தமிழ்நாடு

கொடநாடு வழக்கு: கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் நழுவி சென்ற பழனிசாமியின் நண்பர் - அடுத்து சிக்குவது யார்?

கொடநாடு கொலை கொள்ளை குறித்து செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், நழுவி சென்ற எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரும், சேலம் புறநகர் அதிமுக செயலாளர் இளங்கோவன்.

கொடநாடு வழக்கு: கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் நழுவி சென்ற பழனிசாமியின் நண்பர் - அடுத்து சிக்குவது யார்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொடநாடு கொலை கொள்ளை குறித்து செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், நழுவி சென்ற எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரும், சேலம் புறநகர் அதிமுக செயலாளர் இளங்கோவன்.

எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரும், சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், பழனிசாமியின் பினாமியாகவும் செயல்பட்டு வருபவர் இளங்கோவன். கடந்த கால அ.தி.மு.க ஆட்சியில் நிழல் முதலமைச்சராகவும் செயல்பட்டு வந்தவர் இளங்கோவன்.

இவருக்கு கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்பு இருப்பதாகவும், கொடநாட்டில் எடுக்கப்பட்ட பல்வேறு ஆவணங்கள், இளங்கோவனிடம் இருப்பதாகவும், இவரை விசாரிக்க வேண்டும் என்று உயிரழந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால், கடந்த சில தினங்களுக்கு முன்பு குற்றம் சாட்டி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொடநாடு வழக்கு: கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் நழுவி சென்ற பழனிசாமியின் நண்பர் - அடுத்து சிக்குவது யார்?

இந்த நிலையில் இன்று இவர், அ.தி.மு.கவினருடன் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு அளித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்து, கனகராஜின் சகோதரர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அவர் கூறும் தகவல்களை ஊடகங்கள் பெரித்துபடுத்திட வேண்டாம் என்று கூறி, யாரோ எழுதி கொடுத்ததை பார்த்து படித்து விட்டு, செய்தியாளர் சந்திப்பை முடித்து கொண்டார்.

மேலும் தனபாலின் மனைவி கூறாத பல கருத்துக்களை, அவர் கூறியதாக கூறி விட்டு சென்றார். தொடர்ந்து, செய்தியாளர்கள் பலரும், கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாகவும், அவர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விளக்கம் பெற முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அவர்களின் எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல், எழுதி கொண்டு வந்ததை மட்டும் படித்து விட்டு அங்கிருந்து நழுவி விறு விறு வென்று சென்றார்.

பின் தொடர்ந்து சென்ற செய்தியாளர்கள் பல கேள்வி எழுப்பியும் பதில் சொல்லாமல் காரில் ஏறி சென்றார். இதனை பார்த்த செய்தியாளர்கள், தனபால் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வரும் நிலையில், பெயரளவுக்கு வந்து தன்பால் மீது குற்றம் சுமத்தி விட்டு சென்றார் என்று பேசி கொண்டனர்.

banner

Related Stories

Related Stories