தமிழ்நாடு

”திராவிடம் அல்ல சனாதனம்தான் காலாவதியாகிவிட்டது”.. ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி!

திராவிடம் வந்ததும் சனாதனம் காலாவதியாகிவிட்டது என ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி கொடுத்துள்ளார்.

”திராவிடம் அல்ல சனாதனம்தான் காலாவதியாகிவிட்டது”..   ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் தாங்கள் ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் அடாவடித்தனமாக நடந்து கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதில் இருந்தே மாநில அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். அதுமட்டுமல்லாது, ஒரு ஆளுநராக இருந்து கொண்டு பொது நிகழ்ச்சிகளில் தனது சனாதன கருத்துக்களைப் பேசி வருகிறார்.

”திராவிடம் அல்ல சனாதனம்தான் காலாவதியாகிவிட்டது”..   ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி!

மேலும் இந்த ஆண்டு தொடங்கிய முதல் சட்டமன்ற கூட்டத் தொடரின் போதும், "சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லூயிர் ஓம்புதல், திராவிட மாடல், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர்" போன்ற வார்த்தைகளை வேண்டும் என்றே தவிர்த்து தனது உரையை வாசித்தார்.

இப்படி தொடர்ச்சியாக மாநில அரசுக்கு எதிராக தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ஆங்கில நாளிதழுக்கு அளித்த போட்டி ஒன்றில், ‘திராவிட மாடல்’ அரசு என்று எதுவும் கிடையாது; ‘திராவிட மாடல்’ என்பது அரசியல் கோஷம் மட்டுமே! ‘திராவிட மாடல்’ கொள்கை எப்போதோ காலாவதியாகிவிட்டது. அதற்கு மீண்டும் உயிர்க் கொடுக்க நினைக்கின்றனர்’’ என்று கூறுகின்றார்.

”திராவிடம் அல்ல சனாதனம்தான் காலாவதியாகிவிட்டது”..   ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி!

இதையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்திற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "ஆளுநர் பணியைத் தவிர அனைத்துப் பணிகளையும் செய்கிறார். சனாதன வகுப்பு எடுக்கிறார். ஆரியத்துக்கு ஆலாபனை பாடுகிறார். திராவிடத்துக்குத் தவறான பொருள் சொல்கிறார். திருக்குறளைத் திரிக்கிறார். சிவாஜி ஏன் படையெடுத்து வந்தார் என்ற வரலாற்றை மறைக்கிறார். தனக்குத் தோன்றும் புதிய காரணங்களை - புனைவு காரணங்களைக் குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு சட்டத்துக்குப் புறம்பான விளக்கங்கள் சொல்கிறார். அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதையே பேசுகிறார்" என கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் ஆளுநரின் பேச்சுக்கு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடியும் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் பொன்முடி, "ஆளுநராக இருப்பவர்கள் அரசியல் பேசுவது தவறான ஒன்று. அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களா? இல்லை. காலாவதியானது சனாதனம் தான். இனிமேல் காலாவதியாகப் போவது ஆளுநர் தான். திராவிடம் அகில இந்திய அளவில் பரவ தொடங்கி இருக்கிறது. திராவிடம் என்பது இந்தியாவிற்கு மட்டுமில்லை உலகத்திற்கே ஏற்ற ஒரு கொள்கை. திராவிடம் வந்த பிறகுதான் சனாதனம் காலாவதியாகிவிட்டது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories