் அளித்து விட்டார். பொய்யான தகவலை பிரதமர் கூறுவது வருந்தத்தக்கது. அவர் பார்வை தவறான முறையில் உள்ளது. பிரதமர் மோடி தனது 9 ஆண்டுகால ஆட்சியை பற்றி மட்டும் பேசுவதில்லை. மக்களை பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், இது போன்று திசை திருப்பும் வகையில் பேசி வருகிறார்.

பிரதமர் மோடி தனது ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் சாதித்தது என்ன? பெட்ரோல், கேஸ் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. சாதாரண மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்ததா?. வங்கியில் 15 லட்சம் போட்டாரா?. மக்களை திசைத்திருப்ப ஏமாற்ற மோடி கையில் எடுத்துள்ள ஆயுதம் தான் கோயில்கள் தொடர்பான போலி பரப்புரை" என்றார்.

banner

Related Stories

Related Stories