தமிழ்நாடு

” 5 நாட்கள் தக்காளி வாங்கவில்லை என்றால் தானாக விலை குறைந்து விடும்”.. எச்.ராஜா சொல்லும் பலே ஐடியா!

5 நாட்களுக்குத் தக்காளியைப் பொதுமக்கள் வாங்காமல் இருந்தால் தக்காளி விலை குறைந்துவிடும் என பா.ஜ.க நிர்வாகி எச்.ராஜா கூறியுள்ளது பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

” 5 நாட்கள் தக்காளி வாங்கவில்லை என்றால் தானாக விலை குறைந்து விடும்”.. எச்.ராஜா சொல்லும் பலே ஐடியா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பருவமழை காரணமாக இந்தியா முழுவதும் தக்காளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சில மாநிலங்களில் ரூ.200க்குக் கூட தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

இப்படி கடுமையாகத் தக்காளி விலை உயர்ந்துள்ளது ஏழை, எளிய மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. மேலும் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத ஒன்றிய அரசைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

” 5 நாட்கள் தக்காளி வாங்கவில்லை என்றால் தானாக விலை குறைந்து விடும்”.. எச்.ராஜா சொல்லும் பலே ஐடியா!

தக்காளி விலையைத் தொடர்ந்து வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்த இது வரை ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதற்கிடையில் பா.ஜ.க நிர்வாகிகள் விலை உயர்வு குறித்து அபத்தமான கருத்துக்களைக் கூறி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு அசாம் மாநில பா.ஜ.க முதலமைச்சர், காய்கறிகளின் விலை உயர்வுக்கு இஸ்லாமியர்கள்தான் காரணம் என பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

” 5 நாட்கள் தக்காளி வாங்கவில்லை என்றால் தானாக விலை குறைந்து விடும்”.. எச்.ராஜா சொல்லும் பலே ஐடியா!

தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, "பொதுமக்கள் 4,5 நாட்களுக்குத் தக்காளி வாங்கப் போகவில்லை என்றால் தானாகவே தக்காளி விலை குறைந்து விடும்" என தெரிவித்துள்ளார். இவரின் இந்த ஆலோசனையைப் பார்த்து குடும்பத் தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இவர் எப்படி ஒரு கட்சியில் நிர்வாகியாக இருக்கிறார்?. பொதுமக்களின் கஷ்டங்கள் கூட இவருக்குத் தெரியாமல் ஏதாவது உளறுவதா? என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories