தமிழ்நாடு

ரூ.186.81 கோடிக்கு சொத்துக்களை குவித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. சிக்கிய ஆவணங்கள் - பின்னணி என்ன?

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 வருமானத்துக்கு அதிகமாக மொத்தம் ரூ. 186 கோடியே 81 லட்சம் அளவிற்கு சொத்துக்களை குவித்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

ரூ.186.81 கோடிக்கு சொத்துக்களை குவித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. சிக்கிய ஆவணங்கள் - பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், தங்கமணி, காமராஜ் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக மொத்தம் ரூ. 186 கோடியே 81 லட்சம் அளவிற்கு சொத்துக்களை குவித்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து விவரங்களை தீக்கதிர் நாளிதலில் செய்தியாக வெளியிட்டுள்ளது. அதில், 7 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மொத்தமாக ரூ. 186 கோடியே 81 லட்சம் அளவிற்கும், 2 முன்னாள் எம்எல்ஏ-க்கள் ரூ. 7 கோடியே 36 லட்சம் அளவிற்கும் சொத்துக்கள் சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி, சி. விஜயபாஸ்கர், கே.பி. அன்பழகன், தங்கமணி, காமராஜ் ஆகிய 7 அமைச்சர்களுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஏற்கனவே சோதனை நடத்தி கோடிக்கணக் கான பணம், தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளை பறிமுதல் செய்தனர்.

ரூ.186.81 கோடிக்கு சொத்துக்களை குவித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. சிக்கிய ஆவணங்கள் - பின்னணி என்ன?

நாமக்கல் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்தி வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில்தான், இதுவரை விசாரணை வளையத்திற்குள் வந்துள்ள 7 முன்னாள் அமைச்சர்கள் வருமானத்துக்கு அதிகமாக மொத்தம் ரூ. 186 கோடியே 81 லட்சம் அளவிற்கு சொத்துக்களை குவித்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரூ. 6.11 கோடி

22.07. 2021 அன்று போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி யது. சோதனையில் 25 லட்சத்து 56 ஆயி ரம் ரூபாய் பணம், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்தப் பின்னணியில் எம்.ஆர். விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 6 கோடியே 11 லட்சம் அளவிற்கு சொத்துக் கள் குவித்திருப்பதாகக் கூறி அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.186.81 கோடிக்கு சொத்துக்களை குவித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. சிக்கிய ஆவணங்கள் - பின்னணி என்ன?

எஸ்.பி. வேலுமணி ரூ. 51.09கோடி கடந்த 15.03.2022 அன்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்குச் சொந்த மான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி 11 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி, 84 லட்சம் ரொக்கப்பணத்தை பறி முதல் செய்தது. 34 லட்சம் ரூபாய் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யப்பட்டிருப்ப தையும் கண்டுபிடித்தது.

இதனடிப்படையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வருமானத்துக்கு அதிகமாக மொத்தம் 51 கோடியே 09 லட்சம் ரூபாய் அளவிற்கு சொத்துக்களை குவித்திருப்பதாகக் கூறி வேலுமணி உட்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கே.சி. வீரமணி ரூ. 27.78 கோடி

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையா னது, கடந்த 16.09.2021 அன்று முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி 4.987 கிலோ தங்கம், 47 கிராம் வைர நகை கள், 7.2 கிலோ வெள்ளி, 34 லட்சம் ரொக்கம், 9 சொகுசுக் கார்கள் உள்பட சொத்து ஆவ ணங்கள், 30 லட்சம் மதிப்பிலான 275 யூனிட் மணல் ஆகியவற்றை பறிமுதல் செய்தது.

1 கோடியே 80 லட்சம் அந்நிய செலாவணியாக முதலீடு செய்யப்பட்டி ருப்பதையும் கண்டுபிடித்தது. இதனடிப்படை யில், முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வருமானத்துக்கு அதிகமாக மொத்தம் 27 கோடியே 78 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்து ள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.186.81 கோடிக்கு சொத்துக்களை குவித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. சிக்கிய ஆவணங்கள் - பின்னணி என்ன?

டாக்டர் சி. விஜயபாஸ்கர் ரூ. 27.22 கோடி

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் கடந்த 18.10.2021 அன்று சோத னை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறை, கணக்கில் வராத 23 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், 4,870 கிராம் தங்க நகைகள், 136 கனரக வாகனங்களின் பதிவுச் சான்றிதழ்கள், சொத்து ஆவணங் களை பறிமுதல் செய்தனர். அதனடிப்ப டையில், வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 22 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்துக்களை குவித்திருப்பதாக டாக்டர் சி. விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ரூ.186.81 கோடிக்கு சொத்துக்களை குவித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. சிக்கிய ஆவணங்கள் - பின்னணி என்ன?

கே.பி. அன்பழகன் ரூ. 11.32கோடி

21.1.2022 அன்று முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகனுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறையினர் 2 கோடியே 87 லட்சம் ரூபாய் ரொக்கம், 6.63 கிலோ தங்கம், 13.85 கிலோ வெள்ளி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். அதன்தொடர்ச்சியாக கே.பி. அன்பழகன் 11 கோடியே 32 லட்சம் ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாகக் கூறி அவர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.186.81 கோடிக்கு சொத்துக்களை குவித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. சிக்கிய ஆவணங்கள் - பின்னணி என்ன?

தங்கமணி ரூ. 4.85 கோடி

முன்னாள் அமைச்சர் தங்கமணியும் வருமானத்துக்கு அதிகமாக 4 கோடியே 85 லட்சம் ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்திருப்பதாக கூறி, அவர் உட்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த 15.12.2021 அன்று நடத்திய சோதனையில் 2 கோடியே 16 லட்சம் பணம், 1.13 கிலோ தங்கம் மற்றும் சொத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.

ரூ.186.81 கோடிக்கு சொத்துக்களை குவித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. சிக்கிய ஆவணங்கள் - பின்னணி என்ன?

ஆர். காமராஜ் ரூ. 58.44 கோடி

அதிமுக ஆட்சியில் உணவுத் துறை அமைச்சராகவும், தற்போது நன்னிலம் தொகுதி எம்எல்ஏ-வாகவும் இருப்பவர் ஆர். காமராஜ். இவர், வருமானத்துக்கு அதிக மாக தனது பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பெயரிலும் 58 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 252 ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக, லஞ்ச ஒழிப்புத் துறை 2022 ஜூலை 22-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்துள்ளது.

காமராஜ் தொடர்புடைய 52 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 41 லட்சத்து 6 ஆயிரம், 963 பவுன் நகைகள், 24 கிலோ வெள்ளி, ஐபோன், கணினி, பென் டிரைவ், ஹார்டு டிஸ்க் மற்றும் ஆவணங்களும், கணக்கில் வராத ரூ. 15.50 லட்சம் பணம், வங்கி லாக்கர் சாவி உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ரூ.186.81 கோடிக்கு சொத்துக்களை குவித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. சிக்கிய ஆவணங்கள் - பின்னணி என்ன?

மொத்தம் ரூ. 186.81 கோடி

இவ்வாறு லஞ்ச ஒழிப்புத்துறை சோத னைக்கு உள்ளான 7 அமைச்சர்களும் மொத்தமாக 186 கோடியே 81 லட்சம் ரூபாய் சொத்துக்களை குவித்துள்ளது தெரிய வந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த 7 முன்னாள் அமைச்சர்களுக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 6 கோடியே 85 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம், 28.181 கிலோ தங்கம், 140 கிலோ வெள்ளி, 47 கிராம் வைர நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மொத்தம் 33 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

எஸ்.பி. வேலுமணி ரூ. 811 கோடிக்கு டெண்டர் முறைகேடு

இவைகள் தவிர, முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது 811 கோடி ரூபாய்க்கான டெண்டர் முறைகேடு வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது. இதை போல நாமக்கல் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் மற்றும் அவரது மனைவி உமா ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக ரூ. 4.72 கோடி சொத்துக்கள் சேர்த்திருப்பதாக நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கடைசியாக, சென்னை தி.நகர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சத்யா வருமானத்திற்கு அதிகமாக ரூ. 2.64 கோடி சொத்துக்கள் வாங்கி குவித்ததாக 2023 செப்டம்பர் 13 அன்று, லஞ்ச ஒழிப்புத்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. “ எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories