தமிழ்நாடு

சென்னை கிண்டி மேம்பாலத்தில் திடீரென பற்றி எரிந்த சொகுசு கார்.. நூலிழையில் உயிர் தப்பிய இரண்டு பெண்கள்!

சென்னை கிண்டி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கிண்டி மேம்பாலத்தில் திடீரென பற்றி எரிந்த சொகுசு கார்.. நூலிழையில் உயிர் தப்பிய இரண்டு பெண்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயா. இவரது தோழி உஷா. இவர்கள் இருவரும் வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலுக்கு காரில் சென்றுள்ளனர். பின்னர் அங்கு இருவரும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

இவர்களது கார் கிண்டி மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதை பார்த்த உடனே காரை விஜயா நிறுத்தியுள்ளார். பிறகு இருவரும் காரில் இருந்து கீழே இறங்கி வந்தனர். பின்னர் நில நிமிடங்களிலேயே கார் தீ பிடித்து எரிந்துள்ளது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலிஸார் அங்கு வாகனங்கள் எதுவும் செல்லாதவாறு தடுத்து நிறுத்தினர்.

சென்னை கிண்டி மேம்பாலத்தில் திடீரென பற்றி எரிந்த சொகுசு கார்.. நூலிழையில் உயிர் தப்பிய இரண்டு பெண்கள்!

அப்போது அந்த வழியாக வந்த தண்ணீர் லாரியை நிறுத்தி எரிந்து கொண்டிருந்த கார் மீது நீரை அடித்து தீயை அனைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் கார் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இருப்பினும் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

banner

Related Stories

Related Stories