தேர்தல் 2024

எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்தின் எதிரொலி: இறுதியாக வாக்குப்பதிவு விபரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு பிறகு, இறுதிக்கட்ட வாக்கு சதவீத விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்தின் எதிரொலி: இறுதியாக வாக்குப்பதிவு விபரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்.19-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து கடந்த ஏப்.26-ம் தேதி 88 தொகுதிகளுக்கு 2-ம் கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

வழக்கமாக தேர்தல் நடந்து முடிந்த சில மணி நேரங்களிலோ அல்லது 24 மணி நேரத்திற்குள்ளே இத்தனை சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவிக்கும். ஆனால் முதற்கட்ட தேர்தல் நடைபெற்று 11 நாட்களும், 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்று 4 நாட்களும் ஆன நிலையில், இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் தனது இணைய பக்கத்தில் தெரிவிக்கவில்லை.

எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்தின் எதிரொலி: இறுதியாக வாக்குப்பதிவு விபரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

ஏற்கனவே திரிபுராவில் உள்ள ஒரு சில வாக்குச்சாவடிகளில் 100%-க்கும் மேலாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சூழலில் தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடாமல் காலம் தாழ்த்துவது அனைவர் மத்தியிலும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இதனால் எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்து வந்ததோடு, கால தாமதத்திற்கான காரணங்கள் குறித்து கேள்வியும் எழுப்பியது. தொடர்ந்து எழுந்த வந்த விமர்சனங்களின் எதிரொலியாக தொகுதி வாரியாக வாக்கு சதவீத முழு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்தின் எதிரொலி: இறுதியாக வாக்குப்பதிவு விபரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!
எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்தின் எதிரொலி: இறுதியாக வாக்குப்பதிவு விபரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

தேர்தல் ஆணையம் வெளியிட்ட விபரங்களின்படி முதற்கட்ட வாக்குபதிவில் 66.14% என்றும், இரண்டாம் கட்டத்தில் 66.71% என்றும் வாக்குகள் பதிவாகியிருக்கிறது. இதில் முதற்கட்டத்தில் ஆண்கள் 66.22%-மும், பெண்கள் 66.07%-மும், மூன்றாம் பாலினத்தவர் 31.32%-மும் வாக்களித்துள்ளனர். அதே போல் இரண்டாம் கட்டத்தில் ஆண்கள் 66.99%-மும், பெண்கள் 66.42%-மும், மூன்றாம் பாலினத்தவர் 23.86%-மும் வாக்களித்துள்ளனர்

இதில் தமிழ்நாட்டில் 69.72% வாக்கு பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின்போது 72.44% வாக்குகள் பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories