தமிழ்நாடு

யார் யாருக்கு 12 மணி நேரம் வேலை?.. அமைச்சர்கள் சி.வி.கணேசன், தங்கம் தென்னரசு கூறிய விளக்கம் என்ன?

தொழிலாளர்கள் வேலை நேர சட்டத் திருத்த மசோதா தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

யார் யாருக்கு 12 மணி நேரம் வேலை?.. அமைச்சர்கள் சி.வி.கணேசன், தங்கம் தென்னரசு கூறிய விளக்கம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தொழிலாளர்கள் வேலை நேர சட்டத் திருத்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா குறித்து அமைச்சர்கள் சி.வி. கணேசன், தங்கம் தென்னரசு ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய அமைச்சர்கள், "தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழிலாளர்கள் வேலை நேர சட்டத் திருத்த மசோதா எந்த ஒரு தொழிலாளிகளுக்கும் எதிரானது அல்ல. எந்த ஓரு தொழில் நிறுவனமாக இருந்தாலும் அங்கு பணியாற்றக்கூடிய தொழிலாளர்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே 12 மணி நேர வேலை என்பதை நடைமுறைப்படுத்தப்படும்.

யார் யாருக்கு 12 மணி நேரம் வேலை?.. அமைச்சர்கள் சி.வி.கணேசன், தங்கம் தென்னரசு கூறிய விளக்கம் என்ன?

இதில் தொழிலாளர்களுக்கு விருப்பமில்லை என்றால் இது நடைமுறைப்படுத்தப்படாது. வாரத்தில் 48 மணி நேரம் மட்டுமே வேலை. அதில் எந்த மாற்றமும் இல்லை. எல்லா நிறுவனங்களுக்கும் இந்த சட்டத் திருத்தம் பொருந்தாது. விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். தொழிலாளர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. அதையும் மீறி 48 மணி நேரத்தையும் கடந்து தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும் என்று நிறுவனங்கள் வற்புறுத்தினால் தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.

மின்னணுவியல் தொழில் சார்ந்த உற்பத்தி நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் தோல் அல்லாத பொருட்கள் தயாரிக்கக் கூடிய தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் என சில குறிப்பிட்ட நிறுவனங்களில் இந்த சட்டத்திருத்தம் பொருந்தும். வாரத்தில் நான்கு நாட்கள் 12 மணி நேரம் பணியாற்றியவர்கள் மூன்று நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்.

யார் யாருக்கு 12 மணி நேரம் வேலை?.. அமைச்சர்கள் சி.வி.கணேசன், தங்கம் தென்னரசு கூறிய விளக்கம் என்ன?

இன்றைக்கு இருக்கக்கூடிய உலகளாவிய சூழ்நிலையில் வேலைவாய்ப்புகள் அதிகமாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருகின்ற பன்னாட்டு நிறுவனங்கள் தற்போதைய தொழில்நுட்பங்கள் வசதிகள் பெருகி உள்ள நிலைகள் தொழிலாளர்கள் விரும்புகிற சூழலை ஏற்படுத்தக்கூடிய வகையிலே இந்த சட்டத் திருத்தம் செயல்படுத்தப்பட்ட உள்ளது. தொழிலாளர்களுக்கு எதிரான எந்த செயலுக்கும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது" என தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories