தமிழ்நாடு

நீட் தேர்வின் உண்மை முகம் அம்பலம்; தேர்வை ஆதரிக்கும் பாசிஸ்டுகள் பதில் என்ன?.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

முதுநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வு தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நீட் தேர்வின் உண்மை முகம் அம்பலம்; தேர்வை ஆதரிக்கும் பாசிஸ்டுகள் பதில் என்ன?.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2023 -24ம் ஆண்டுக்கான மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீர் தேர்வு கடந்த மார்ச் 5ம் தேதி நடைபெற்றது. பிறகு தேர்வு முடிவுகள் 14ம் தேதி வெளியானது. தற்போது வரை அகில இந்திய அளவில் மூன்று சுற்று கலந்தாய்வுகள் நிறைவடைந்துள்ளது.

ஆனால் அரசு இடங்கள் மட்டுமே மாணவர்கள் சேர்க்கை முடிந்துள்ளது. தனியார் கல்லூரிகளில் இன்னும் இடங்கள் காலியாக உள்ளது. இதனால் முதுநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு மதிப்பெண் பூஜ்ஜியமாக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கலந்தாய்வுக்குழு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள x சமூகவலைதளப் பதிவில், " முதுநிலை நீட் - தகுதி மதிப்பெண்னை ஜீரோவாக குறைத்திருப்பதன் மூலம் நீட் தேர்வின் உண்மையான தகுதி அம்பலப்பட்டு இருக்கிறது .

தனியார் கோச்சிங் சென்டர்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்குப் பயன் அளிக்கவே மத்திய அரசு நீட் தேர்வைத் திணித்தது என்று திமுக எப்போதும் கூறி வருகிறது. அது இன்று சரியென நிரூபிக்கப்பட்டுள்ளது இந்த நியாயமற்ற NEET திறமைகளை அடையாளம் காணும் சோதனை அல்ல, ஏழை மற்றும் விளிம்புநிலை மாணவர்களை ஒழிப்பதற்கான நீட் தேர்வை ஆதரிக்கும் பாசிஸ்டுகள் இந்த அநீதிக்கும், பாரபட்சத்துக்கும் பதில் சொல்ல வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

மாணவர்கள் உயிர் பலி வாங்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பம் முதலே குரல் கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories