தமிழ்நாடு

10 ரூபாய் கொடுத்து சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. வாலிபருக்கு அதிரடி தண்டனை விதித்த நீதிமன்றம் !

2 ஆண்டுகளுக்கு முன் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது சிறுவனின் குடும்பத்தாருக்கு சற்று நிம்மதி கிடைத்துள்ளது.

10 ரூபாய் கொடுத்து சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. வாலிபருக்கு அதிரடி தண்டனை விதித்த நீதிமன்றம் !
 • Twitter
 • Facebook
 • WhatsApp
KL Reshma
Updated on

பாலியல் வன்கொடுமை என்பது அன்றாடம் நாம் தினமும் படிக்கும் ஒரு செய்தியாக அமைந்துள்ளது. பெண்களை குறிவைத்து சில ஆண்கள் இப்படி செய்வது உண்டு. ஆனால் சில இளைஞர்கள் தங்கள் ஆசையை கட்டுப்படுத்த இயலாமல் போதையில் வயதான பெண்களிடமும், மூதாட்டியிடமும் இவ்வாறு தகாத முறையில் நடந்துகொள்ளும் செய்திகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

10 ரூபாய் கொடுத்து சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. வாலிபருக்கு அதிரடி தண்டனை விதித்த நீதிமன்றம் !

இன்னும் சில நபர்கள் சிறுவர்கள் என்றும் பாராமல் அவர்களுக்கும் தொல்லை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டையில் 32 வயது இளைஞர் ஒருவர் 9 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது தொடர்பான வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

10 ரூபாய் கொடுத்து சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. வாலிபருக்கு அதிரடி தண்டனை விதித்த நீதிமன்றம் !

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை பகுதியைச் சேர்த்தவர் சதாம் உசேன் (32). இந்த வாலிபர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தஞ்சாவூரில் அமைந்திருக்கும் பேராவூரணி அருகே இருக்கும் கிராமத்தில் வசிக்கும் தனது நண்பரை காண சென்றுள்ளார். பிறகு அங்கேயே ஒரு பணி இருப்பதாக கூறி வீடு எடுத்து தனியாக வசித்து வந்துள்ளார்.

அங்கே தனியாக இருக்கும் இவர், அந்த பகுதி சிறுவர்களிடம் நன்றாக பேசி பழகி வந்துள்ளார். மேலும் சில நேரங்களில் அவர்களுக்கு தேவையான தின்பண்டங்களை வாங்கி கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அங்கிருந்த சிறுவனிடம் நேக்காக பேசி வீட்டுக்கு அழைத்துள்ளார்.

10 ரூபாய் கொடுத்து சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. வாலிபருக்கு அதிரடி தண்டனை விதித்த நீதிமன்றம் !

அந்த சிறுவனும் வீட்டுக்கு வரவே, அவரிடம் 10 ரூபாய் கொடுத்து பாலியல் ரீதியான தொந்தரவுகளை கொடுத்துள்ளார். இதனால் சிறுவன் பெரும் அதிர்ச்சிக்குள்ளான நிலையில், வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக இந்த வாலிபர் சிறுவனை மிரட்டியும் உள்ளார். இதையடுத்து மிகுந்த பயத்தில் இருந்த சிறுவன் தனக்கு நேர்ந்ததை தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.

இதனை கேட்டதும் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து சதாம் உசேன் வீட்டிற்கு சென்று சண்டையிட்டுள்ளனர். தொடர்ந்து பேராவூரணி காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இந்த வழக்கை பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர்.

10 ரூபாய் கொடுத்து சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. வாலிபருக்கு அதிரடி தண்டனை விதித்த நீதிமன்றம் !

தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த அதிகாரிகள் குற்றவாளி சதாம் உசேனை கைது செய்து தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து 2 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளி சதாம் உசேன் மீதான குற்றங்கள் உறுதியானது.

இந்த நிலையில் குற்றவாளி சதாம் உசேனுக்கு நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது சிறுவனின் குடும்பத்தாருக்கு சற்று நிம்மதி கிடைத்துள்ளது.

  banner

  Related Stories

  Related Stories