தமிழ்நாடு

”இயக்கத்தின் இதயமாம் இளைஞரணிக்கு இன்று 44 வயது”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

இன்று 44ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் தி.மு.க இளைஞர் அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

”இயக்கத்தின் இதயமாம் இளைஞரணிக்கு இன்று 44 வயது”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1980-ம் ஆண்டு மதுரை 'ஜான்சி ராணி பூங்கா'வில் நடைபெற்ற பிரம்மாண்ட மாநாட்டில், தி.மு.க. இளைஞர் அணியை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது. பின்னர் 1982-ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு விழாவில் தலைவர் மு.க.ஸ்டாலின் இளைஞர் அணியின் மாநில அமைப்பாளராக முத்தமிழறிஞர் கலைஞர் அறிவித்தார்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் தலைவர் அவர்கள் பம்பரமாய் சுற்றிச்சுழன்ற உழைப்பும் பங்களிப்பும் விரைவிலேயே அவரை இளைஞர் அணியின் செயலாளர் எனும் பொறுப்பில் அமர்த்தியது. மு.க.ஸ்டாலின் அவர்களை அடுத்து வெள்ளக்கோவில் சாமிநாதன் அவர்கள் இளைஞர் அணிச் செயலாளராக சிறப்புற செயல்பட்டார். பின்னர் 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் கழக இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றார். இதையடுத்து தற்போது வரை கழகத்தின் இளைஞரணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

”இயக்கத்தின் இதயமாம் இளைஞரணிக்கு இன்று 44 வயது”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

இந்நிலையில் 44-ஆவது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் இளைஞரணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இயக்கத்தின் இதயமாம் இளைஞரணிக்கு இன்று 44 வயது. 44-ஆவது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினிக்கும் புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்கும் இளைஞரணியின் ஆற்றல்மிகு இளைஞர்கள் அனைவர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழகத்தின் எழுச்சிக்கும் உணர்ச்சிக்கும் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் தோன்றிய காலம் முதல் உறுதுணையாக இருந்து வருவது இளைஞரணியாகும். அதே பங்களிப்பை வருங்காலங்களிலும் வழங்க வேண்டும் எனக்கேட்டுக் கொள்கிறேன்.

உதயநிதி பொறுப்பேற்ற பின் நடத்திய திராவிட மாடல் பாசறைக் கூட்டங்கள் நமது கொள்கையை ஊட்டும் வகுப்புகளாக அமைந்திருந்தன. இயக்கத்தை நோக்கி வரும் இளைஞர்களை ஈர்க்கும் கூட்டங்களாக மட்டுமல்ல, கொள்கை எதிரிகளுக்குப் பதிலளிக்கும் கூட்டங்களாகவும் அமைந்திருந்தன. இத்தகைய பாசறைக்கூட்டங்களை வருங்காலத்திலும் தொடரக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியாவைக் காக்கும் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இளைஞரணியினரின் பங்களிப்பை நான் அதிகம் எதிர்பார்க்கிறேன். கழக அரசின் ஈராண்டு சாதனைகளை மக்கள் மனதில் பதியும் வகையில் பரப்புரை செய்வீர்கள் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில் தேர்தல் பணி என்பது திட்டமிட்டுச் செய்ய வேண்டியது ஆகும். அந்த தேர்தல் பணிகளை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை இளைஞரணிப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் அனைவர்க்கும் கற்றுத்தர வேண்டும். இதற்கான பயிற்சியை மாநாடு கூட்டி அனைத்து இளைஞரணிப் பொறுப்பாளர்களுக்கும் வழங்குமாறு இளைஞரணிச் செயலாளரைக் கேட்டுக் கொள்கிறேன்.

எந்த நம்பிக்கையோடும் எதிர்பார்ப்புடனும் இளைஞரணியைத் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களும் இனமானப் பேராசிரியர் அவர்களும் தொடக்கி வைத்தார்களோ அதே எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் நான் இருக்கிறேன். உங்களால் முடியும்! உங்களால் மட்டுமே முடியும். வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories