தமிழ்நாடு

காதலுக்கு NO.. பெற்றோர் கண்முன்னே விபரீத முடிவெடுத்த கல்லூரி மாணவி: திக் திக் சம்பவம்!

சென்னையில் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலுக்கு NO.. பெற்றோர் கண்முன்னே விபரீத முடிவெடுத்த கல்லூரி மாணவி: திக் திக் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை பெரம்பூர் கொல்லம் தோட்டம் இரண்டாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவரது மகள் ஆர்த்தி. இவர் கல்லூரியில் ஆங்கிலம் இலக்கியம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று வீட்டின் சமையலறையில் இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு தீ பிடித்து எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்து பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் தீயை அணைத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அங்கு அங்கு 65% தீக்காயங்களுடன் ஆர்த்தி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

காதலுக்கு NO.. பெற்றோர் கண்முன்னே விபரீத முடிவெடுத்த கல்லூரி மாணவி: திக் திக் சம்பவம்!

இது குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஆகாஷ் என்ற வாலிபரை ஆர்த்தி ஐந்து வருடங்களாகக் காதலித்து வந்துள்ளார். இவரின் காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த ஆர்த்தி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories