தமிழ்நாடு

பெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்து.. சமூகவலைதளத்தில் பதிவிட்ட பா.ஜ.க ஆதரவாளர் கைது: போலிஸ் அதிரடி!

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன்பு உள்ள பெரியார் சிலையை உடைப்பேன் என சமூகவலைதளத்தில் பதிவிட்ட பா.ஜ.க ஆதரவாளரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

பெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்து.. சமூகவலைதளத்தில் பதிவிட்ட பா.ஜ.க ஆதரவாளர் கைது: போலிஸ் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ராஜகோபுரம் முன்பாக தந்தை பெரியார் சிலை உள்ளது. இந்த சிலைக்கு இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜ.க ஆதரவாளர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைப்பேன் என்று 'எக்ஸ்' சமூகவலைதளத்தில் மோடி பரணி என்பவர் பதிவிட்டுள்ளார். மேலும் பெரியார் மற்றும் தி.மு.க குறித்து அவதூறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தினர். இதில் பெரியார் சிலை குறித்து கருத்து வெளியிட்டது ராமநாதபுரம் திருவாடானை பகுதியைச் சேர்ந்த பரணி என்பவர் என்று தெரியவந்தது.

இதையடுத்து ஸ்ரீரங்கம் போலிஸார் ஈரோட்டில் பரணியை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முகநூலில் பா.ஜ.கவின் கொடியுடைய முகப்பு படத்துடன் ’மோடி பரணி’ என்ற பெயர் மூலம் அவர் தொடர்ந்து அவதூறான கருத்துக்களைப் பதிவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைப்பேன் என இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டுப் பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் பேசியது சர்ச்சையானது. இதையடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலிஸார் கனல் கண்ணனைக் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories