தமிழ்நாடு

’இது தமிழ்நாடு’.. ஆளுநர் மாளிகை முன்பு திரண்டு ஆர்.என்.ரவியை எச்சரித்த தி.மு.க மாணவர் அணி!

'பாசிசத்தைப் பாடாதே, பகல் வேடம் போடாதே' என முழக்கமிட்டு ஆளுநர் மாளிகை முன்பு மாணவர் கூட்டமைப்பு சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

’இது தமிழ்நாடு’.. ஆளுநர் மாளிகை முன்பு திரண்டு ஆர்.என்.ரவியை எச்சரித்த தி.மு.க மாணவர் அணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் உயர்கல்வி பயின்ற கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்காமல் கடமைத் தவறிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கண்டித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சட்டமன்றப் பேரவையில், பல்கலைக் கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளை உடனே ஒப்புதல் வழங்கிட வலியுறுத்தியும் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இதில் தி.மு.க மாணவர் அணி செயலாளர் எழிலரசன், தலைவர் ராஜீவ்காந்தி, இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் நிருபன் சக்கரவர்த்தி மற்றும் திராவிட மாணவர் கழகம், ம.தி.மு.க. மாணவர் அணி, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

’இது தமிழ்நாடு’.. ஆளுநர் மாளிகை முன்பு திரண்டு ஆர்.என்.ரவியை எச்சரித்த தி.மு.க மாணவர் அணி!

இந்த ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க மாணவர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி எழிலரசன், "9 லட்சத்திற்கும் மேலாக மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்து அவர்கள் பட்டமளிப்புக்காகக் காத்திருக்கிறார்கள் அதனை உடனடியாக ஆளுநர் பரிசீலனை செய்ய வேண்டும்.

பா.ஜ.கவின் செயல் தலைவராகவே கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ்நாடு ஆளுநர் மாறி வருகிறார். அவரின் இந்த நடவடிக்கைக்கு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு கண்டனத்தைத் தெரிவிக்கிறது..

எங்கள் ஆர்ப்பாட்டத்தில் முதல் கட்டமாகத் தந்தை பெரியார் பல்கலைக்கழகத்தில் 28ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளதாகத் தகவல் வெளியாக இருக்கிறது இது எங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி. இருந்தாலும் இனி அடுத்தடுத்த பட்டமளிப்பு விழா நடத்தப்பட வேண்டும்.

’இது தமிழ்நாடு’.. ஆளுநர் மாளிகை முன்பு திரண்டு ஆர்.என்.ரவியை எச்சரித்த தி.மு.க மாணவர் அணி!

அரசியலமைப்பு சட்டத்தின்படி உறுதிமொழி எடுத்து பதவி ஏற்றவர் ஆளுநர். ஆனால் அவர் உறுதிமொழிக்கு மாறாகச் செயல்படுகிறார். அவருக்கு என்று தனி அதிகாரங்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்படவில்லை. பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகளும் இதையே வலியுறுத்தி இருக்கிறது. தனது கடமையை ஆற்றத் தவறவிட்டார் என்றது பாஜகவின் செயல் தலைவராக மாறியிருக்கிறார். இது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களாட்சிக்கு எதிராகச் செயல்படும் உங்களுக்கு வேந்தர் பட்டம் ஒரு கேடா ஆர்.என்.ரவி?, பாசிசத்தைப் பாடாதே.. பகல் வேடம் போடாதே.., சங்கிதனத்தை நிறுத்திக்கொள்.. சமூகநீதியைக் கற்றுக்கொள்..,ராஜ்பவன் விட்டு ஓடிவிடு.. பிஜேபியில் ஐக்கியம் ஆகிவிடு என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

banner

Related Stories

Related Stories