தமிழ்நாடு

“பூமியின் பாதுகாவலன்” : படித்தாலே சிலிர்க்கவைக்கும் பலரும் அறியாத யானைகளின் சிறப்பம்சங்கள் !

பூமியில் வாழும் உயிரினங்களில் மனிதர்களை தவிர்த்து அதிக காலம் வாழும் உயிரினம் யானை தான்.

“பூமியின் பாதுகாவலன்” : படித்தாலே சிலிர்க்கவைக்கும் பலரும் அறியாத யானைகளின் சிறப்பம்சங்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இயற்கையின் தலைச்சிறந்த படைப்புகளில் ஒன்று தான் காடு. காட்டில் வாழும் விலங்குகளின் வாழ்க்கை சற்று வித்தியாசமானதாக தான் இருக்கும். காட்டு விலங்குகளில் முக்கியமாக கருதப்படுவது யானைகள் தான்.

உலகில் இருக்கும் ஆயிரக்கணக்கான யானைகளும் இரண்டு பிரிவுகளை சார்ந்தவை மட்டும் தான் ஒன்று ஆசிய யானைகள்; மற்றொன்று ஆப்பிரிக்க யானைகள். உலக யானைகள் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அந்நாளில் யானைகளை பாதுகாப்பதற்கும் மக்களிடம் யானைகளை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் கொண்டாடப்படுகிறது.

பூமியில் வாழும் உயிரினங்களில் மனிதர்களை தவிர்த்து அதிக காலம் வாழும் உயிரினம் யானை தான். யானைகள் சராசரியாக எழுபது முதல் என்பது ஆண்டுகள் வரை ஆயுள்காலம் கொண்டிருக்கும். அதில் பெண் ஆசிய யானைகளுக்கு தந்தம் இருக்காது.

உலகின் தன்மையான விலங்குகளில் யானை முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. மனித வாழ்க்கையில் காலங்காலமாக யானைக்கும் ஓர் முக்கிய பங்கு உண்டு. ஒரு யானை பிறக்கும் பொழுது அது முப்பது மனித குழந்தைகளின் எடைக்கு சமமாக இருக்கும். யானைகள் எப்பொழுதும் தனித்து வாழும் விலங்கு அல்ல; காடுகளில் கூட்டமாக இருக்கும் விலங்குகளில் யானையும் ஒன்றாகும்.

மனிதர்களின் மொத்த உடலின் சதையை விட யானையின் தும்பிக்கையில் இருக்கும் சதை அதிகம். யானைகளும் நீர்யானைகளும் காலநிலை மாற்றத்திற்கேற்ப சூப்பர் ஹீரோக்கள் என சொல்லலாம். இவைகள் கிரகத்தை குளிர்ச்சியாக வைத்து இருப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. சராசரியாக யானைகள் இருபத்திரண்டு மாதங்கள் கர்ப்பமாக இருந்து தனது குட்டியை ஈன்றெடுக்கும். யானைகளின் சிறப்பாக கருதப்படுவது அதன் தந்தமும் தும்பிக்கையும் தான்.

“பூமியின் பாதுகாவலன்” : படித்தாலே சிலிர்க்கவைக்கும் பலரும் அறியாத யானைகளின் சிறப்பம்சங்கள் !
chuchart duangdaw

இதனால் தான் மனிதர்களை ஊக்குவிக்கும் வகையில், "யானைக்கு தும்பிக்கை.. மனிதனுக்கு நம்பிக்கை." என்ற பழமொழி உருவானது. ஒரு யானையின் தும்பிக்கை நாற்பதாயிரம் தசைகளை கொண்டுள்ளது. யானைகள் தங்களது உணவை எடுத்து உண்பதற்கும், நீர் அருந்துவதற்கும் தனது தும்பிக்கையை பயன்படுத்துகிறது.

யானைகள் ஒருமுறை நீர் அருந்தும் பொழுது 7.5 லிட்டர் தண்ணிரை குடிக்கும் திறனுடையது. ஒரு நாளைக்கு 350 லிட்டர் தண்ணீரை அருந்தும். ஆனால் 24 மணி நேரங்களில் நீர் அருந்தவில்லை என்றால் யானை உயிரை விட்டு விடும். இதன் தும்பிக்கை மூலம் ஊற்றுத்தண்ணீரை கண்டுபிடிக்கும் திறன் கொண்டவை. அதே போல் யானையின் தந்தம் ஒரு முறை உடைந்தால் மீண்டும் வளராது. பொதுவாக மனிதர்கள் வலது கை பழக்கம் உடையவர்களாக இருந்தாலும், இடது கை பழக்கம் உடையவர்களும் இருக்கிறார்கள். அது போல யானைகளையும் தந்தங்களை வைத்து நாம் அடையாளப்படுத்தலாம்.

அதாவது, எந்த பக்க தந்தத்தை அது அதிகம் பயன்படுத்துகிறது என்பதை பொறுத்து அதனை அடையாளப்படுத்த முடியும். யானையின் சிறப்பம்சமாக காடுகளில் பல கிலோ மீட்டர் நடந்து செல்லும் வகையில் புதிய பாதைகளை உருவாக்கும். அதோடு அவைகள் போகும் பாதைகளில் தனது சானங்களின் மூலம் கடின மரங்களுக்கான விதைகளை தருகிறது. இதனால் புதிதாக விளைகின்ற செடி, மரங்கள் பசுமையான காடுகளை உருவாக்குகின்றது. யானைகள் காட்டில் ஒருபங்கு உணவை பெற்றால் அதற்கு ஈடாக பத்து மடங்கு செடி மரங்களை தருகிறது.

“பூமியின் பாதுகாவலன்” : படித்தாலே சிலிர்க்கவைக்கும் பலரும் அறியாத யானைகளின் சிறப்பம்சங்கள் !

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை யானைகளின் கணக்கெடுப்பு இந்தியா முழுவதும் நடைபெறும். யானைகளின் பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் ‘‘ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை 2023” என்ற அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் வெளியிட்டுயிருந்தார். அதன் அடிப்படையில் கடந்த மே மாதம் 17ஆம் நாள் முதல் 19ஆம் நாள் வரை யானைகளின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடக அரசுகளின் ஒத்துழைப்புகளோடு இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் என மொத்தம் 2,099 நபர்கள் ஈடுபட்டனர். கடந்த 2017ஆம் ஆண்டு 2,761ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை, தற்போது 2,961 ஆக அதிகரித்துள்ளது. அதில் ஆண்,பெண் விகிதத்தில் மூன்று பெண் யானைகளுக்கு ஒரு ஆண் யானை என கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டில் முப்பது பெண் யானைகளுக்கு ஒரு ஆண் யானையும், கேரளாவில் 90 பெண் யானைகளுக்கு ஒரு ஆண் யானை தான் இருந்திருக்கிறது. அது வேட்டை தலை தூக்கி இருந்த காலம் என சொல்லப்படுகிறது. யானைகள் பாதுகாப்பு இயக்கத்தின் மூலமாக பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்துக்கொண்டு வருகிறது. 2000 ஆண்டுகளுக்கும் மேலாக மனித இனத்திற்கு அதன் பல்வேறு பங்களிப்புகளோடு யானைகள் உதவுகின்றன. யானைகள் அழிந்தால் காடுகளும் அழியும், காடுகள் அழிந்தால் மொத்த விலங்கினத்தின் வாழ்வாதாரமும் கேள்விக் குறியாகிவிடும். எனவே யானைகளை பாதுகாப்போம் காடுகளை வளர்ப்போம்.

- நா.வினீத்

banner

Related Stories

Related Stories