தமிழ்நாடு

கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் 2023: கின்னஸ் சாதனை.. 9 பிரிவுகளில் ரூ.10 லட்சத்தில் 27 பரிசுகள்!

கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் 2023-ல் வெற்றிபெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுத் தொகை வழங்கினார்.

கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் 2023: கின்னஸ் சாதனை.. 9 பிரிவுகளில் ரூ.10 லட்சத்தில் 27 பரிசுகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு பன்னாட்டு மாரத்தான் போட்டி சென்னையில் இன்று நடைபெற்றது. அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களின் ஏற்பாட்டில் கின்னஸ் சாதனை படைக்கும் நோக்கில் "கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் - 2023" சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவிடத்தில் இருந்து காலை 4 மணிக்கு தொடங்கப்பட்டது.

இந்த மாரத்தான் போட்டிகளில் சுமார் 73,206 பேர் கலந்துகொண்டனர். மெரினாவில் கலைஞர் நினைவிடத்தில் இருந்து 21 கி.மீ., 10 கி.மீ., 5 கி.மீ., மாரத்தான் போட்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 4.2 கி.மீ., போட்டியை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் 2023: கின்னஸ் சாதனை.. 9 பிரிவுகளில் ரூ.10 லட்சத்தில் 27 பரிசுகள்!

மாரத்தான் வீரர்கள் பயணிக்கும் சாலைகளில் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக திருவண்ணாமலை பெரிய மேளம், அலங்காநல்லூர் சமர்ப்பறையாட்டம், ராமநாதபுரம் சிம்லா மேளம், காரியாபட்டி நையாண்டி மேளம், பள்ளிப்பட்டி ஆதி மேளம், கருப்பணம்பட்டி உருமி மேளம், ஈரோடு பம்பை மேளம், அந்தியூர் கட்ட மேளம், வாடிப்பட்டி தப்பாட்டம், கோவை துடும்பாட்டம், சங்ககிரி பெரும் முரசு, திருப்பூர் சமாப், சேலம் பெரும் முரசு தப்பட்டை, திண்டிவனம் நையாண்டி மேளம் உள்ளிட்டவை இசைக்கப்பட்டன.

இந்த மாரத்தான் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 10-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் பங்கேற்றனர். இந்த போட்டி நிறைவடைந்து வெற்றி பெற்ற முதல் மூன்று பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுத் தொகை வழங்கினார். பெண்கள், ஆண்கள் மட்டுமின்றி 1000-க்கும் மேற்பட்ட திருநங்கைகள், திருநம்பிகளும் பங்கேற்று சாதனை படைத்தனர்.

கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் 2023: கின்னஸ் சாதனை.. 9 பிரிவுகளில் ரூ.10 லட்சத்தில் 27 பரிசுகள்!

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு 9 பிரிவுகளில் ஓவ்வொரு பிரிவிலும் 3 வெற்றியாளர்கள் என ரூ.ரு.10.7 லட்சத்திற்கான 27 பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. 42.2 கி.மீ., மாரத்தானில் வெற்றிபெற்றவருக்கு முதல் பரிசு ரூ.1 லட்சமும், 2-வது பரிசாக ரூ.50 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.25 ஆயிரமும் முதலமைச்சர் வழங்கினார். தொடர்ந்து 21 கி.மீ., மாரத்தான் மகளிர் பிரிவில் கென்ய நாட்டை சேர்ந்த வீராங்கனைக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இவ்வாறாக 9 பிரிவுகளில் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

மேலும் திருநங்கையர் பிரிவில் முதலிடம் பிடித்த சசிகலா, இரண்டாம் இடத்தை பிடித்த யாழினி, மூன்றாம் இடத்தை பிடித்த பூவிழி ஆகியோருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுத்தொகை வழங்கினார். தொடர்ந்து விருந்தினராக வருகை தந்திருந்த வெளிநாட்டவர்களுக்கு நினைவு பரிசை வழங்கினார்.

banner

Related Stories

Related Stories