தமிழ்நாடு

’ஊரை விட்டு வெளியே போ’.. விவசாயி வீட்டை இடித்து அராஜகமாக நடந்து கொண்ட அ.தி.மு.க Ex MLA!

திருப்பூர் மாவட்டத்தில் விவசாயி ஒருவரின் வீட்டை அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ இடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

’ஊரை விட்டு வெளியே போ’.. விவசாயி வீட்டை இடித்து அராஜகமாக நடந்து கொண்ட அ.தி.மு.க Ex MLA!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டத்திற்குட்பட்ட நெய்க்காரன் பாளையத்தில் சிவா என்பவர் விவசாயம் செய்து வருகிறார். சிவாவின் மனைவி விஜயா நூறு நாள் கூலி வேலைக்குச் சென்று வருகிறார். இந்த தம்பதியின் இரண்டு மகன்கள் திருமணமாகி காங்கேயத்தில் வசித்து வருகின்றனர்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக ஊர்க்காரர்கள் நெய்க்காரன் பாளையம் நத்தம் புறம்போக்கு பகுதியில் ஒரு சிறிய அறை கட்டியிருந்தார்கள். அதில் சிவாவின் பெரியப்பா காளி தங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் இவர் இறந்த 14 வருடங்களுக்கு முன்பாக சிவா அந்த அறையில் குடும்பத்துடன் தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் இவர்கள் தங்கி இருக்கும் வீட்டிற்கு அருகே நெல் சுப்பிரமணி என்பவருக்கு சுமார் 2 1/4 சென்ட் நத்தம் புறம்போக்கு பூமி உள்ளது. கடந்த மூன்று மாதங்களாகச் சுப்பிரமணி அந்த இடத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.

’ஊரை விட்டு வெளியே போ’.. விவசாயி வீட்டை இடித்து அராஜகமாக நடந்து கொண்ட அ.தி.மு.க Ex MLA!

அதற்கு இடையூறாக சிவாவின் வீடு இருப்பதாகக் கூறி வீட்டை காலி செய்யுமாறு சொல்லி வற்புறுத்தியுள்ளார். இதற்குச் சிவா காலி செய்ய முடியாது என உறுதியுடன் தெரிவித்துள்ளார். இதனால் இப்பிரச்சனை அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என் நடராஜிடம் சென்றுள்ளது.

இவர் சிவாவிடம், "உனது வீடு சம்பந்தமாக ஊர் கூட்டம் நடைபெறுகிறது. உடனே வா" என அழைத்துள்ளார். அதற்குச் சிவா வர மறுத்துள்ளார். பிறகு மீண்டும் செல்போனில் அழைத்து "நீ உடனே ஊரை விட்டு காலி செய்துவிட்டு "என மிரட்டி உள்ளார்.

’ஊரை விட்டு வெளியே போ’.. விவசாயி வீட்டை இடித்து அராஜகமாக நடந்து கொண்ட அ.தி.மு.க Ex MLA!

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென சிவாவின் வீட்டை இடித்துச் சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்து அவர் காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் மற்றும் காங்கேயம் நகர மன்ற தலைவர் சூரிய பிரகாஷ், வீட்டைச் சேதப்படுத்திய சுப்பிரமணி, தினேஷ் குமார், விஜயகுமார் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விவசாயி ஒருவரின் வீட்டை உடைத்துச் சேதப்படுத்தி வீட்டை காலி செய்து ஊரை விட்டுச் சென்று விடு என மிரட்டியது காங்கேயம் வட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories