தி.மு.க

“கலைஞருக்கு ஈடு கலைஞரே..!” : முத்தமிழறிஞர் கலைஞர் பற்றி பெரியார் முதல் பலரும் உதிர்த்த முத்துகள் !

வியத்தகு சிறப்புகள் வாய்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் பற்றி பெரியார் முதல் பலரும் சொன்னவை இங்கே...

“கலைஞருக்கு ஈடு கலைஞரே..!” : முத்தமிழறிஞர் கலைஞர் பற்றி பெரியார் முதல் பலரும் உதிர்த்த முத்துகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

போராட்டங்களையே வாழ்க்கையாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த கலைஞரின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று. வியத்தகு சிறப்புகள் வாய்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் பற்றி பெரியார் முதல் பலரும் சொன்னவை இங்கே...

“கலைஞர் நமக்கு கிடைத்தற்கரிய வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும். ஒரு பகுத்தறிவாளராகவும், ஆட்சிக் கலையில் அரிய ராஜதந்திரியாகவும் நடந்துவருவதன் மூலம் தமிழர்களுக்குப் புது வாழ்வு தருபவராகிறார் நமது கலைஞர்.”

- பெரியார்

2. கருணாநிதிக்கு ஈடு கருணாநிதிதான்!

“என்னை முழுவதும் அறிந்தவர்கள்தான் கழகத்திலே இருக்கிறார்கள். அதிலே முற்றிலும் அறிந்தவர் என்று சொல்லத் தக்கவர்களிலே கருணாநிதிக்கு மிகச்சிறந்த இடம் உண்டு. கருணாநிதிக்கு ஈடு கருணாநிதிதான்!”

- பேரறிஞர் அண்ணா

3. “சிலருக்கு பதவி கிடைத்தால் நாடு குட்டிசுவராகிவிடுகிறது. நமது கலைஞருக்கு பதவி கிடைத்தாலோ நாடு உயர்கிறது.”

- எம்.ஜி.ஆர்

4. “என்னதான் கலைஞரை நீங்கள் ஆத்திரமாகத் திட்டுங்கள். நேருக்கு நேர் சந்தித்தால் எந்தப் பெரிய மனிதரும் அவரிடம் சரணாகதி அடைந்துவிடுவார்கள். இந்திய அரசியலில் அந்தக் கவர்ச்சி உள்ளவர்களில் கலைஞரும் ஒருவர்.”

- கவியரசர் கண்ணதாசன்

4. சமூக நீதி தலைவர்!

"இந்திய அரசியலில் மிக உயர்ந்த தலைவர்களில் ஒருவர் கலைஞர். சமூக நீதிக்கான பயணத்தில் எனக்கு உறுதியான கூட்டாளியாக அவர் திகழ்ந்தார்"

- பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரையை கழகம் இடம் பெற்றிருந்த கூட்டணி ஆட்சி மூலம் அமல்படுத்திய முன்னாள் பிரதமர் வி.பி.சிங்.

5. கலைஞர் ஆற்றிய பங்களிப்புகள் இணையற்றது!

திராவிட அரசியலிலும், கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதிலும் கலைஞர் ஆற்றிய பங்களிப்புகள் இணையற்றது. அவரது நினைவு நாளில் எனது புகழஞ்சலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். கலைஞரின் வாழ்வும் நினைவும் இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்க அனைவரையும் ஊக்குவிக்கும்.

- கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ட்வீட்!

6. “நான் நடிக்க வந்த காலத்தில் கலைஞர் வசனத்தை அழகாகப் பேசிகாட்டுவதுதான் நடிப்பிற்கான கேட் பாஸ்.”

- கமல்ஹாசன்

7. “கண்ணனாக இருந்து சொல்லெறிந்தவரும், காண்டீபனாக இருந்து வில்லெறிந்தவரும் கலைஞர்தான்!”

- கவிப்பேரரசு வைரமுத்து.

banner

Related Stories

Related Stories