தமிழ்நாடு

காந்தியை கோட்சே சுடாமல் இருந்திருந்தால்: இந்துத்வா நிர்வாகி திமிர் பேச்சு; வேடிக்கை பார்க்கும் பாஜக அரசு!

“மகாத்மா காந்தியின் மார்பில் கோட்சே சுடாமல் இருந்திருந்தால், இந்துக்கள் மெக்காவில் பிரார்த்தனை செய்திருப்பார்கள்” என முனி நிலேஷ் சந்திர மகாராஜா என்பவர் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.

காந்தியை கோட்சே சுடாமல் இருந்திருந்தால்: இந்துத்வா நிர்வாகி திமிர் பேச்சு; வேடிக்கை பார்க்கும் பாஜக அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் மத்தியில் ஆட்சி பொறுப்புக்கு பா.ஜ.க. வந்ததில் இருந்தே பெண்கள், தலித் மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக, கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளி, கல்லூரிக்கு வரக்கூடாது என்றும் இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு செல்லவேண்டும் என்ற முழக்கத்தை தொடர்ச்சியாக இவர்கள் பேசி வருகிறார்கள்.

அதேபோல், நாடுமுழுவதும் இந்துத்துவ கும்பல் இஸ்லாமியர்களுக்கு எதிராக மத மோதல்களை துண்டி வருகிறது. இந்த கும்பலுக்கு பலம் சேர்க்கும் வகையிலேயே பா.ஜ.க கட்சியின் அமைச்சர்கள் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் வரை பேசி வருகின்றனர். சமீபத்தில் கூட இஸ்லாமியர்களுக்கு வாக்குரிமை இருக்கக்கூடாது என்றும், இந்தியாவில் இவர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே வாழ வேண்டும் என பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Nikkei Asian Review
Nikkei Asian Review

இதுஒருபுறம் என்றால் தேச தந்தை என்றழைக்கப்படும் மகாத்மா காந்தி மீதான வெறுப்பையும் பாஜக மற்றும் இந்துத்வா கும்பல்கள் வெளிப்படையாகவே பேசி வருவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக, இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்ததில் மகாத்மா காந்திக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. அதுவரை உயர்சமூகத்தை சேர்ந்தவர்களால் அலங்கரிக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் அதன்பின்னரே வெகுஜன மக்கள் பங்கேற்கும் இயக்கமாக மாறியது.

மதசகிப்பே இந்திய நாட்டுக்கு அவசியமானது என்ற கருத்தை பலமுறை பொதுஅரங்கில் கூறி மத ஒற்றுமையை மக்களிடையே விதைத்து வந்தார். காந்தியின் இந்த செயல் வலதுசாரி இந்துத்துவவாதிகளிடையே பெரும் கோவத்தை ஏற்படுத்தியது. இந்திய மத ஒற்றுமைக்கு ஆதாரமாக காந்தி இருப்பதால் அவரை கொலை செய்யவேண்டும் என பலர் பகிரங்கமாகவே பேசத்தொடங்கினர்.

காந்தியை கோட்சே சுடாமல் இருந்திருந்தால்: இந்துத்வா நிர்வாகி திமிர் பேச்சு; வேடிக்கை பார்க்கும் பாஜக அரசு!

அதன்விளைவாக தீவிர இந்துத்துவவாதியும், ஆர்.எஸ்.எஸ் மற்றும் சாவர்க்கருடன் நெருங்கிய தொடர்புகொண்டவருமான கோட்ஸேவால் காந்தி சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். சுதந்திரத்துக்கு பின்னரும் இந்துத்துவவாதிகள் காந்தியை தொடர்ந்து விமர்சித்தே வந்தனர். பல மேடைகளில் காந்தியை அவதூறு பேசி வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது இந்துத்வா அமைப்பில் சார்பில் ஏற்பாடு செய்யப்படிருந்த நிகழ்ச்சியில், “மகாத்மா காந்தியின் மார்பில் கோட்சே சுடாமல் இருந்திருந்தால், இந்துக்கள் மெக்காவில் பிரார்த்தனை செய்திருப்பார்கள்” எனப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தரங்காவ்ன் என்ற பகுதியில் சகால் இந்து சமாஜ் தொடர்புடைய இந்து ஜஞ்சகரன் தர்மசபை என்றும் இந்த்துவா அமைப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்துத்வா அமைப்பைச் சேர்ந்தவர்கள் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக மத துவேசத்தை பரப்பி வருகின்றனர்.

குறிப்பாக சாத்வி சரஸ்வதி என்ற பெண் நிர்வாகி தனது உரையின் போது, முஸ்லிம்களை குறிவைத்து, வாள்களை வைத்திருப்பதற்காகவும், மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடுவதாகவும் கூறினார். அதேபோல் பரதானந்த சரஸ்வதி மஹாராஜும் முஸ்லிம்களை குறிவைத்து அவர்கள் கோவிட் பரவுவதாக குற்றம் சாட்டினார். அவர் இந்துக்களை ஆயுதங்களை வைத்திருக்கும்படி வற்புறுத்தினார். மேலும் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

காந்தியை கோட்சே சுடாமல் இருந்திருந்தால்: இந்துத்வா நிர்வாகி திமிர் பேச்சு; வேடிக்கை பார்க்கும் பாஜக அரசு!

அதுமட்டுமல்லாது முனி நிலேஷ் சந்திர மகாராஜா என்பவர் பேசுகையில், “மகாத்மா காந்தியின் மார்பில் கோட்சே சுடாமல் இருந்திருந்தால், இந்துக்கள் மெக்காவில் பிரார்த்தனை செய்திருப்பார்கள்” என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இரண்டு நாட்களுக்கு முன்னதாக, வெறுப்பு பேச்சு பேசுபவர்களுக்கு எதிராக மாநில அரசுகள் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பாஜக ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவில் பேச்சாளர்கள் முஸ்லீம்கள் மீது வெறுப்புணர்வை உருவாக்க பல்வேறு சதி கோட்பாடுகளை முன்வைத்தும், மகாத்மா காந்தி குறித்து சர்ச்சையாகவும் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு எதிராக அம்மாநில அரசு நடவடிக்கை எடுக்குமா என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories