தமிழ்நாடு

முதல்வரின் காலை உணவு திட்டத்தால் அரசு பள்ளிகளில் 85% மாணவர்கள் வருகை அதிகரிப்பு: அசத்தும் திராவிட மாடல்!

முதல்வரின் காலை உணவு திட்டத்தால் அரசு பள்ளிகளில் 85% மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது என சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல்வரின் காலை உணவு திட்டத்தால் அரசு பள்ளிகளில் 85% மாணவர்கள் வருகை அதிகரிப்பு: அசத்தும் திராவிட மாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குக் காலை சிற்றுண்டி அளிக்கும் வகையில் 'முதலமைச்சரின் காலை உணவு திட்டம்' அறிவிப்பைச் சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு மே 5ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1545 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 95 மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் கடந்த ஆண்டு செப்.15ம் தேதி தொடங்கப்பட்டது.

இந்த திட்டம் பலரின் வரவேற்பையும், பாராட்டையும் பெற்ற நிலையில் 'முதலமைச்சரின் காலை உணவு திட்டம்' கூடுதலாக 433 பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் 1969 பள்ளிகளில் படிக்கும் 1 லட்சத்து 54 ஆயிரத்து 108 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

முதல்வரின் காலை உணவு திட்டத்தால் அரசு பள்ளிகளில் 85% மாணவர்கள் வருகை அதிகரிப்பு: அசத்தும் திராவிட மாடல்!

இந்த திட்டம் சென்னை மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி ஆணையர் மூலமாகவும், சென்னை தவிரப் பிற மாநகராட்சிகளில் நகராட்சி நிர்வாக துறை மூலம் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் வாயிலாகவும் செயல்படுத்தப்படுகிறது. மேலும் கிராம ஊராட்சிகள் மற்றும் மலைப்பகுதிகளில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மூலம் கிராம பஞ்சாயத்துகள் அல்லது மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் கடந்த ஆறு மாதங்களில் மாணவர்களின் வருகை 85% அதிகரித்துள்ளதாக சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கூறும் அதிகாரிகள், " 'முதலமைச்சரின் காலை உணவு திட்டம்' செயல்படுத்தப்பட்ட பள்ளிகளில் ஆய்வு செய்தபோது 1540 பள்ளிகளில் 1319 பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது.

முதல்வரின் காலை உணவு திட்டத்தால் அரசு பள்ளிகளில் 85% மாணவர்கள் வருகை அதிகரிப்பு: அசத்தும் திராவிட மாடல்!

அதன்படி 624 பள்ளிகளில் 0 முதல் 10% மற்றும் 462 பள்ளிகளில் 10 முதல் 20%,171 பள்ளிகளில் 20 முதல் 30% வரையும் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. மேலும் திட்டம் செயல்படுத்தப்பட்ட பள்ளிகளையும் அதே பகுதியில் திட்டம் செயல்படுத்தப்படாத பள்ளிகளை ஒப்பிடும் போது 77% மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது.

இந்த திட்டம் பொதுமக்களிடமும் குறிப்பாகப் பெற்றோர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. சுய உதவிக்குழுக்களின் சீரான பொருளாதார நடவடிக்கைகள் சாத்தியமாக்கியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது. ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் இல்லாத பகுதிகளில் புதிய கட்டடங்கள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது" என தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories