தமிழ்நாடு

“கலைஞர்னாலே கின்னஸ் சாதனை தான்; சமூகநீதி மாரத்தானாக அமைந்த கலைஞர் நூற்றாண்டு மாரத்தான்”: முதலமைச்சர் உரை!

கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் போட்டியில், 73,206 பேர் கலந்து கொண்ட இந்தப் போட்டி கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது. கலைஞர்னாலே கின்னஸ் சாதனை தான்.

“கலைஞர்னாலே கின்னஸ் சாதனை தான்; சமூகநீதி மாரத்தானாக அமைந்த கலைஞர் நூற்றாண்டு மாரத்தான்”: முதலமைச்சர் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

73,206 நபர்கள் கலந்து கொண்டு கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் 2023 போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று (6.8.2023) சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், பரிசுத்தொகையினை வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய முழு உரை பின்வருமாறு :- “செயல்படுவதிலே ஒரு 'மாரத்தான்' அமைச்சராக விளங்கிக் கொண்டிருக்கக்கூடியவர் நம்முடைய மா.சு அவர்கள். நான் மட்டுமல்ல, எல்லோராலும் அவர் மா.சு மா.சு என்று அழைப்பதைவிட மாரத்தான், மாரத்தான் என்று தான் அதிகம் அழைக்க தொடங்கி இருக்கிறார்கள்.

அவரோட அப்பா பெயர் மாணிக்கம். அதனால் அவர் மா.சுப்பிரமணியன் என்று அழைக்கப்பட்டு கொண்டிருந்தாலும் – அவரை இப்போது எல்லாம் 'மாரத்தான்' சுப்பிரமணியன் என்று தான் அழைக்கப்பட்டு கொண்டிருக்கிறார். அதுவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது.

“கலைஞர்னாலே கின்னஸ் சாதனை தான்; சமூகநீதி மாரத்தானாக அமைந்த கலைஞர் நூற்றாண்டு மாரத்தான்”: முதலமைச்சர் உரை!

எந்த விழாவை நடத்தினாலும், அது கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, இதுபோன்ற பொதுவாக இருக்கக்கூடிய மக்கள் பங்கேற்கக்கூடிய விழாவாக இருந்தாலும், அதில் தனக்கென்று தனி முத்திரை பதிக்கக்கூடிய ஒருவர் மா.சு அவர்கள். அவர் நிகழ்ச்சியை பார்த்து யாரும் காப்பியடிக்க முடியாது. அந்த அளவிற்கு ஒரு சிறப்போடு எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதை நடத்துவார்.

அதுமட்டுமல்ல, அவரைப் போல யாரும் ஒட முடியாது. அது நானாக இருந்தாலும் சரி, இங்கே இருக்கக்கூடிய விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தாலும் சரி, இங்கே இருக்கக்கூடிய பொன்முடி, சேகர் பாபு, மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனாக இருந்தாலும் சரி, இப்படி ஒட வேண்டும் என்று சொன்னாலே, வியர்த்துவிடும் எங்களுக்கு.

அந்த அளவிற்கு நம்முடைய மா.சு அவர்கள் ஒடக்கூடியவர். அவர் உள்ளூரில் மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கக்கூடிய மாநிலங்கள் மட்டுமல்ல, உலகெங்கும் பல நாடுகளுக்கு சென்று ஓடியுள்ளார். அந்த பெருமையும் அவருக்கு உண்டு. ஆட்டநாயகன் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம், இவர் ஓட்டநாயகன். 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் நான் மேயராக நின்று வெற்றிபெற்று, அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பணியாற்றினேன். அதற்குப் பிறகு 2001-ஆம் ஆண்டும் நடைபெற்ற மேயர் தேர்தலிலும் வெற்றி பெற்று மேயராக பொறுப்பேற்று பணியாற்றினேன். அதற்குப்பிறகு 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சித் தேர்தல்ல நம்முடைய மா.சுப்பிரமணியன் அவர்கள் வெற்றி பெற்று மேயராக பொறுப்பேற்று பணியாற்றினார்.

“கலைஞர்னாலே கின்னஸ் சாதனை தான்; சமூகநீதி மாரத்தானாக அமைந்த கலைஞர் நூற்றாண்டு மாரத்தான்”: முதலமைச்சர் உரை!

நான் மேயராக இருந்தபோது எந்தளவிற்கு பாராட்டை பெற்றேனோ, அதுவும் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களிடத்திலே எந்த அளவிற்கு பாராட்டை நான் பெற்றேனோ, இன்னும் சொல்ல வேண்டுமென்றால், அதைவிட அதிகமாக பாராட்டை பெற்றிருக்கக்கூடியவர் நம்முடைய மா.சு. அவர்கள். தலைவர் கலைஞரிடத்திலே நல்ல பெயர் வாங்குவது என்பது, சாதாரண விஷயமல்ல. ஆனால் மா.சு அவர்கள் நல்ல பெயரை கலைஞர் இடத்திலும் பெற்றவர்.

அதனுடைய தொடர்ச்சியாகத்தான் இன்றைக்கு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் என்ற பெரும் பொறுப்பை எடுத்துக் கொண்டு மிக சுறுசுறுப்பாக அவர் பணியாற்றிக் கொண்டிருப்பதை இந்த நாடு நன்றாக உணர்ந்து கொண்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாக நாம் ஆட்சிக்கு வந்தபோது எப்படிப்பட்ட நிலையில் நாம் பொறுப்பேற்றோம் என்பது உங்களுக்கு தெரியும். கொரோனா என்ற ஒரு கொடிய நோயினால் இந்தியா மட்டுமல்ல, உலகமே சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் தான் தமிழ்நாட்டில் தேர்தல் நடந்து நாம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தோம். அந்த கொரோனாவை எப்படி கட்டுப்படுத்தினோம் என்பது உங்களுக்கு தெரியும்.

“கலைஞர்னாலே கின்னஸ் சாதனை தான்; சமூகநீதி மாரத்தானாக அமைந்த கலைஞர் நூற்றாண்டு மாரத்தான்”: முதலமைச்சர் உரை!

அதிலே முதலமைச்சராக பொறுப்பேற்ற நான் மட்டுமல்ல, அமைச்சர்களாக இருந்தவர்கள் மட்டுமல்ல, இன்னும் சொல்லப்போனால் அனைத்து அமைச்சர்களும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்களாக மாறினார்கள். அதேபோல, அரசு அதிகாரிகள், மாநகராட்சி பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், என்று எல்லா அதிகாரிகளும், பணியாளர்களும் ஒற்றுமையாக இணைந்து ஒன்றுபட்டு கொரோனாவை ஒழிக்கின்ற பணியிலே, தடுக்கின்ற பணியிலே ஈடுபட்டது உங்களுக்கு எல்லாம் நன்றாக தெரியும். அப்பணியிலே சிறப்பிற்குரிய இடத்தை பெற்றிருக்கிறார் நம்முடைய மா.சு அவர்கள்.

அதனைத் தொடர்ந்து, இன்றைக்கு

* மக்களைத் தேடி மருத்துவம்

* இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48

* கலைஞரின் வருமுன் காப்போம் முகாம்கள்

* பச்சிளம் குழந்தைகளுக்கான அவசர ஊர்திகள்

* மனநல முகாம்கள்

* இவை எல்லாத்துக்கும் மேலாக, கிண்டியில் இருக்கக்கூடிய கலைஞர் நூற்றாண்டு நினைவாக உயர்சிறப்பு மருத்துவமனை. இதுவரை அரசினுடைய சாதனையில் இடம்பெறக்கூடிய வகையில் ஒன்று இருக்கிறது என்றால் பதினைந்தே மாதத்தில் அந்த மருத்துவமனையை கட்டி ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் அந்த மருத்துவமனை இன்றைக்கு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

“கலைஞர்னாலே கின்னஸ் சாதனை தான்; சமூகநீதி மாரத்தானாக அமைந்த கலைஞர் நூற்றாண்டு மாரத்தான்”: முதலமைச்சர் உரை!

