இந்தியா

விவசாய நிலத்தை நாசம் செய்த பன்றிகள்.. உரிமையாளர் குடும்பம் அடித்து கொலை: 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி!

ஜார்கண்டில் விவசாய நிலத்தை பன்றிகள் நாசம் செய்ததால் அதன் உரிமையாளர் குடும்பம் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவசாய நிலத்தை நாசம் செய்த பன்றிகள்.. உரிமையாளர் குடும்பம் அடித்து கொலை: 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி அடுத்த ஓர்மன்ஜி பகுதியில் விவசாய பண்ணை உள்ளது. அதன் இருகிலேயே விவசாய குடும்பம் ஒன்று பன்றிகளை வளர்த்து வருகிறது. இப்பன்றிகள் அடிக்கடி விவசாய பண்ணைக்குள் சென்று நிலங்களை நாசம் செய்து வந்துள்ளது.

இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பன்றிகள் பண்ணைக்குள் சென்றுள்ளது. இதைபார்த்து அங்கிருந்தவர்கள் ஆவேசமடைந்து கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் விவசாயியின் வீட்டிற்குள் புகுந்த சரமாரியாக தாக்கியுள்ளனர்.

விவசாய நிலத்தை நாசம் செய்த பன்றிகள்.. உரிமையாளர் குடும்பம் அடித்து கொலை: 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி!

இந்த தாக்குதலில் 2 பெண்கள் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலிஸார் விரைந்து வந்து உயிரிழந்தவர்கள் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் விசாரணையில் உயிரிழந்தவர்கள் ஜனேஸ்வர் பேடியா, சரிதா தேவி மற்றும் சஞ்சு தேவி ஆகிய மூன்று பேர் என்பது தெரியவந்துள்ளது. அதோடு இந்த சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் தொடர்பு உள்ளது. இதில் ஆறு பேரை போலிஸார் கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories