தமிழ்நாடு

Lift கொடுப்பதுபோல் தொழிலாளியிடம் ரூ.1500 பணம் பறித்த மூன்று இளைஞர்கள்.. அதிரடியாக கைது செய்த போலிஸ்!

இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கொடுப்பதுபோல் நடித்து தொழிலாளியை தாக்கி பணம் பறித்த மூன்று வாலிபர்களை போலிஸார் கைது செய்துள்ளனர்.

Lift கொடுப்பதுபோல் தொழிலாளியிடம் ரூ.1500 பணம் பறித்த மூன்று இளைஞர்கள்.. அதிரடியாக கைது செய்த போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை கொருக்குப்பேட்டை ஜே.ஜே நகர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் மணலியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், வழக்கம் போல் சீனிவாசன் தனது வேலை முடித்து விட்டு நள்ளிரவு வீட்டிற்குச் செல்வதற்காக தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், சீனிவாசனிடம் 'லிஃப்ட் வேண்டுமா?' என கேட்டுள்ளனர்.

Lift கொடுப்பதுபோல் தொழிலாளியிடம் ரூ.1500 பணம் பறித்த மூன்று இளைஞர்கள்.. அதிரடியாக கைது செய்த போலிஸ்!

அவரும், இருசக்கர வாகனத்தில் ஏறி இவர்களுடன் சென்றுள்ளார். பிறகு சிறிது தூரம் சென்ற பின்பு வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அங்கு ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதையடுத்து மூன்ற பேரும் சேர்ந்து கொண்டு சீனிவாசனை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த ரூ. 1500 பணத்தைப் பறித்துக் கொண்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பாகச் சீனிவாசன் ஆர்.கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் வழக்குப் பதிவு செய்த போலிஸார் சீனிவாசனை தாக்கி பணம் பறித்தது யார் என விசாரணை நடத்தினர். இதில் ஆகாஷ், சஞ்சய், வேலன் ஆகிய மூன்று வாலிபர்கள்தான் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மூவரையும் போலிஸார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த பணத்தையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

banner

Related Stories

Related Stories