இதற்கிடையிலே தான் இந்த மாரத்தான் சாதனையையும், நம்முடைய மா.சு அவர்கள் நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள். தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை மாரத்தான் போட்டியாக அவர் கொண்டாடி காட்டியிருக்கிறார். அவர் மூன்றாண்டு காலமாக இந்த மாரத்தான் போட்டியை தொடர்ந்து நடத்தி வருகிறார்.

2020 ஆம் ஆண்டு கோவிட் பெருந்தொற்று காலம் என்பதால், கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டிகளை மெய்நிகர் போட்டியாக நடத்தினார். அந்தச் சூழ்நிலையிலும், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவுசெய்தார்கள். பதிவுக் கட்டணமாக கிடைத்த 23 லட்சம் ரூபாயை அரசிடம் பேரிடர் நிவாரண நிதியாக வழங்கினார்.

2021-ஆம் ஆண்டு நடந்த மாரத்தான் போட்டியில், பதிவுக் கட்டணமாக கிடைத்த 56 லட்சம் ரூபாயை கொரோனா பேரிடர் நிவாரண நிதியாக என்னிடம் அன்றைக்கு வழங்கினார். கடந்த ஆண்டு நடைபெற்ற மாரத்தானில் 43 ஆயிரத்து 231 பேர் பங்கேற்று ஓடியிருக்கிறார்கள். இது ஆசிய சாதனையாக அமைந்தது. அதற்கான சான்றிதழ்களையும் என்னிடம் வழங்கினார். அந்தப் போட்டிகளில் கிடைத்த 1 கோடியே 22 லட்சம் ரூபாயை அரசிடம் ஒப்படைத்தார்.

அந்தத் தொகை, ‘நமக்கு நாமே’ திட்டத்தின் மூலமா, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. வெளியூர்களிலிருந்து, சென்னை குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரக்கூடிய மக்கள் தங்குவதற்காக கட்டடம் கட்ட பயன்படுத்த அந்த நிதி சேர்க்கப்பட்டிருக்கிறது.

“கலைஞர்னாலே கின்னஸ் சாதனை தான்; சமூகநீதி மாரத்தானாக அமைந்த கலைஞர் நூற்றாண்டு மாரத்தான்”: முதலமைச்சர் உரை!

நான் குறிப்பிட்டு காட்டியது போல, இந்த ஆண்டு, கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் போட்டியில், 73 ஆயிரத்து 206 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்தப் போட்டி கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது. கலைஞர்னாலே கின்னஸ் சாதனை தான்.

இந்த மாரத்தான் போட்டியில் 50 ஆயிரத்து 629 ஆண்களும், 21 ஆயிரத்து 514 பெண்களும் பங்கேற்று ஓடியிருக்கிறார்கள். உலகத்திலேயே முதன்முறையாக, திருநங்கைகள், திருநம்பிகள் 1063 பேர் பங்கேற்று ஓடி, ஒரு மிகப் பெரிய சாதனையை படைத்திருக்கிறீர்கள்.

அதைத்தான் நம்முடைய மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி அவர்கள், உங்களை எல்லாம் ஊக்குவிக்க அவருடைய சார்பில் திமுக இளைஞரணி சார்பிலே மாரத்தான் போட்டியிலே பங்கேடுத்த ஒவ்வொரு திருநங்கைகள், திருநம்பிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்து, அதையும் இன்றைக்கு வழங்கியிருக்கிறார்.

“கலைஞர்னாலே கின்னஸ் சாதனை தான்; சமூகநீதி மாரத்தானாக அமைந்த கலைஞர் நூற்றாண்டு மாரத்தான்”: முதலமைச்சர் உரை!

இந்த மாரத்தானில், அரசு உயர் அதிகாரிகள், அதாவது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருக்கிறார்கள். அதேபோல் கடலோர காவல்படை, இராணுவ வீர்கள் 1500 பேரும் பங்கேற்று ஓடியிருக்கிறார்கள்.

பல்வேறு வெளிநாட்டு தூதர்கள் வருகை தந்திருக்கிறார்கள். எனவே இது சாதாரண மாரத்தான் அல்ல, இது சமூகநீதி மாரத்தானாக அமைந்திருக்கிறது. நாம் எதைச் செய்தாலும், அதிலே ஒரு பெரிய சிறப்பு இருக்கும், பெருமை இருக்கும், பூரிப்பு இருக்கும், மகிழ்ச்சி இருக்கும், எழுச்சி இருக்கும், எல்லாவற்றையும் தாண்டி புதுமையும் இருக்கும், புரட்சியும் இருக்கும், அதற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.

