தமிழ்நாடு

பள்ளிப் பிள்ளையைப் போலவே துள்ளித்துள்ளி பணியாற்றி வருகிறார் அமைச்சர் அன்பில் மகேஸ்: முதலமைச்சர் புகழாரம்!

பள்ளிப் பிள்ளையைப் போலவே துள்ளித்துள்ளி பணியாற்றி வருகிறார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பள்ளிப் பிள்ளையைப் போலவே துள்ளித்துள்ளி பணியாற்றி வருகிறார் அமைச்சர் அன்பில் மகேஸ்: முதலமைச்சர் புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நாட்டின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பராட்டு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார்.

பின்னர் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பள்ளிக் கல்வித் துறையைப் பொறுத்தவரையில் தினந்தோறும் மிகச் சிறந்த முன்னெடுப்புகளை எடுத்து வருவதன் மூலமாக எல்லா நாளும் முக்கியமான நாளாக அமைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த நாள் தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வி வரலாற்றில் ஒருமுக்கியமான நாளாக அமைந்து விட்டது. கொண்டாட்டத்துக்குரிய நாள். மிகுந்தமகிழ்ச்சியோடு நான் உங்களை எல்லாம் சந்திக்கவந்திருக்கிறேன்.

ஒரு காலத்தில் கல்வி என்பது அனைவருக்கும் எளிதில் கிடைக்கக் கூடியதாக இல்லை. எட்டாக்கனியாய் இருந்த கல்வி இன்று எல்லோருக்கும் கிட்டி இருக்கிறது என்றால் அதற்குப் பின்னால் நமது முன்னோர்கள் நடத்திய ஏராளமான போராட்டங்கள் தான் காரணம். நீதிக்கட்சி காலத்தில் இருந்து சமூகநீதியை வலியுறுத்தி வரும் சமூக சீர்திருத்தத் தலைவர்களால் தான் இந்த மாற்றத்தை நாம் உருவாக்க முடிந்தது.

அரசு பள்ளி - தனியார் பள்ளி என்பது நிர்வாக அமைப்பில் வேறுபாடு கொண்டதாக இருக்கலாம். அதேபோல் அரசுக் கல்லூரியும் - தனியார் கல்லூரிகளும் நிர்வாக அமைப்பில் வேறுபாடு கொண்டதாக இருக்கலாம். தரத்தில் அனைத்துக் கல்வி நிறுவனங்களும் ஒரே அளவுகோலுடன் இயங்க வேண்டும். இந்த நிறுவனங்கள் அனைவருக்கும் பொதுவான நிறுவனங்களாக அமைதல் வேண்டும். இத்தகைய சமச்சீர் நிலையை உருவாக்கி வருகிறோம்.

பள்ளிப் பிள்ளையைப் போலவே துள்ளித்துள்ளி பணியாற்றி வருகிறார் அமைச்சர் அன்பில் மகேஸ்: முதலமைச்சர் புகழாரம்!

நாட்டின் முதன்மைக் கல்வி நிறுவனங்களில் இதுவரை நம்முடைய அரசுப் பள்ளி மாணவர்கள் மிகக் குறைவான அளவிலேயே உயர்கல்விக்காகச் சென்றிருக்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கவேண்டும் என்பதே கல்வியைப் பொருத்தவரை தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு.

அதிலும் உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களின்எண்ணிக்கையை அதிகப்படுத்தவேண்டும் என்கிற நோக்கில் பல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது அரசு. ‘அனைவருக்கும் ஐ.ஐ.டி’ திட்டம் இதற்கெனக் கொண்டுவரப்பட்டதே.தமிழ்நாட்டின் எங்கோ கிராமத்தில் உள்ள ஓர் அரசுப்பள்ளி மாணவரால் ஏன் இதுவரை ஐ.ஐ.டி, என்.எல்.யூ , நிஃப்ட் - போன்ற நாட்டின் முதன்மையான உயர் கல்வி நிறுவனங்களுக்குச் செல்ல முடியாமல் இருந்தது என்றால், அதற்கென தனியே சமூகப் பொருளாதாரக் காரணங்கள் உள்ளன.

நம்முடைய பிள்ளைகளுக்கு நாட்டின் உயர் கல்வி நிறுவனங்கள் எவை, அவற்றில் நுழைய எப்படி விண்ணப்பிக்க வேண்டும், போட்டித் தேர்வுகளுக்கு படிக்கும் முறை என்ன இப்படி பல தகவல்கள் சென்று சேராமல் இருந்தன. இந்தப் பாதையை உருவாக்கி இருக்கிறோம். இன்றைக்கு 225 மாணவர்கள் நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு செல்லவிருக்கிறார்கள். பள்ளிக் கல்வித் துறையின் கடுமையான முயற்சிகளால் தான் இது சாத்தியமானது.

பள்ளிப் பிள்ளையைப் போலவே துள்ளித்துள்ளி பணியாற்றி வருகிறார் அமைச்சர் அன்பில் மகேஸ்: முதலமைச்சர் புகழாரம்!

பள்ளிக் கல்வித் துறையின் கடுமையான முயற்சிகளால் தான் இது சாத்தியமானது.பள்ளிப் பிள்ளையைப் போலவே துள்ளித்துள்ளி பணியாற்றி வருகிறார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.அவர் குழந்தையாக இருந்த காலத்தில் இருந்து பார்த்து வருகிறேன். என் கண் முன்னால் வளர்ந்த குழந்தை இன்று மாண்புமிகு அமைச்சர் என்று நான் அழைக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இந்தப் பள்ளிக் கல்வித் துறையில் அவர் ஆற்றி வரும் பணிகள் என்பவை, தலைமுறை தலைமுறைக்கு பயனுள்ள பணிகளாக அமைந்துள்ளன" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories