தமிழ்நாடு

சாலை விபத்தில் பிரபல இயக்குநரின் உதவியாளர் உயிரிழப்பு.. திரையுலகம் அதிர்ச்சி!

பிரபல இயக்குநரின் உதவியாளர் சரண்ராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாலை விபத்தில் பிரபல இயக்குநரின் உதவியாளர் உயிரிழப்பு.. திரையுலகம் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் வெளிவந்த 'வட சென்னை', 'அசுரன்' படம் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தது. இந்த படங்களில் உதவி இயக்குநராக சரண்ராஜ் என்பவர் பணியாற்றியுள்ளார். மேலும் இவர் சின்ன வேடங்களிலும் இப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், சரண்ராஜ் நேற்று இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சென்னை கே.கே.நர் பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாவ வந்த கார் ஒன்று இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

சாலை விபத்தில் பிரபல இயக்குநரின் உதவியாளர் உயிரிழப்பு.. திரையுலகம் அதிர்ச்சி!

இதில் சரண்ராஜ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் விபத்தை ஏற்படுத்தியவர் குறித்து விசாரித்தபோது அவர் சாலிகிராம் பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் என்றும், சினிமாவில் துணை நடிகராக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலிஸார் கைது செய்தனர்.

இதையடுத்து சாலை விபத்தில் உயிரிழந்த இயக்குநர் வெற்றிமாறனின் உதவியாளருக்கு நடிகர்கள், இயக்குநர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories