முரசொலி தலையங்கம்

இந்தியாவின் அரசியலை தீர்மானிக்க வழிகாட்டியது கர்நாடகா.. பிளாப் ஆனது மோடி கூட்டத்தின் ரோடு ஷோ : முரசொலி!

குஜராத் மாநிலத்தில், 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்து 621 பெண்கள் மாயமாகியுள்ளனர்.

இந்தியாவின் அரசியலை தீர்மானிக்க வழிகாட்டியது கர்நாடகா.. பிளாப் ஆனது மோடி கூட்டத்தின் ரோடு ஷோ :  முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (16-05-2023)

கர்நாடகாவும் வழிகாட்டியது 1

இந்தியாவின் அரசியல் திசையை தீர்மானிக்க கர்நாடகாவும் வழிகாட்டி விட்டது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் இந்திய நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல் முடிவானது எப்படி அமைய வேண்டும் - எப்படி அமையப் போகிறது என்பதை வழிகாட்டி விட்டது கர்நாடக அரசியல் தேர்தல்.

ஒரு மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு - அதன் முடிவுக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியுமா? கொடுக்க வேண்டுமா என்று யாராவது கேட்கலாம். இந்தச் சட்டமன்றத் தேர்தலுக்கு பா.ஜ.க. எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்ததோ அந்தளவுக்கு அதன் முடிவுக்கும் முக்கியத்துவம் தந்தாக வேண்டும்.

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதை தனது மானப்பிரச்சினையைப் போல பிரதமர் நரேந்திரமோடி காட்டிக் கொண்டார். ‘கர்நாடக மக்களின் கனவுகள் எனது கனவுகள். அவர்களின் தீர்மானமே எனது தீர்மானம்’ என்று பேசினார் பிரதமர். ‘உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ள இந்தியா முதல் மூன்று இடங்களுக்குள் வர வேண்டுமானால் கர்நாடகாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே சாத்தியமாகும்’ என்று சொல்லிக் கொண்டார். பத்துகிலோ மீட்டர் சாலையில் ‘ரோடு ஷோ’ பிரச்சாரம் செய்தார் பிரதமர் மோடி.

இது போன்ற 28 ரோடு ஷோக்களை பா.ஜ.க. செய்தது. 33 பேரணிகளை நடத்தியது. ஏழு நாட்கள் கர்நாடகாவில் பிரச்சாரம் செய்தார் மோடி.

இந்தியாவின் அரசியலை தீர்மானிக்க வழிகாட்டியது கர்நாடகா.. பிளாப் ஆனது மோடி கூட்டத்தின் ரோடு ஷோ :  முரசொலி!

அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன், பிரகலாத் ஜோஷி, நிதின் கட்கரி, தர்மேந்திரபிரதான் ஆகிய ஒன்றிய அமைச்சர்கள் அங்கேயே இருந்தார்கள். உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகியை அழைத்து வந்தார்கள். நட்டா இங்கேயே இருந்தார். இன்னும் உள்ளூரில் விலை போகாததுகள் பலதும் அங்கே இறக்கிவிடப்பட்டன.

வகுப்புவாதத்தை மொத்தமாக பட்டவர்த்தனமாக பிரச்சாரத்தில் பயன்படுத்தியது பா.ஜ.க. குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று வாக்குறுதி அளித்தார்கள். கல்வி நிலையங்களில் ஹிஜாப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நியாயப்படுத்தி பேசினார்கள். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக துணிச்சலாக இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்து வோம் என்று அறிவித்தார்கள். ‘காங்கிரசுக்கு வாக்களித்தால் மதக்கலவரம் செய்வார்கள்’ என்று உள்துறை அமைச்சரே பேசினார். ‘வாக்களித்துவிட்டு ஜெய் பஜ்ரங்பலி என்று முழக்கமிடுங்கள்’ என்று இந்த நாட்டின் பிரதமரே பேசினார். ‘எங்களுக்கு ஒரு இசுலாமியர் வாக்கு கூட தேவையில்லை’ என்று பா.ஜ.க. தலைவர் ஈஸ்வரப்பா வெளிப்படையாகச் சொன்னார். ‘திப்பு சுல்தான்களின் ஆதரவாளர்களை எதிர்த்துத்தான் இந்த தேர்தல்’ என்று சொன்னார் சி.டி.ரவி. இவை அனைத்தையும் தாண்டி, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை ஆதரித்து பிரதமரே மேடைகளில் பேசினார்.

இந்தி திரைப்பட இயக்குனர் சுதிப்தோ சென் கதை எழுதி இயக்கி இருக்கும் திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. கேரளாவை சேர்ந்த ஏராளமான பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு தீவிரவாத செயலில் ஈடுபடுத்தப்படுவது போல் காட்சிகள் உள்ள படம் அது. மிகக்கடுமையான எதிர்ப்பை சந்தித்த படம் அது. அதனை வெளிப்படையாக பிரதமர் ஆதரித்து பேசினார்.

இந்தியாவின் அரசியலை தீர்மானிக்க வழிகாட்டியது கர்நாடகா.. பிளாப் ஆனது மோடி கூட்டத்தின் ரோடு ஷோ :  முரசொலி!

பல்லாரியில் பேசிய பிரதமர், “கேரளா என்பது கடின உழைப்பாளிகள் மற்றும் திறமையானவர்கள் கொண்ட மாநிலமாகும். இங்கு அறிவார்ந்த மக்கள் உள்ளனர். இத்தகைய அழகிய கேரளா மாநிலத்தில் தீவிரவாதம் எப்படி ஊடுருவுகிறது என்பதை காட்ட ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் முயற்சிக்கிறது. ஆனால் இந்தத் திரைப்படத்துக்கு தடை செய்து தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. இதுபோன்ற விஷயங்களை தடை செய்யவும், நாட்டின் வளர்ச்சியை புறக்கணிக்க மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு தெரியும்.

தீவிரவாதம் தற்போது புதிய வடிவத்தை கையில் எடுத்துள்ளது. ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளைப் பயன்படுத்துவதைத் தவிர சமூகத்தை உள்ளிருந்து பிரித்தாள்வதற்கான வேலையை செய்கிறது. ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தீவிரவாதத்தின் புதிய முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது தீவிரவாத அமைப்புகள் முன்பு மண்டியிட்டு இருந்தது. இதனால் நீண்டகாலமாக வன்முறையால் பாதித்தோம். மேலும் தீவிரவாதத்தில் இருந்து இந்த நாட்டை காங்கிரஸ் ஒருபோதும் பாதுகாக்கவில்லை. இத்தகைய சூழலில் கர்நாடகத்தை காங்கிரஸால் பாதுகாக்க முடியுமா?” என்றார்.

கேரளா ஸ்டோரி படத்துக்கும் கர்நாடகாவுக்கும் என்ன தொடர்பு? சில நாட்களுக்கு முன்னால் குஜராத் பெண்கள் பற்றி ஒரு தகவல் வெளியானது.

குஜராத் மாநிலத்தில், 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்து 621 பெண்கள் மாயமாகியுள்ளனர்.

2016 ஆம் ஆண்டு 7,105 பெண்களும் –

2017 ஆம் ஆண்டு 7,712 பெண்களும் - –

2018 ஆம் ஆண்டு 9,246 பெண்களும் -–

2019 ஆம் ஆண்டு 9,268 பெண்களும்- –

2020 ஆம் ஆண்டு 8,290 பெண்களும் காணாமல் போயுள்ளனர். அதாவது 5 ஆண்டுகளில் மொத்தம் 41 ஆயிரத்து 621 பெண்கள் மாயமாகி உள்ளனர். இந்தத் தகவல்கள், என்.சி.ஆர்.பி. எனப்படும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட உண்மைத் தகவல். இதுதான் ‘குஜராத் மாடல்’ ஆட்சியில் லட்சணம் ஆகும்!

அந்த மாநிலத்தில் 2019-–20 ஆண்டில் அகமதாபாத்திலும், வதோதராவிலும் 4,722 பெண்கள் காணாமல் போயுள்ளதாக 2021-ம் ஆண்டு மாநில சட்டமன்றத்திலேயே அறிவிக்கப்பட்டது. இதுதான் ‘குஜராத் மாடலின்’ குரூரமான நிலைமை ஆகும். இதைப் பற்றி எல்லாம் குஜராத்தை சேர்ந்த பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ கவலைப்படுவதும் இல்லை. இதுதான் குஜராத் மாடலின் உண்மை முகம் ஆகும். இத்தகைய குஜராத் ஸ்டோரியைப் பற்றி அவர் கர்நாடகாவில் பதில் சொல்லவில்லை.

இது, ‘தி ரியல் குஜராத் ஸ்டோரி’ என்ற நிஜப்படமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. அதனால் பிரதமர் உள்ளிட்டவர்கள் ஓட்டிய ‘கேரளா ஸ்டோரி’ கர்நாடகாவில் பிளாப் ஆனது.

தொடரும் -

banner

Related Stories

Related Stories