தமிழ்நாடு

அவதூறு, பாலியல், கொலை மிரட்டல்.. 21 நாட்களில் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு பாஜக முக்கிய புள்ளிகள் பட்டியல்!

இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், இந்த மாதம் மட்டுமே தமிழ்நாட்டில் பாஜகவினர் கைது பட்டியல் இதோ !

அவதூறு, பாலியல், கொலை மிரட்டல்.. 21 நாட்களில் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு பாஜக முக்கிய புள்ளிகள் பட்டியல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பாஜகவினர் செய்யும் அராஜகங்கள் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே காணப்படுகிறது. ஒட்டுமொத்த இந்தியாவிலேயே பாலியல் குற்றங்கள், மோசடிகளில் முதன்மையாக இருப்பது பாஜகவை சேர்ந்தவர்கள் என்று சொன்னாலும் தவறில்லை. அவதூறு கருத்து பரப்புவதிலும் அவர்களுக்கு நிகர் அவர்களே என்பது போல் தவறான போலி செய்திகளை நாளுக்கு நாள் பரப்பி மக்கள் மத்தியில் வெறுப்பு பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.

அவதூறு, பாலியல், கொலை மிரட்டல்.. 21 நாட்களில் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு பாஜக முக்கிய புள்ளிகள் பட்டியல்!

எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்நாட்டில் அண்ணாமலை பாஜக தலைவராக பொறுப்பேற்ற பின்னர் குற்றச்செயல்கள் மேலும் அதிகரித்தே காணப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் மட்டுமே இந்த ஜூன் மாதத்தில் பாஜகவினர் செய்த அராஜகங்கள் ஏராளம். அதில் சிக்கிய முக்கிய புள்ளிகளின் பட்டியல் இதோ :

* முகநூலில் வெறுப்பு பிரச்சாரம் : காஞ்சிபுரம் மாவட்ட பாஜக மாவட்ட செயலாளர் செல்வம் கைது !

* அரசுக்கு எதிராக அவதூறு பரப்பிய வழக்கில் பாஜக பிரமுகர் சரவண பிரசாத் கைது !

* ஒடிசா ரயில் விபத்து குறுத்து மத வெறுப்புணர்வை தூண்டும் பிரச்சாரம் : கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க நிர்வாகி செந்தில்குமார் கைது!

* கோகுல் ராஜ் கொலை வழக்கு தொடர்பாக தீர்ப்பை விமர்சித்த வழக்கில் பா.ஜ.க தொழில்நுட்ப பிரிவு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் இசக்கி கைது!

அவதூறு, பாலியல், கொலை மிரட்டல்.. 21 நாட்களில் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு பாஜக முக்கிய புள்ளிகள் பட்டியல்!

* நாகை அருகே ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவருக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக நிர்வாகி புவனேஸ்வர் ராம் கைது!

* அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து ட்விட்டரில் அவதூறு கருத்து பதிவிட்ட வழக்கில் கோவை பாஜக மாநில நிர்வாகி செல்வகுமார் கைது!

* சென்னையில் மோசடி புகார் வழக்கில் நெசவாளர் அணியின் மாநில செயலாளர் மின்ட் ரமேஷ் கைது!

* சென்னையில் டூவீலரில் லிப்ட் கேட்டு சென்ற சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பாஜக உறுப்பினர் பாலச்சந்திரன் கைது!

* பெண்ணை ஆபாசப் படம் எடுத்து மிரட்டிய வழக்கில் திருச்சியை சேர்ந்த பாஜக நிர்வாகி ஜெயராம் பாண்டியன் கைது!

* ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக சொந்த கட்சியினரிடமே மோசடியில் ஈடுபட்ட விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் பாண்டியன் கைது!

* மோசடி வழக்கில் ஜாமீன் தொகையை செலுத்தாததால் மீண்டும் பாண்டியன் கைது!

அவதூறு, பாலியல், கொலை மிரட்டல்.. 21 நாட்களில் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு பாஜக முக்கிய புள்ளிகள் பட்டியல்!

* செங்குன்றத்தில் தொழிலதிபரை மிரட்டிய வழக்கில் அதிமுக - பாஜக கூட்டணி வைத்து தொழிலதிபரை தாக்கிய வழக்கில் வெங்கடேஷ் - கண்ணன் ஆகியோர் கைது.

* திருவள்ளூரில் நிலமோசடி வழக்கில் மாவட்ட பொதுச்செயலாளர் நரேஷ் கைது

* தஞ்சையில் காவலரை அவதூறாக திட்டிய வழக்கில் ஹரிதாஸ் - காரல் மார்க்ஸ் கைது.

* பாஜக மாநில ஐடி விங் செயலாளர் எஸ்.ஜி. சூர்யா அவதூறு பரப்பிய வழக்கில் கைது

* அவதூறாகப் பேசிய வழக்கில் கோவையை சேர்ந்த பாஜகவை சேர்ந்த உமா கார்கி கைது

* போலி பணி நியமன ஆணைகளை வழங்கி ரூ.40 லட்சம் மோசடி செய்த செங்கோட்டை நகர பாஜக பொது செயலாளர் பாலகிருஷ்ணன் கைது!

- இன்னும் ஒரு மாதம் கூட முடியாத நிலையில், பாஜவினரின் முக்கிய புள்ளிகள் பாலியல், கொலை மிரட்டல், பண மோசடி, நில மோசடி என அடுக்கடுக்கான புகார்களில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

banner

Related Stories

Related Stories