தமிழ்நாடு

வேலூரில் திமுக முப்பெரும் விழா.. பெரியார் அண்ணா கலைஞர் விருதுகள் அறிவிப்பு - யார் யாருக்கு என்ன விருது?

தி.மு.க முப்பெரும் விழா செப்டம்பர் 17ம் தேதி வேலூரில் நடைபெற உள்ளது.

வேலூரில் திமுக முப்பெரும் விழா..  பெரியார் அண்ணா கலைஞர் விருதுகள் அறிவிப்பு - யார் யாருக்கு என்ன விருது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திராவிட இயக்கத்தின் வழித் தோன்றல் தந்தை பெரியார் பிறந்த நாள் செப்டம்பர் 17, தி.மு.கழகத்தை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் செப்டம்பர் 15. தி.மு.க தோற்றுவிக்கப்பட்ட நாள் செப்டம்பர் 17. இம்மூன்றையும் ஒன்றிணைத்து முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சீரிய முயற்சியால் ஒவ்வொரு ஆண்டும் “முப்பெரும் விழா”வாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு தமிழனத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாவுடன் சேர்த்து முப்பெரும் விழா நடைபெறுகிறது. செப்டம்பர் 17ம் தேதி வேலூரில் தி.மு.க முப்பெரும் விழா நடைபெறுகிறது.

வேலூரில் திமுக முப்பெரும் விழா..  பெரியார் அண்ணா கலைஞர் விருதுகள் அறிவிப்பு - யார் யாருக்கு என்ன விருது?

இந்த விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் விருதுகள் பெறுவோர்களின் பெயர்களை தி.மு.க தலைமை கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி,

பெரியார் விருது - மயிலாடுதுறை கி.சத்தியசீலன்

அண்ணா விருது - மீஞ்சூர் க. சுந்தரம்

கலைஞர் விருது - அமைச்சர் ஐ. பெரியசாமி

பாவேந்தர் விருது - தென்காசி மலிகா கதிரவன்

பேராசிரியர் விருது - பெங்களூர் ந.இராமசாமி

ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.

banner

Related Stories

Related Stories