சென்னை கோயம்பேடு மார்க்கெட் அருகில் உள்ள மைதானத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 1521 பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தகப் பை, நோட்டு புத்தகம், கூலித் தொழிலாளர்களுக்கு சீருடை மற்றும் மகளிர்களுக்கு புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திமுக துணை பொதுச்செயலாளர் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் கனிமொழி எம்.பி பேசுகையில், “பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாள் என சட்டமாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் தான்.தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட சமூகங்களில் பிறந்த பிள்ளைகள் படிப்பதற்கான தனது வாழ்நாள் முழுவதும் உழைத்த தலைவர் என்றால், அது பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் மட்டுமே.
அவரது ஆட்சி காலத்திற்கு முன்புதான் ராஜாஜி அவர்கள் ஆட்சி காலத்தில் நிதி நெருக்கடி என கூறி அனைத்து அரசு பள்ளிகளையும் மூடிய பொழுது 6000 பள்ளிகளை திறந்தார் நமது பெருந்தலைவர் காமராஜர். குறிப்பாக பெருந்தலைவர் காமராஜர் தனது ஆட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதற்கு முன்பு 6000 அரசு பள்ளிகள் தொடங்கப்பட்டிருந்த நிலையில் 12 ஆயிரம் பள்ளிகளாக உயர்த்தி காட்டியவர் அவர்தான்.
பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில் ஒருமுறை அவர் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் ஆடும் மாடு மேய்த்துக் கொண்டிருப்பதை பார்த்து இறங்கி பிள்ளைகளிடம் ஏன் மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்த பிள்ளைகள் நான் பள்ளிக்கூடம் சென்று விட்டால் நீ எனக்கு சாப்பாடு போடுவியா என கேட்ட கேள்வி.
அவர் நேராக சென்னை வந்தவுடன் கோட்டைக்குச் சென்று அதிகாரிகளை அழைத்து ஏழைப் பிள்ளைகள் மதிய உணவு இருந்தால் கண்டிப்பாக படிக்க வருவார்கள் என எண்ணி மதிய உணவு திட்டத்தை தொடங்கியவர் நமது பெருந்தலைவர் காமராஜர். மாலை உணவு திட்டத்தினை மெருகேற்றும் வலையில் சத்தான உணவாக முட்டை வாழைப்பழம் என உணவு முறையை மாற்றி பள்ளி மாணவிகளுக்கு வழங்கியது முத்தமிழறிஞர் கலைஞர் தான்.
மதிய உணவு பிள்ளைகளுக்கு கிடைக்கிறது. ஆனால் காலை முதல் பிள்ளைகள் மதியம் வரை பட்டினியாக கல்வி கற்க கூடாது என்பதற்காகவே ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி உணவுத் திட்டத்தை வழங்கிக் கொண்டிருப்பவர் நமது முதலமைச்சர்.
மிகவும் திறமை வாய்ந்த தலைவர்கள் ஆட்சி பொறுப்பில் இருந்த காரணத்தினால் இன்று இந்திய அளவில் கல்வியில் அதிக அளவில் தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஒன்றிய அரசு வருகின்ற 2035 ஆம் ஆண்டு கல்வியில் இந்தியா வளர்ச்சி அடையும் என்று தெரிவித்துள்ளார்கள். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரையில் இன்று கல்வியில் தேசிய கல்வி அளவையும் தமிழ்நாடு மாநிலம் தாண்டி உள்ளது.
அதற்கு மிக முக்கிய காரணம் காமராஜர் மற்றும் அவர் வழி வந்த தலைவர்கள் மட்டுமே. ஜனநாயகத்துக்கு எதிராக செயல்பட்டவர்களை எதிர்த்த ஒரு தலைவரை சிலர் அவரை தாக்க முற்பட்டவர்கள் தான் இன்று அவரது பெயரை பயன்படுத்தி குளிர் காய நினைக்கிறார்கள். பெரும் தலைவர் காமராஜரை எதிர்த்தவர்கள் கூட இன்று அவரைப் போற்றுகின்ற ஒரு நிலைமையை உருவாக்கியுள்ளவர் தான் பெருந்தலைவர் காமராஜ.
ஒருவரை ஒருவர் நேசித்தவர்கள் பெருந்தலைவர் காமராஜர் அவர்களும் முத்தமிழறிஞர் கலைஞரும். எனது பாட்டி மறைந்த பொழுது முத்தமிழறிஞர் கலைஞர் வீட்டுக்கு வருவதற்கு முன்பு அவர் காமராஜர் எங்களது துன்பத்தை பங்கேற்றுக் கொள்வதற்காக வந்தவர் தான் பெருந்தலைவர் காமராஜர். இதை பலமுறை முத்தமிழ் அறிஞர் கலைஞர் பல மேடைகளில் கூறியுள்ளார்.
பெருந்தலைவர் காமராஜர் மறைந்த பொழுது முத்தமிழ் அறிஞர் கலைஞர் மறைந்த அவருக்கு எல்லா மரியாதையும் தரவேண்டும் என்று முன் நின்று ஒரு மகனைப் போல பெருந்தலைவர் காமராஜரின் மறைவுக்கான அனைத்து காரியத்தையும் செய்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தான். கொட்டும் மழையிலும் காரின் வெளிச்சத்தில் தனது வேட்டையை மடித்துக் கொண்டு பெருந்தலைவர் காமராஜர் மரியாதை காண பணிகள் நடைபெறுவதாக என்று இரவு முழுவதும் நின்று பார்வையிட்டால் முத்தமிழர் கலைஞர்.
எல்லாத்துக்கும் உதாரணமாக பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக சட்டமேற்றியவர் நமது முத்தமிழர் கலைஞர். ஜாதி மதம் என எந்த வித்தியாசமும் பார்க்காதவர் தான் பெருந்தலைவர் காமராஜர். தமிழனை தமிழனாகவும் மனிதனை மனிதனாகவும் மதித்தவர் தான் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள். எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கக்கூடிய சுயமரியாதை சமமாக வாழக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்கி அனைவரும் காட்ட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.