தமிழ்நாடு

”நாம் அனைவரும் அமைச்சர் உதயநிதியுடன் நிற்க வேண்டும்” .. இயக்குனர் வெற்றிமாறன் ஆதரவு கருத்து!

"எனக்கு இந்தியா என்ற பெயரே போதுமானது" என இயக்குனர் வெற்றிமாறன் கருத்து தெரிவித்துள்ளார்.

”நாம் அனைவரும் அமைச்சர் உதயநிதியுடன் நிற்க வேண்டும்” .. இயக்குனர் வெற்றிமாறன் ஆதரவு கருத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பியூர் சினிமா புத்தக விற்பனை நிலையத்தைத் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் வெற்றிமாறன், "புத்தக வாசிப்பு மிகவும் அவசியமானது. எந்த காலகட்டத்திலும் நம்மை மேம்படுத்திக் கொள்ளவும், பக்குவப்படுத்திக் கொள்ளவும், அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொள்ளவும் புத்தகம் வாசிப்பது மிகவும் அவசியமானது.

”நாம் அனைவரும் அமைச்சர் உதயநிதியுடன் நிற்க வேண்டும்” .. இயக்குனர் வெற்றிமாறன் ஆதரவு கருத்து!

இப்போது இருக்கும் தமிழ் சினிமா சமூகத்தை நோக்கி நகரும் சினிமாவாக உள்ளது. பிறக்கின்ற எல்லோருக்கும், எல்லாமும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்பது அடிப்படை உறுமை. அது பிறப்புரிமை. அதை மறுக்கின்ற எதுவாக இருந்தாலும், எந்த ரூபத்தில் இருந்தாலும் அதை எதிர்ப்பது அனைவரது கடமையாகும்.

இதைதான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பேசினார். இப்போது நாம் அனைவரும் உதயநிதி ஸ்டாலினுடன் நிற்க வேண்டும். நானும் அவருடன் நிற்கிறேன். அவருக்கு எனது ஆதரவு உண்டு. உதயநிதி தலைக்கு சாமியார் ஒருவர் ரூ.10 கோடி விலை நிர்ணயித்தது எல்லாம் வன்முறையைத் தூண்டும் செயலாகும்.

எனக்கு இந்தியா என்ற பெயரை போதும். அதுவே சரியானது. நமக்கு இதுவரை தவறாகக் கற்பிக்கப்பட்டுள்ள அனைத்தில் இருந்தும் விடுதலை, வாசிப்பின் மூலமாகத்தான் கிடைக்கும் என்பது எனது நம்பிக்கை" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories