தமிழ்நாடு

”அண்ணாமலைக்கு ஓராண்டு சிறைத்தண்டனை கிடைக்கும்”.. தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திட்டவட்டம்!

பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு ஓராண்டு சிறைத்தண்டனை கிடைக்கும் என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

”அண்ணாமலைக்கு ஓராண்டு சிறைத்தண்டனை கிடைக்கும்”.. தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  திட்டவட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தி.மு.க குறித்து அவதூறு பரப்பும் வகையில் போலியான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதையடுத்து தி.மு.கவினர் அண்ணாமலைக்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். மேலும் தி.மு.க மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகளை அண்ணாமலையால் 15 நாட்களுக்குள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியுமா? என்றும் அவர் மீது வழக்குத் தொடுக்கப்படும் என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருந்தார்.

இதையடுத்து தி.மு.க மீது போலியான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்திய அண்ணாமலைக்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ரூ.500 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ரூ.50 கோடி இழப்பீடு கேட்டும், தி.மு.க பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு ரூ.100 கோடி இழப்பீடு கேட்டும், கனிமொழி எம்.பியும் ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டும் நோட்டீஸ் அனுப்பினர்.

”அண்ணாமலைக்கு ஓராண்டு சிறைத்தண்டனை கிடைக்கும்”.. தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  திட்டவட்டம்!

இதையடுத்து அவதூறு கருத்துகளை வெளியிட்ட பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கு தாக்கல் செய்துள்ளார். முதலமைச்சரைத் தொடர்ந்து அண்ணாமலை மீது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

பின்னர் இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "கடந்த மாதம் ஏப்ரல் 14ம் தேதி அண்ணாமலை தி.மு.கவினர் மீது அவதூறாகப் புழுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டார். அண்ணாமலை தெரிவித்த அவதூறு கருத்துகளைத் திரும்பப் பெற்று மன்னிப்பு கோர வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒரு மாத காலம் அவகாசம் அளித்தும் அண்ணாமலை எந்தவித விளக்கமும், மன்னிப்பும் கேட்கவில்லை.

”அண்ணாமலைக்கு ஓராண்டு சிறைத்தண்டனை கிடைக்கும்”.. தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  திட்டவட்டம்!

இதையடுத்து அவர்மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

தி.மு.க யார் மீதும் பொய் வழக்குப் போட்டதில்லை. தி.மு.க தொடர்ந்த அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற்றுள்ளது என்பதுதான் வரலாறு. கலைஞர் தி.மு.கவின் பொருளாராக இருந்த போது நார்த்திகம் பத்திரிகை ஆசிரியர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றுத்தந்தார். அதேபோல் தற்போது தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்துள்ள வழக்கில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு ஓராண்டு சிறைதண்டனை கிடைக்கும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories