தமிழ்நாடு

”நீ ஒரு கோழை.. ஒரு பொய்யன்” .. அண்ணாமலை விளக்கத்திற்கு காயத்ரி ரகுராம் கடும் சாடல்!

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஒரு பொய்யன் என காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.

”நீ ஒரு கோழை.. ஒரு பொய்யன்” ..  அண்ணாமலை விளக்கத்திற்கு காயத்ரி ரகுராம் கடும் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து மே 13ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ், ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. அதேபோல் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என பா.ஜ.கவும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.கவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர். இது பா.ஜ.கவிற்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பா.ஜ.க ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக உள்ளதால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இது தேர்தலில் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தேர்தல் கணிப்புகளும் காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமாகவே உள்ளது.

”நீ ஒரு கோழை.. ஒரு பொய்யன்” ..  அண்ணாமலை விளக்கத்திற்கு காயத்ரி ரகுராம் கடும் சாடல்!

இதனால் பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும் கர்நாடகாவில் தமிழர்களின் ஓட்டுகள் அதிகம் உள்ளதால் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குறிப்பாகப் பெங்களூரில் சிவாஜி நகர், சாம்ராஜ்பேட்டை, காந்தி நகர், சாந்தி நகர் பகுதியில் தமிழக மக்களின் ஓட்டுகள் உள்ளது. மேலும் பா.ஜ.கவின் மூத்த தலைவரும் சட்டமன்ற உறுப்பினராக உள்ள ஈஸ்வரப்பா தொகுதியில் சிவமொக்காவிலும் தமிழர்களின் வாக்குகள் அதிகம் உள்ளது.

இந்நிலையில்தான் இன்று சிவமொக்கா என்.இ.எஸ் மைதானத்தில் தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க மூத்த தலைவர் ஈஸ்வரப்பா மற்றும் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உட்படப் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்டது. பின்னர் சிறிது நிமிடத்திலேயே பாட்டை நிறுத்தும் படி ஈஸ்வரப்பா கூறினார். பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிபரப்ப வேண்டாம், யாராவது வந்து பாடினால் பாடுங்கள் என கூறி கன்னடத் தாய் வாழ்த்து பாடலை பாட வைத்துள்ளார்.

இதையடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் அவமதித்தற்கு ஈஸ்வரப்பா, அண்ணாமலை, பா.ஜ.க நிர்வாகிகள் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை விடுத்துள்ளார். இது போல் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் தமிழ்த்தாய் வாழ்த்து மெட்டு சரியில்லாமல் இருந்ததால் பாடலை நிறுத்தினோம் என அண்ணாமலை ஒரு வெற்று விளக்கத்தைக் கொடுத்துள்ளார். இந்நிலையில் அண்ணாமலை ஒரு பொய்யன் என காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "என்ன ஒரு பொய்யன். தமிழ்த்தாய் வாழ்த்து மெட்டு சரியாகத்தான் இருந்தது பாதி வழியில் நிறுத்தப்படும் வரை. நீங்கள் சரியாக இல்லை, உங்கள் எண்ணங்கள் சரியாக இல்லை. தவறை மறைக்க நீ ஒரு கோழை. தமிழக மக்கள் உன்னை கைவிட்டார்கள்" என்று சாடியுள்ளார்.

banner

Related Stories

Related Stories