தமிழ்நாடு

”தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை”.. அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் மிரட்டிய அ.தி.மு.க நிர்வாகி!

திருவள்ளூரில் நெடுஞ்சாலை ஆய்வாளரைப் பணி செய்யவிடாமல் அ.தி.மு.க நிர்வாகி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

”தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை”.. அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் மிரட்டிய அ.தி.மு.க நிர்வாகி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதி முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை உள்ள நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யும் பணி கடந்த சில மாதங்களாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திருவள்ளூர் மணவாள நகர் பகுதி தனியார் திருமண மண்டபம் எதிரே சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது இடையூறாக உள்ள டிரான்ஸ்பார்மரை மாற்றி வேறு இடத்தில் அமைக்கப்பட்டது.

”தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை”.. அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் மிரட்டிய அ.தி.மு.க நிர்வாகி!

இந்தப் பணி நெடுஞ்சாலை ஆய்வாளர் சீனிவாசன் மேற்பார்வையில் நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த கடம்பத்தூர் ஒன்றிய முன்னாள் அ.தி.மு.க செயலாளர் சந்திரசேகர் என்பவர் தனது இடத்தின் அருகே டிரான்ஸ்பார்மரை வைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும், நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் ஸ்ரீனிவாசனைப் பார்த்து, "தொலைச்சிடுவேன் உன்னை. இராவும், பகலும் கல் எடுத்து அடிப்பார்கள்.எங்க போய் நீ என்ன சொன்னாலும் என்ன ஒன்றும் செய்ய முடியாது" என மிரட்டியுள்ளார்.

”தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை”.. அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் மிரட்டிய அ.தி.மு.க நிர்வாகி!

தற்பொழுது இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசு ஊழியரை வேலை செய்ய விடாமல் அ.தி.மு.க நிர்வாகி மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories