தமிழ்நாடு

”சனாதனத்தின் முகத்தை உதயநிதி ஸ்டாலின் கிழித்ததால் கூச்சலிடும் அமித்ஷா”.. தயாநிதி மாறன் MP பதிலடி!

சனாதனத்தின் முகத்தை உதயநிதி ஸ்டாலின் கிழித்தால் அமித்ஷா கூச்சலிடுகிறார் என தயாநிதி மாறன் எம்.பி பதிலடி கொடுத்துள்ளார்.

”சனாதனத்தின் முகத்தை உதயநிதி ஸ்டாலின் கிழித்ததால் கூச்சலிடும் அமித்ஷா”..  தயாநிதி மாறன் MP பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அகில இந்திய அளவிலான கபடிப் போட்டி நடைபெற்றது. இறுதிப்போட்டியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் தயாநிதி மாறன் எம்.பி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் இந்நிகழ்வில் தயாநிதி மாறன் எம்.பி," ஹாக்கி, கபடி உள்ளிட்ட விளையாட்டிற்கும் பெயர் போன ஊராக மணப்பாறை உள்ளது. இங்கு விளையாட்டரங்கம் அமைக்க வேண்டும் என்று கடந்த முறை உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளதாக சொன்னார்கள். இந்த முறை நானும், அமைச்சருடன் சேர்ந்து சொல்கிறேன். மணப்பாறையில் விளையாட்டரங்கம் அமைக்க நானும் முயற்சி எடுப்பேன்.

முத்தமிழறிஞர் கலைஞரைப் போல், தளபதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைப்போல் நமது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் தமிழ்நாட்டில் பாசிச பா.ஜ.க அரசு உள்ளே வராமல் தடுக்கின்ற அளவிற்குச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.

”சனாதனத்தின் முகத்தை உதயநிதி ஸ்டாலின் கிழித்ததால் கூச்சலிடும் அமித்ஷா”..  தயாநிதி மாறன் MP பதிலடி!

திராவிட மாடல் ஆட்சியில் எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதே நமது தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் குறிக்கோள். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் முகத்தை வெளிப்படுத்தியதால், அமித்ஷாவுக்கு கோபம் வந்துவிட்டது. அதனால்தான் அமித்ஷா சொல்கிறார் உதயநிதி இதுபோல் பேசக்கூடாது என்கிறார்.

இன்று இரண்டு ராக்கெட்டுகள் விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்டுள்ளது. ஒன்று நிலாவுக்கு சந்திரயான் 3. மற்றொன்று சூரியனுக்கு ஆதித்யா எல்1 ராக்கெட்டுகள் அனுப்பப்பட்டுள்ளது. இந்த இரண்டிலும் திட்ட இயக்குநர்களாக இருந்தவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவருமே அரசுப் பள்ளியில் படித்தவர்கள். இவர்கள் இந்த உயரத்திற்குச் சென்றுள்ளார்கள் என்றால் அதற்குக் காரணம் திராவிட மாடல் ஆட்சிதான்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories