தமிழ்நாடு

மருத்துவ கழிவுகளை குப்பையுடன் கொட்டிய தனியார் மருத்துவமனை.. அதிரடி நடவடிக்கை எடுத்த தாம்பரம் மாநகராட்சி!

மருத்துவ கழிவுகளை குப்பையுடன் கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு தாம்பரம் மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் ஒரு லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.

மருத்துவ கழிவுகளை குப்பையுடன் கொட்டிய தனியார் மருத்துவமனை.. அதிரடி நடவடிக்கை எடுத்த தாம்பரம் மாநகராட்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பொதுவாக மருத்துவமனைகளில் ஏற்படும் கழிவுகளை பாய்லர் மூலம் அழிக்க வேண்டும். அவ்வாறு அளிக்காவிட்டால் அது பல தீங்குகளை விளைவிக்கும். மேலும் அதனை அழிக்காமல் குப்பையில் வீசப்படுவதால் அதனை அள்ளும் தூய்மை பணியாளர்களுக்கு நோய் ஏற்படுகிறது. எனவே இதுபோன்ற விசயங்களை தடுக்க தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

மருத்துவ கழிவுகளை குப்பையுடன் கொட்டிய தனியார் மருத்துவமனை.. அதிரடி நடவடிக்கை எடுத்த தாம்பரம் மாநகராட்சி!

இந்த சூழலில் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ கழிவுகளை முறைப்படி பாய்லர் மூலம் அழிக்காமல் குப்பையில் வீசுவதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராஜகீழ்பாக்கத்தில் உள்ள பிரபல குழந்தைகள் நலம் மற்றும் பெண்கள் மருத்துவமனையான நியூ லைப் மருத்துவமனையின் மருத்துவ கழிவுகள் குப்பையில் வீசப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மருத்துவ கழிவுகளை குப்பையுடன் கொட்டிய தனியார் மருத்துவமனை.. அதிரடி நடவடிக்கை எடுத்த தாம்பரம் மாநகராட்சி!

கண்காணித்த இன்று ராஜகீழ்பாக்கத்தில் உள்ள பிரபல குழந்தைகள் நலம் மற்றும் பெண்கள் மருத்துவமனையான நியூ லைப் மருத்துவமனையின் மருத்துவ கழிவுகளை குப்பைகளை வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தாம்பரம் மாநகராட்சி சுதாதாரத்துறை துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் ஆய்வு செய்து ஆதாரத்தை திரட்டினர்.

மருத்துவ கழிவுகளை குப்பையுடன் கொட்டிய தனியார் மருத்துவமனை.. அதிரடி நடவடிக்கை எடுத்த தாம்பரம் மாநகராட்சி!

பின்னர் மருத்துவ கழிவுவுகளை குப்பையில் வீசிய நியூ லைப் என்ற தனியார் நிர்வாகத்திற்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து நோட்டிஸ் வழங்கப்பட்டது. மேலும் இதுபோல் பொது சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயலில் ஈடுபடும் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் முதல் முறை அபராதமும், தொடர்ச்சியாக ஈடுபட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மருத்துவ கழிவுகளை குப்பையுடன் கொட்டிய தனியார் மருத்துவமனை.. அதிரடி நடவடிக்கை எடுத்த தாம்பரம் மாநகராட்சி!

மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் அதனை குப்பையில் வீசுவதால் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் நோய் பரவுகிறது. மேலும் இதனால் அவர்கள் அதிக சிரமத்துக்கு உள்ளாகுகின்றனர். எனவே மருத்துவ கழிவுகளை முறையாக அழிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories