தமிழ்நாடு

”10 ஆண்டுகாலம் பாழ்பட்டு கிடந்த தமிழ்நாட்டை மீட்டது உதயசூரியன் ஆட்சி”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

ஏங்கிக் கிடந்த தமிழ்நாட்டு மக்களின் தாகம் தீர்க்க உதயமானது தான் 2021 மே மாதம் உதயமான உதயசூரியன் ஆட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”10 ஆண்டுகாலம் பாழ்பட்டு கிடந்த தமிழ்நாட்டை மீட்டது உதயசூரியன் ஆட்சி”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்து இன்றுடன் இரண்டாம் ஆண்டை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் மே 7,8,9 ஆகிய மூன்று நாட்களில் 1,222 பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக, காஞ்சிபும் வடக்கு மாவட்டம், கண்டோன் மெண்ட் பல்லாவரத்தில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி வாழத்துரை வழங்கினார்.

”10 ஆண்டுகாலம் பாழ்பட்டு கிடந்த தமிழ்நாட்டை மீட்டது உதயசூரியன் ஆட்சி”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

பின்னர் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், " ஆறாவது முறையாக அன்னைத் தமிழ்நாட்டை ஆளும் பொறுப்புக்கு வந்துள்ள திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியானது - சீரோடும் சிறப்போடும் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கி தமிழ்நாடு முழுவதும் 1222 பொதுக்கூட்டங்களை இன்றும் நாளையும் நாளை மறுநாளும் ஏற்பாடு செய்துள்ளோம். மூன்றே நாளில் 1,222 கூட்டங்கள் நடைபெறுவது என்பது இதுவரை நடைபெறாத எண்ணிக்கையாகும். 100 கூட்டத்திலோ 200 கூட்டத்திலோ நமது சாதனைகளைச் சொல்லி முடியாது. 1000 கூட்டத்தில் சொல்லக் கூடிய அளவுக்கு நாம் சாதனைகளைச் செய்துள்ளோம்.அதனால் தான் 1,222 கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வீழ்ந்து கிடந்த தமிழ்ச் சமுதாயத்தைக் காக்க வந்த விடிவெள்ளியாம் பேரறிஞர் அண்ணா பிறந்தது காஞ்சிபுரம் மாவட்டம். அதிலும் வரலாற்றுப் புகழ் பெற்றது இந்த பல்லாவரம் பகுதி. ஒரு காலத்தில் இது பல்லவபுரம் என்று அழைக்கப்பட்ட பகுதி இது. கல்வெட்டுகளில் பல்லவபுரம் என்று தான் உள்ளது. பல்லவ மன்னன் மகேந்திர வர்ம பல்லவன் காலத்தில் கலைகள் வளர்ந்தது இந்த பல்லவபுரம்.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பழைய கற்காலக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதி இது. திருமங்கை ஆழ்வாரும் - பூதத்தாழ்வாரும் பாடிய திருநீர்மலை கோவில் இங்கு தான் உள்ளது. இவை அனைத்துக்கும் மேலாக காஞ்சிபுரம் வட்டாரத்துக்கு வந்த சீனப் பயணி யுவான் சுவாங், ' திராவிடத்தின் தலைநகராக காஞ்சி விளங்கியது' என்று எழுதினார். அத்தகைய திராவிடத்தின் தலைநகரான காஞ்சி மாவட்டத்தின் பல்லாவரத்தில் பேசுவது பொருத்தமானது. மகிழ்ச்சிக்குரியது.

”10 ஆண்டுகாலம் பாழ்பட்டு கிடந்த தமிழ்நாட்டை மீட்டது உதயசூரியன் ஆட்சி”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

எப்படி இருந்தது தமிழ்நாடு?

பத்தாண்டு காலம் பாழ் பட்டுக் கிடந்தது தமிழ்நாடு. முதல் ஐந்தாண்டு காலம் தனது வழக்கில் இருந்திருந்து தப்பிப்பதற்கான முயற்சிகள் இருந்தார் அம்மையார் ஜெயலலிதா அவர்கள். சிறைக்குப் போனார், திரும்பி வந்தார். அதன்பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்டார். மறைந்தும் போனார்.

பழனிசாமி - பன்னீர்செல்வம் - சசிகலா என்று பிரிந்து நின்று மோதியதன் காரணமாக தமிழ்நாடே அனைத்து வகையிலும் சீரழிந்தது.ஊழல் முறைகேட்டின் காரணமாக தமிழ்நாட்டின் நிர்வாகத்தை சூறையாடினார்கள். தனது செயலின்மை காரணமாக நிதிநிர்வாகத்தையே பாழடித்தார்கள். கட்டுப்பாடுகள் இல்லாத காரணத்தால் தடியெடுத்தவன் தண்டல் காரன் என்ற சூழலை உருவாக்கினார்கள்.

தூத்துக்குடியில் ஊர்வலமா? துப்பாக்கியால் சுட்டுக் கொல்! பொள்ளாச்சியில் பாலியல் வன்முறையா? குற்றவாளிகளைக் கைது செய்யாதே! அம்மையார் ஜெயலலிதா வீட்டிலேயே கொலை நடந்தது. கொள்ளை நடந்தது. மர்ம மரணங்கள் நடந்தன.

குட்கா விற்பனை ஏகபோகமாக இருந்தது. குட்கா வியாபாரிகளிடம் மாமூல் வாங்கியதாக அமைச்சர் மீதும் டிஜிபி மீதும், போலீஸ் அதிகாரிகள் மீதும் புகார் வந்து, அவர்கள் வீட்டில் ரெய்டு நடந்தது.

தலைமைச் செயலாளர் வீட்டிலேயே ரெய்டு நடந்தது. இவை அனைத்துக்கும் மேலாக தமிழ்நாட்டின் மாநில உரிமைகள் அனைத்தும் டெல்லி பாஜக தலைமையிடம் அடகு வைக்கப்பட்டு இருந்தன.

1991-96 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலம் என்பது மிக மோசமான ஆட்சி காலமாக இருந்தது என்றால் - அதனை விட மிகமிக மோசமான காலமாக 2016-21 ஆட்சிகாலம் என்பது இருந்தது. விடியல் பிறக்காதா? திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வராதா? என்று ஏங்கிக் கிடந்த தமிழ்நாட்டு மக்களின் தாகம் தீர்க்க உதயமானது தான் 2021 மே மாதம் உதயமான உதயசூரியன் ஆட்சி.

இந்த இரண்டாண்டு காலத்தில் பத்தாண்டு கால பாதாளத்தை சரி செய்திருக்கிறோம். ஐந்து ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளை இரண்டே ஆண்டுகளில் செய்து காட்டி இருக்கிறோம் என்பதை பல்லவ மன்னர்கள் உலவிய மண்ணில் நின்று கம்பீரமாகச் சொல்ல விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories