தமிழ்நாடு

பழைய இரும்பு குடோனில் திருட்டு.. இந்து மக்கள் கட்சி நிர்வாகி உள்ளிட்ட 13 பேரை கைது செய்த போலிஸ்!

கோவையில் திருட்டு வழக்கில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழைய இரும்பு குடோனில் திருட்டு..  இந்து மக்கள் கட்சி நிர்வாகி உள்ளிட்ட 13 பேரை கைது செய்த போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் பகுதியைச் சேர்ந்தவர் முத்தையா. இவர் சிங்காநல்லூர் வெள்ளலூர் சாலையில் உள்ள இரும்பு குடோனில் ஒட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்த குடோனை முத்தையாவின் அண்ணன் நடத்தி வருகிறார்.

இவர் குடோன் இருக்கும் இடத்தின் உரிமையாளரிடம், இடத்தை வாங்குவதற்காக ரூ. 50 லட்சம் அட்வான்ஸ் கொடுத்துள்ளார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் முத்தையாவின் அண்ணன் இடத்தை கிரயம் செய்யாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு முத்தையாவும், பேச்சிமுத்து என்பவரும் குடோனில் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது குடோனுக்குள் புகுந்த 10க்கும் மேற்பட்ட நபர்கள் குடோனில் வைக்கப்பட்டிருந்த ஆறுடன் எடையுள்ள பழைய அலுமினியம், செம்பு, இரும்பு உள்ளிட்ட பொருட்களை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

பழைய இரும்பு குடோனில் திருட்டு..  இந்து மக்கள் கட்சி நிர்வாகி உள்ளிட்ட 13 பேரை கைது செய்த போலிஸ்!

மேலும் அலுவலகத்திலிருந்த பீரோ, டேபிள், பிரிட்ஜ், வாஷிங் மெஷின், எல்இடி டிவி, சிசிடிவி கேமரா உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் லாரியில் ஏற்றியுள்ளனர். அப்போது சத்தம் கேட்டு எழுந்த முத்தையா மற்றும் பேச்சுமுத்து இருவரையும் மிரட்டி ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளனர்.

பின்னர், "இந்த இடத்தை நீங்கள் உடனே காலி செய்யாவிட்டால் கொலை செய்து விடுவோம்" என அந்த கும்பல் மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றது. இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

பழைய இரும்பு குடோனில் திருட்டு..  இந்து மக்கள் கட்சி நிர்வாகி உள்ளிட்ட 13 பேரை கைது செய்த போலிஸ்!

இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், குடோனுக்குள் அத்துமீறி நுழைந்து பல லட்சம் மதிப்புள்ள இரும்பு பொருட்களைத் திருடிச் சென்ற சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி பிரபு, கண்ணன், அஜ்மத் அலி, வீரபாரதி, பென்னி, மனோஜ் குமார், வீரய்யா, பார்த்தசாரதி, பிரபு, வெள்ளையன், சங்கர, பாலமுருகன், முகேஷ் ஆகிய 13 பேரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர் .

banner

Related Stories

Related Stories