தமிழ்நாடு

அம்பேத்கர் குறித்து அவதூறு பேச்சு.. VHP முன்னாள் நிர்வாகி RBVS மணியன் கைது : போலிஸ் அதிரடி நடவடிக்கை!

அம்பேத்கர் மற்றும் திருவள்ளுவர் குறித்து அவதூறாகப் பேசிய RBVS மணியனை போலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பேத்கர் குறித்து அவதூறு பேச்சு.. VHP முன்னாள் நிர்வாகி RBVS மணியன் கைது : போலிஸ் அதிரடி நடவடிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை தியாகராய நகர் பகுதியைச் சேர்ந்தவர் RBVS மணியன். இவர் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவராக இருந்துள்ளார். தற்போது ஆன்மீக சொற்பொழிவுகள் நிகழ்த்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 11ம் தேதி தியாகராய நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் RBVS மணியன் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது இவர் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் மற்றும் திருவள்ளுவர் குறித்து அவதூறாகப் பேசியுள்ளார். மேலும் பட்டியல் சமூகத்தவர்களையும் இழிவாகப் பேசியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து அம்பேத்கர் மற்றும் திருவள்ளுவர் குறித்து அவதூறாகப் பேசிய RBVS மணியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், மாம்பலம் போலிஸார் RBVS மணியன் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்தனர். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை முடிந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories