தமிழ்நாடு

காணாமல் போன மூதாட்டி.. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை செய்த மனிதநேய உதவி - குவியும் பாராட்டு!

காணாமல் போன மூதாட்டி.. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை செய்த மனிதநேய உதவி - குவியும் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையின் தரம் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. பொதுவாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பற்றி தவறான பிம்பம் இருப்பதை உடைத்தெறிந்தது தமிழ்நாடு அரசு மருத்துவமனைகள்தான். தமிழ்நாட்டில் மொத்தம் 1000-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது.

கொரோனா போன்ற பல்வேறு பேரிடர் காலத்தில் கூட அரசு மருத்துவமனைகள் தான் ஏழை - எளிய மக்களுக்கு பேருதவியாக இருந்தது. இது போன்ற அரசு மருத்துவமனைகள் இருப்பது ஏழை மக்களுக்கு மிகவும் உதவியாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தமிழ்நாடு நோயாளிகள் மட்டுமின்றி, வெளிமாநில நோயாளிகளும், வெளிநாடுகளை சேர்ந்த நோயாளிகளும் சிகிச்சை மேற்கொள்கின்றனர்.

இங்கு வந்து அவர்கள் சிகிச்சை மேற்கொள்வது குறித்து அவர்களே பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சென்னை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் ஒரு சதவீத நோயாளிகள் தமிழர் அல்லாத பிற மொழியை சார்ந்தவர்களாகவே இருப்பார். தமிழ்நாட்டின் மருத்துவ வசதி நாடு மட்டுமின்றி, உலகம் முழுக்க பெருமையாக பேசப்படும் ஒன்றாக இருக்கிறது.

நாள் ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெரும் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு என்று புதிய புதிய வசதிகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் அண்மையில் கூட சென்னை, கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை திறக்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் பல்வேறு வசதிகள் உள்ளது.

மக்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மருத்துவமனையில் 1000 படுக்கை வசதிகள் கொண்ட கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில், இருதயவியல் துறை, இருதய அறுவை சிகிச்சை துறை, நரம்பியல் துறை, நரம்பியல் அறுவை சிகிச்சை துறை, புற்றுநோய் மருத்துவத் துறை, புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை, குடல் இரைப்பை மருத்துவத் துறை, குடல் இரைப்பை அறுவை சிகிச்சை துறை, சிறுநீரக அறுவை சிகிச்சை துறை, சிறுநீரக மருத்துவத் துறை, இரத்தநாள அறுவை சிகிச்சை துறை, மூளை இரத்தநாள கதிரியல் துறை ஆகிய உயர்சிறப்பு மருத்துவச் சிகிச்சைக்கான வசதிகளை கொண்டுள்ளது.

காணாமல் போன மூதாட்டி.. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை செய்த மனிதநேய உதவி - குவியும் பாராட்டு!

இவ்வாறு தமிழ்நாடு அரசு செய்யும் இது போன்ற நல்ல திட்டங்களுக்கு அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்களும் உறுதுணையாக இருக்கின்றனர். கொரோனா போன்ற பேரிடர் சமயத்தில் தங்கள் உயிரையும் பெரிதாக பொருட்படுத்தாமல் மக்கள் சேவை ஆற்றி வந்தனர். இது போன்ற மக்கள் சேவைகளில் தமிழ்நாட்டில் முக்கிய முதன்மை மருத்துவமனையாக அமைந்துள்ளது தான் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை.

சென்னை சென்ட்ரல் இரயில்வே நிலையத்தின் அருகே இருக்கிறது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை. 1664-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த மருத்துவமனைதான் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட முதல் அரசு பொது மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனை தற்போது தமிழ்நாட்டின் முதன்மையான மருத்துவமனையாகவும் அமைந்துள்ளது. இந்தியாவின் மருத்துவ தலைநகரான சென்னைக்கு இது ஒரு முக்கிய அடையாளமாக அமைந்துள்ளது.

உலக அளவில் இருந்து நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவர். இங்கிருக்கும் உயரிய சிகிச்சை வசதிகள் வேறு எங்கும் அவ்வளவு எளிதில் கிடைக்காது என்ற காரணத்தினாலும், எந்தவித செலவும் இல்லாமல் இங்கே நல்ல சிகிச்சை எடுத்துக்கொள்ள முடிகிறது என்ற காரணத்தினாலும் மக்கள் இங்கே வருகை தருகின்றனர்.

காணாமல் போன மூதாட்டி.. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை செய்த மனிதநேய உதவி - குவியும் பாராட்டு!

பொதுவாக தனியார் மருத்துவமனைகளில் ஒரு சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் ஆகும் செலவு, இங்கு இல்லாமல் போகிறது. அங்கே இல்லாத சில வசதிகள் அரசு மருத்துவமனைகளில் காணப்படுகிறது. சில நேரங்களில் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து என்றால், அவர்களை தொட கூட தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் பயப்படுவர்.

ஆனால் அரசு மருத்துவமனைகளில் மனிதரின் உயிர் தான் முக்கியம் என்ற நோக்கத்தோடு சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளிப்பர். அதுபோன்ற ஒரு சம்பவம் தான் தற்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடந்துள்ளது. இந்த நிகழ்வுக்காக பொதுமக்கள் மத்தியில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

காணாமல் போன மூதாட்டி.. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை செய்த மனிதநேய உதவி - குவியும் பாராட்டு!

அமலோற்பவநாதன் ஜோசப் (Amalorpavanathan Joseph) என்ற ஓய்வு பெற்ற மருத்துவரின் 60 வயதுக்கும் மேற்பட்ட சகோதரி ஒருவர் கடந்த வாரம் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்திற்கு சென்றுள்ளார். அங்கே சென்ற அவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவர் வயதானவர் என்பதால் மொபைல், பர்ஸ் என்று எதையும் எடுத்து செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் பெரும் பதற்றமடைந்த குடும்பத்தார் தொடர்ந்து பாதிரியார் உள்ளிட்டோருக்கு தகவல் கொடுத்து, அங்கிருக்கும் மைக் மூலம் அவரது பெயர் ஒலிக்கப்பட்டது. அப்போதும் கூட அவர் கிடைக்கவில்லை. இதனால் வேறு வழியின்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் தீவிரமாக விசாரணை தேடி வந்தனர்.

ஒரு பக்கம் போலீசார் தேட, மறுபக்கம் குடும்பத்தார் மருத்துவமனைகளில் ஏதேனும், விபத்து அல்லது அவசர பிரிவுகளில் அவரது பெயரில் யாரேனும் அனுமதிக்கப்பட்டுள்ளனரா என்று விசாரித்தனர். அப்போது மறுநாள் சுமார் 2 மணியளவில் அந்த மூதாட்டி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் (RGGGH) அனுமதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து அவர் குறித்து விசாரிக்கையில், அவர் காணாமல் போன அன்று, அவர் எழும்பூர் இரயில் நிலையம் அருகே சுய நினைவின்றி கிடந்ததாக மாலை 4.30 மணியளவில் யாரோ அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது அவருக்கு அங்கிருந்த மருத்துவர்கள் தலை, கர்ப்பப்பை, முதுகெழும்பு, மார்பு உள்ளிட்டவற்றிற்கு CT ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளனர்.

காணாமல் போன மூதாட்டி.. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை செய்த மனிதநேய உதவி - குவியும் பாராட்டு!

அப்போது அந்த மூதாட்டிக்கு மூளையில் இரத்த கசிவு இருப்பதையும், collarbone என்று சொல்லக்கூடிய காறை எலும்பு முறிவு இருப்பதையும் கண்டறிந்தனர். ஆனால் இரத்த கசிவு அறுவை சிகிச்சை செய்ய முடியாத காரணத்தினால், அவருக்கு ஏற்பட்ட எலும்பு முறிவை மருத்துவர்கள் சரி செய்தது தெரியவந்தது. சுமார் 20 மணி நேரம் வேறு எந்த உதவியாளரும் இல்லாமல் அந்த மூதாட்டிக்கு தேவையான அனைத்து சிகிச்சை ஏற்பாடுகளையும் அரசு மருத்துவமனை நிர்வாகமே செய்தது. தற்போது மூதாட்டி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பி நலமுடன் தனது குடும்பத்துடன் இருக்கிறார்.

இந்த நிகழ்வு குறித்து ஓய்வு பெற்ற மருத்துவர் அமலோற்பவநாதன் ஜோசப் (Amalorpavanathan Jose) தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு அரசின் மருத்துவமனைகளின் சேவையை பாராட்டியுள்ளார். பொதுவாகவே ஒரு நோயாளிக்கு உறுதுணையாக அவருக்கு தெரிந்த யாரேனும் இருக்க வேண்டும். அவர் கழிவறைக்கு செல்ல நேரிடும்போது, சாப்பாடு கொடுக்கும்போதும் யாராவது இருக்க வேண்டும்.

ஆனால் அந்த மூதாட்டிக்கு உறுதுணையாக அதே மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் ஒருவர் நியமிக்கப்பட்டார். தனது பணிகளுக்கு நடுவே, இவரையும் அந்த நர்ஸ் கவனித்து வந்துள்ளார். அவரது சகோதரியை நன்றாக கவனித்து கொண்டதற்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் டீன் தேரணி ராஜனுக்கு (Therani Rajan) நன்றி தெரிவித்துள்ளார். இந்த தேரணி ராஜன் தான் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி (சுதந்திர தினம்) நடைபெற்ற விழாவில் நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வை குறிப்பிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.கனகராஜ், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் டீன் தேரணி ராஜனுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் மிகுந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது கே.கனகராஜின் முகநூலில், “நோயாளிகள் காயத்தின் தன்மை, நாற்றம் ஆகியவற்றிற்காக கைவிடப்பட்டு பின்னர் முழுவதும் குணமான பிறகு குடும்பத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள். இப்படி உணர்ச்சிகரமான பல அனுபவங்களை கேட்க முடிந்தது. இந்த வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பிறந்த நாள் மற்றும் பண்டிகையின் போது சிறப்பு உணவுகள் வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

முதலாவதாக இத்தகைய முன்னெடுப்புக்காக முதல்வர் மருத்துவர் தேரணிராஜன் அவர்களுக்கு பாராட்டுகள். எத்தகைய முன்னெடுப்பும் அதனைத் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். அத்தகைய நோயாளிகளை கவனித்துக் கொண்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் பாராட்டுக்களும் அன்பும்.

கொரோனா வராமல் இருந்திருந்தால் இந்நேரம் அரசு மருத்துவமனைகளில் பெரும்பான்மையானவை தனியார்மயமாக்கப்பட்டு இருக்கும். அதுதான் ஒன்றிய அரசின் நிதி ஆயோக் முன்வைத்த திட்டம். ஒருவேளை இந்த விருது அறிவிக்கப்படாமல் இருந்திருந்தால், எவர் கவனத்திற்கும் கூட வராமல் இந்த சேவை தொடர்ந்திருக்கத்தான் செய்யும். தமிழ்நாடு அரசுக்கு நம்முடைய பாராட்டுகள், வாழ்த்துகள்.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று தனியார் மருத்துவமனைகளை விட, அரசு மருத்துவமனைகள் எவ்வளவு மனிதநேயத்துடன் விளங்கிறது என்பதை விவரிக்கும் வகையில் முகநூலில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவைத் தொடர்ந்து பலரும் அரசு மருத்துவமனையின் இத்தகைய சேவைக்கு தங்களின் பாராட்டுக்களைத் தெரிவித்துவருகின்றனர்.

banner

Related Stories

Related Stories