தமிழ்நாடு

அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை.. அமைதிப் பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

முத்தமிழறிஞர் கலைஞரின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை.. அமைதிப் பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முத்தமிழறிஞர் கலைஞரின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பின்னர் அங்கிருந்து முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த அமைதிப் பேரணியில், நாடாளுன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான கழக தொண்டர்கள் பங்கேற்றனர்.

இதனையடுத்து மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து சி.ஐ.டி காலனியில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அங்கு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் கோபாலபுரத்தில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வுகளில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், தி.மு.க பொருளாளரும், அமைச்சருமான துரை முருகன், தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ, தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி., தி.மு.க எம்.பி.க்கள் தயாநிதி மாறன், உள்ளிட்டோரும் கலைஞர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

banner

Related Stories

Related Stories