தமிழ்நாடு

“பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன? சொல்லுங்க அமித்ஷா” - இணையத்தில் ட்ரெண்டாகும் #பதில்சொல்லுசங்கி !

ஒன்றிய பாஜக அரசை விமர்சித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கேள்வி எழுப்பிய நிலையில், இன்று #பதில்சொல்லுசங்கி என்ற ஹேஷ்டாக் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

“பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன? சொல்லுங்க அமித்ஷா” - இணையத்தில் ட்ரெண்டாகும் #பதில்சொல்லுசங்கி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பா.ஜ.க.வின் செல்வாக்கு நாடு முழுவதும் நாளுக்கு நாள் சரிந்து கொண்டு இருக்கிறது. அந்த ஆத்திரத்தில் அவர்கள் எந்த முடிவையும், எப்பொழுதும் எடுப்பார்கள். கர்நாடகாவில் கிடைத்ததைப் போன்ற தோல்வி தொடருமானால் முன்கூட்டியேகூட அவர்கள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முன்வரலாம். முழுமையாகத் தேய்ந்து போவதற்கு முன்னால் அவர்கள் தேர்தலை நடத்த நினைக்கலாம். எனவே நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாம் இப்போதே தயாராக இருக்க வேண்டும்.

2 நாட்களாகப் பத்திரிகைகளில் என்ன செய்தி? ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னைக்கு வருகிறார். பா.ஜ.க.வின் பொதுக்கூட்டத்தில் பேச இருக்கிறார் என்ற தகவல்கள் எல்லாம் வெளியாகி பரபரப்பாக வந்து கொண்டிருக்கிறது. என்ன காரணம்? அவர்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவதையே இது காட்டுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள், கடந்த 9 ஆண்டு காலத்தில் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் மூலமாக தமிழ்நாட்டுக்குச் செய்து கொடுத்த சிறப்புத் திட்டங்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று நான் கேட்கிறேன்.

“பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன? சொல்லுங்க அமித்ஷா” - இணையத்தில் ட்ரெண்டாகும் #பதில்சொல்லுசங்கி !

வேலூரில் பேசப் போகிறீர்கள். பத்திரிகைகளில் பேட்டி கொடுக்கப் போகிறீர்கள். செயல்வீரர்கள் கூட்டத்திலும் கலந்து கொள்ளப் போகிறீர்கள். இந்த 9 வருடத்தில் தமிழ்நாட்டிற்கு என்ன செய்திருக்கிறோம் என்பதைப் பட்டியல் போட்டு சொல்வதற்கு அமித் ஷா தயாராக இருக்கிறாரா? இந்த கேள்வியைத்தான் நான் கேட்கிறேன்.

இதே திராவிட முன்னேற்றக் கழகம், 2004 முதல் 2013 வரை ஒன்பது வருடம் ஒன்றிய அளவில் காங்கிரசு அணியில் இணைந்து கூட்டணி ஆட்சியில் இருந்தது. உங்களுக்குத் தெரியும். அப்போது ஏராளமான திட்டங்கள் தமிழ்நாட்டுக்கென சிறப்புத் திட்டங்களாக எடுத்து வரப்பட்டன. சென்னையில் மெட்ரோ ரயில் முதலாம் கட்டப் பணிகளைத் தொடங்கியதே தி.மு.க. - காங்கிரசு கூட்டணி ஆட்சி ஒன்றியத்தில் இருந்தபோதுதான்.

“பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன? சொல்லுங்க அமித்ஷா” - இணையத்தில் ட்ரெண்டாகும் #பதில்சொல்லுசங்கி !

14 ஆயிரத்து ரூ.600 கோடி மதிப்பிலான மகத்தான திட்டத்தைத் தொடங்கி வைத்து, ஏறக்குறைய 80% பணிகள் முடிக்கப்பட்டதற்குக் காரணம், தி.மு.க. - காங்கிரசு கூட்டணி ஆட்சிதான். இந்திய அரசு செலவு செய்த திட்டச் செலவில் 11% தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்தோம். மிக முக்கியமான 69 திட்டங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றிக் காட்டினோம்.

இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால், இரண்டாயிரம் ஆண்டு இலக்கியப் பெருமை கொண்ட தமிழ்மொழியை செம்மொழியாக்கும் பெருங்கனவு 100 ஆண்டுகளாக நம் தமிழர்களுக்கு இருந்தது. அந்தச் செம்மொழித் தகுதியைத் தமிழுக்குப் பெற்றுத் தந்தோம். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை அமைத்தோம்.

“பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன? சொல்லுங்க அமித்ஷா” - இணையத்தில் ட்ரெண்டாகும் #பதில்சொல்லுசங்கி !

இப்படி ஒரு பட்டியலை தமிழ்நாட்டிற்கு வரவிருக்கும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு, இந்த 9 வருடத்தில் இதை நாங்கள் செய்திருக்கிறோம் என்று சொல்லும் ஆற்றல் இருக்கிறதா? இந்தக் கேள்வியைத்தான் நான் கேட்கிறேன். இதை அவர் சொல்ல வேண்டும். நாங்கள் இதை செய்திருக்கிறோம் என்று சொல்லும் தைரியம், ஆற்றல் அவருக்கு வருமா? வராது. இதுதான் என்னுடைய கேள்வி.

தமிழ்நாட்டுக்காக ஒரு பெரிய திட்டத்தை அறிவித்தார்கள். என்ன திட்டம் என்று தெரியும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை! அதுவும் எப்போது தெரியுமா? 2015-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்தார்கள். அப்போது நிதி அமைச்சர் யார் தெரியுமா? அருண் ஜெட்லி அவர்கள். அவர் மறைந்துவிட்டார். அவர் அறிவித்து 8 வருடம் ஆகிவிட்டது. இதுவரைக்கும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டடம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்களா?

“பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன? சொல்லுங்க அமித்ஷா” - இணையத்தில் ட்ரெண்டாகும் #பதில்சொல்லுசங்கி !

மதுரையுடன் அறிவிக்கப்பட்ட மாநிலங்களில் எல்லாம் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டிக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசு, ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் கட்டாமல் போனதற்கு என்ன காரணம்? தமிழ்நாட்டில் ஒரு மருத்துவமனைக்கு ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்குவதற்கு மனமில்லாமல் இன்றைக்கு ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஏன் அதை ஒதுக்க முடியவில்லை? ஏன் அந்தப் பணியை நிறைவேற்ற முடியவில்லை? இது என்னுடைய கேள்வி மட்டுமல்ல, இதுதான் இன்றைக்குத் தமிழ்நாட்டு மக்களின் கேள்வி! இந்தக் கேள்விக்கு நாளைக்கு தமிழ்நாட்டிற்கு வருகிற அமித் ஷா அவர்கள் பதில் சொல்ல வேண்டும். அதை நான் எதிர்பார்க்கிறேன். முதலமைச்சராக எதிர்பார்க்கிறேன். தமிழ்நாட்டு மக்கள் சார்பில் எதிர்பார்க்கிறேன்.

பா.ஜ.க. தமிழ்நாட்டுக்கு கொடுத்ததெல்லாம் என்ன தெரியுமா? இந்தித் திணிப்பு, சமஸ்கிருதப் திணிப்பு, தமிழ் புறக்கணிப்பு, நீட் கொடுமை. அதுமட்டுமா, மூன்று வேளாண் சட்டங்களின் மூலமாக உழவர்களின் வாழ்க்கை பறித்தது. குடியுரிமைச் சட்டத்தின் மூலமாக சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல். மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. மாநிலத்திற்கான நிதியைக் கொடுப்பதற்குக் கூட மறுக்கிறார்கள். பேரிடர் கால நிதியாவது வருகிறதா? அதுவும் கிடையாது. இதுதான் அவர்கள் நம் தமிழ்நாட்டுக்காக தீட்டிய திட்டங்கள்.

“பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன? சொல்லுங்க அமித்ஷா” - இணையத்தில் ட்ரெண்டாகும் #பதில்சொல்லுசங்கி !

கேட்டால் சொல்வார்கள், சோழர்களின் செங்கோலை வாங்கி இருக்கிறோம். அந்தச் செங்கோல் வரலாறெல்லாம் என்ன என்று இப்போது தெரியும். காசியில் தமிழ்ச் சங்கமத்தை நடத்தி விட்டோம். பாரதியார் பாடலைச் சொல்கிறோம். திருக்குறளை மேற்கோள் காட்டுகிறோம். எங்களுக்கு வாக்களியுங்கள் என்று வரப்போகிறதா பா.ஜ.க.? கொத்தடிமைக் கூட்டமான அ.தி.மு.க.வை நம்பித் தேர்தலுக்கு வருகிறது பா.ஜ.க. ஏன் என்றால் கொத்தடிமை அ.தி.மு.க. இங்கு இருக்கிறது. அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மறைவுக்குப் பிறகு நடந்த எல்லாத் தேர்தலிலும் தோல்வியை மட்டுமே பெற்ற கட்சிதான் இன்றைக்கு இருக்கும் அ.தி.மு.க. என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது." என்றார்.

“பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன? சொல்லுங்க அமித்ஷா” - இணையத்தில் ட்ரெண்டாகும் #பதில்சொல்லுசங்கி !

இந்த நிலையில் இன்று அமித் ஷா பாஜக நடத்தும் கூட்டத்தில் பெங்கேற்றுள்ள நிலையில், '9 ஆண்டுகளில் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன ? பதில் சொல்லுங்கள் அமித் ஷா' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதை மேற்கோள்காட்டி ட்விட்டர் பக்கத்தில் "#தமிழர்_விரோதி_பாஜக, #பதில்சொல்லுசங்கி" என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

banner

Related Stories

Related Stories