கலைஞர் நூற்றாண்டு மாரத்தான், இதுவரை உலகத்திலே எங்கும் நடைபெறாத வகையில், சிறப்பா நடைபெற்று இருக்கிறது. இந்த ஆண்டுக்கான மாரத்தானில், 3 கோடியே 42 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வசூலாகி இருக்கிறது. அதையும் என்னிடம் திரு. மா.சு அவர்கள் வழங்கியிருக்கிறார்.

“கலைஞர்னாலே கின்னஸ் சாதனை தான்; சமூகநீதி மாரத்தானாக அமைந்த கலைஞர் நூற்றாண்டு மாரத்தான்”: முதலமைச்சர் உரை!

அது எதற்கு பயன்பெறக் போகிறது என்பதை அவரே சொல்லியிருக்கிறார். இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான கட்டடம் ஒன்று கட்டுவதற்கு இந்தத் தொகை பயன்படப் போகிறது என்று சொல்லியிருக்கிறார்.

தலைவர் கலைஞர் அவர்களோட நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள தொடங்கும்போது, தனது வாழ்நாளில் அனைத்துப் பெருமைகளையும் பார்த்துவிட்டார் கலைஞர் அவர்கள், எனவே இந்த விழா மக்களுக்கு பயன்பெறக்கூடிய விழாவாக நடத்தப்பட வேண்டும் என்று நான் மா.சு அவர்களிடத்திலே எடுத்து சொல்லியிருந்தேன். அப்படியான ஒரு பயனுள்ள நிகழ்ச்சியாக இது அமைந்திருப்பது உள்ளபடியே எனக்கு மகிழச்சி அளிக்கிறது.

மாரத்தான் ஓட்டம் என்பது உடல் உறுதிக்கு மட்டுமல்ல, உள்ள உறுதிக்கும் அடித்தளமாக அமையும். நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். கூட்டுச் செயல்பாட்டை வலியுறுத்தும். இப்படியான போட்டிகள் அதிகம் நடத்தப்பட வேண்டும்.

“கலைஞர்னாலே கின்னஸ் சாதனை தான்; சமூகநீதி மாரத்தானாக அமைந்த கலைஞர் நூற்றாண்டு மாரத்தான்”: முதலமைச்சர் உரை!

தம்பி உதயநிதி விளையாட்டுத் துறை அமைச்சராக, ஆனபிறகு, விளையாட்டுத் துறை மேலும் பல மடங்கு எழுச்சி பெற்றிருக்கிறது. உலகப் புகழ் பெற்ற போட்டிகள் நடக்கும் மாநிலமாக, ஏற்கனவே செஸ் போட்டியை நடத்தினோம், இப்போது ஹாக்கி போட்டியை நடத்தி கொண்டிருக்கிறோம். இதுபோன்ற பல போட்டிகளை நடத்துவதற்கான முயற்சிகளை அரசு எடுத்துக் கொண்டு வருகிறது. இது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தி கொண்டிருக்கிறது. ஏராளமான புதிய விளையாட்டு வீரர்களை உருவாக்கவும் இது பயன்படுகிறது. அனைத்திலும் தமிழ்நாடு வளர வேண்டும் என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எண்ணினார். அந்த எண்ணம் இன்றைக்கு ஈடேறிக்கொண்டு இருக்கிறது.

நம்முடைய மா.சு. அவர்கள் இதிலே ஆர்வத்தோடு செயல்பட்டு வருகிறார். அவருக்கு பாராட்டுதல்களையும், நன்றியையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொண்டு, இதற்கு துணை புரிந்திருக்கக்கூடிய சென்னை தெற்கு மாவட்டக் கழகத்தின் அனைத்துப் பொறுப்பாளர்களுக்கும் என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாரத்தானில் பங்கெடுத்து ஓடிய அனைவருக்கும் எனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து விடைபெறுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories