தமிழ்நாடு

பத்ரி சேஷாத்ரி கைது: “அடிப்படையில் வலதுசாரி சிந்தனை என்றால் என்ன?” - பத்திரிகையாளர் சுசித்ரா மகேஸ்வரன்!

கருத்துரிமை என்றால் என்ன என்பதை இங்கு சரியாக விளங்கிக் கொள்ள வேண்டுமெனில் வலதுசாரி கருத்து, வலதுசாரி சிந்தனை என்றால் என்ன என்பதை நுட்பமாக புரிந்து கொள்வது அவசியம்.

பத்ரி சேஷாத்ரி கைது: “அடிப்படையில் வலதுசாரி சிந்தனை என்றால் என்ன?” - பத்திரிகையாளர் சுசித்ரா மகேஸ்வரன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

வலதுசாரி பத்ரி சேஷாத்ரி கைது குறித்து பலவாரியான கருத்துகள் எதிரொலிப்பதால், "இது கருத்துரிமைக்கு எதிரானது தமிழக அரசுக்கு கண்டனம்" என்கிற கூக்குரல் அங்கங்கே எட்டிப் பார்ப்பதால் இது பற்றி எழுத விழைகிறேன்.

கருத்துரிமை என்றால் என்ன என்பதை இங்கு சரியாக விளங்கிக் கொள்ள வேண்டுமெனில் வலதுசாரி கருத்து, வலதுசாரி சிந்தனை என்றால் என்ன என்பதை நுட்பமாக புரிந்து கொள்வது அவசியம்.

சமீப காலமாக வலதுசாரி என்கிற பதாகையுடன் செய்தி சேனல்களில் மணிப்பூரில் நிகழ்ந்துவரும் பயங்கரவாதம் குறித்து குக்கி கிறிஸ்தவ பழங்குடி மக்களுக்கு எதிரான கருத்து வந்து கொண்டே இருப்பதால் அதை ஒட்டியும் இதனை புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

பத்ரி சேஷாத்ரி கைது: “அடிப்படையில் வலதுசாரி சிந்தனை என்றால் என்ன?” - பத்திரிகையாளர் சுசித்ரா மகேஸ்வரன்!

அடிப்படையில் வலதுசாரி சிந்தனை என்றால் என்ன?

1. இஸ்லாமியர், கிறிஸ்தவர் உள்ளிட்ட சிறுபான்மையினர் நாட்டை விட்டு துரத்தி அடிக்கப்பட வேண்டியவர்கள் என்கிற கருத்து.

2. சாதி அமைப்பை புறந்தள்ளும், அதற்கு எதிராக களமாடும் பட்டியலின மற்றும் பழங்குடியினரை அடிமைகளாக்க துடிக்கும் கருத்து.

3. இந்துக்கள் என்று பட்டை கட்டிவிட்டு இந்தியாவின் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை தனக்கான foot soldiersஆக மடைமாற்றத் துடிக்கும் கருத்து.

4. இருப்பவர் இல்லாதவர் என்கிற இரட்டை நிலை ஒழிந்து எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்கிற இடதுசாரி சிந்தனையை குழி தோண்டி புதைக்க நினைக்கும் கருத்து.

5. ஆணும் பெண்ணும் சமம் என்பது நம்முடைய பாரத கலாச்சாரத்துக்கு கேடு விளைவிக்கும் சிந்தனை என்று கதறும் கருத்து.

6. பன்முக பண்பாட்டு அடையாளங்கள் கொண்ட மக்கள் கூட்டாக இணைந்து ஒற்றுமையாக வாழும் சமூகத்தில் இன வெறியை தூண்டி பிரித்தாளும் சூழ்ச்சியை முன்னிறுத்தும் கருத்து.

7. அறிவியல் பார்வையை மறுக்கும் கருத்து.

8. பகுத்தறிவை எதிர்க்கும் கருத்து.

9. எல்லோரும் சமம் என்கின்ற நிலைப்பாட்டை எதிர்க்கும் கருத்து.

பத்ரி சேஷாத்ரி கைது: “அடிப்படையில் வலதுசாரி சிந்தனை என்றால் என்ன?” - பத்திரிகையாளர் சுசித்ரா மகேஸ்வரன்!

10. வர்ணாசிரம தர்மத்துக்கு ஜே ஜே சொல்லும் கருத்து.

11. அதிகாரப் பகிர்வை பறைசாற்றும் ஜனநாயக முறையை தவிடு பொடி ஆக்கும் கருத்து.

12. ஆண்டான் அடிமைத்தனத்தை தூக்கி பிடிக்கும் கருத்து.

13. தனியார் மையத்தை சிலாகிக்கும் கருத்து.

14. சாதி வேறுபாடும் குலப்பெருமையும் அழிந்தொழிய வேண்டும் என்கிற அம்பேத்கரிய சித்தாந்தத்துக்கு எதிரான கருத்து.

15. சுயமரியாதை தமிழருக்கும், சுயாட்சி தமிழ்நாட்டுக்கும் அவசியம் என்று போர் குரல் எழுப்பிய பெரியாரிய கருத்தியலுக்கு எதிரான கருத்து.

16. பிரம்மனின் தலையிலிருந்து உதித்தவர்களாக தங்களை மார்தட்டிக் கொள்பவர்களை எதிர்த்து கேள்வி கேட்கும் அதிகாரமோ, கருத்து சுதந்திரமோ எவருக்கும் இல்லை என்னும் கருத்து.

17. தன்னை தவிர மற்றவரின் கருத்துரிமையில் துளியும் நம்பிக்கை அற்ற கருத்து.

18. ஒட்டுமொத்தத்தில், தான் தெருவில் இறங்கி அடிதடி வன்முறையில் இறங்குவதற்கு பதிலாக தன்னுடைய கருத்து வழியாக அடியாட்களை உருவாக்குவதே தன்னுடைய முழு நேர சித்தாந்தமாகக் கொண்டிருக்கும் கருத்துதான் வலதுசாரி சிந்தனை.

- பத்திரிகையாளர் சுசித்ரா மகேஸ்வரன்

banner

Related Stories

Related Stories