தமிழ்நாடு

தேசிய சராசரி அளவைவிட உயர்ந்த மின் விநியோகம்.. தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது ஒன்றிய அரசு!

தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம் தேசிய சராசரி அளவைவிட உயர்ந்துள்ளதை ஒன்றிய அரசு பாராட்டியுள்ளது.

தேசிய சராசரி அளவைவிட உயர்ந்த மின் விநியோகம்.. தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது ஒன்றிய அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம் தேசிய சராசரி அளவைவிட உயர்ந்துள்ளதை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒன்றிய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே. சிங் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ஊரகப் பகுதிகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம் தேசிய அளவில் 2018-2019 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 20 மணி நேரம் 70 நிமிடங்களாக வழங்கப்பட்டு வந்த நிலையில், 2021-2022 ஆம் ஆண்டில், நாளொன்றுக்கு அது 20 மணி நேரம் 53 நிமிடங்களாக இருக்கிறது.

தேசிய சராசரி அளவைவிட உயர்ந்த மின் விநியோகம்.. தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது ஒன்றிய அரசு!

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 2018-2019 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 20 மணி நேரம் 77 நிமிடங்களாக ஊரகப் பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மின் விநியோகம், 2021-2022 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 22 மணி நேரம் 15 நிமிடங்களாக உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டி, தனது பாராட்டினைத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில், மக்களின் வாழ்க்கைத் மேலும், தரத்தினை மேம்படுத்திட ஏதுவாக, 24 மணி நேரமும் மின் விநியோகத்தினை வழங்கிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒன்றிய அரசு உதவிடும் என்றும் மாண்புமிகு ஒன்றிய எரிசக்தித் துறை அமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories