தமிழ்நாடு

மாதம் ரூ. 3.75 லட்சம் வீட்டு வாடகை தரும் நண்பர் யார்? : அண்ணாமலையை வறுத்தெடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி!

வீட்டு வாடகை ரூ.3.75 லட்சத்தை யார் கொடுக்கிறார்கள் என அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

மாதம் ரூ. 3.75 லட்சம் வீட்டு வாடகை தரும் நண்பர் யார்? : அண்ணாமலையை வறுத்தெடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க தலைவராக அண்ணாமலை பொறுப்பிற்கு வந்ததிலிருந்தே, தன்னை ஒரு விவசாயி, எளிய வீட்டுப்பிள்ளை என்றெல்லாம் கதை விட்டு வருகிறார். அதேபோன்று இவரின் அரைவேக்காட்டுதன அரசியலைக் கண்டு பா.ஜ.க. முன்னணியினர் பலர் நொந்து நூலாகி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் வாட்ச் குறித்து இணையத்தில் சர்ச்சைக்குரிய வகையில் செய்திகள் பரவியது.

எனவே இதற்கு அண்ணாமலை விளக்கம் அளித்து பேட்டி அளித்திருந்தார். அப்போது “அந்த வாட்ச் ரபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் செய்யப்பட்டவை என்றும், தான் ஒரு தேசியவாதி என்பதால் அந்த வாட்ச்சை வாங்கியதாகவும் கூறினார்.

மேலும் இந்தியா ரபேல் விமானங்களை ஆர்டர் செய்துபோது அந்த ரபேல் விமான பாகங்களை வைத்து 500 வாட்ச்சுகள் தயாரிக்கப்பட்டது என்றும், இது சிறப்புப் பதிப்பு என்பதால் ரபேல் விமானத்தில் உள்ள சில பாகங்கள் இந்த வாட்ச்சில் உள்ளது என்றும் கூறினார். அதோடு அந்த 500 வாட்சுகளில் தான் வைத்திருப்பது 149-ஆவது பதிப்பு என்றும்” கூறினார்.

மாதம் ரூ. 3.75 லட்சம் வீட்டு வாடகை தரும் நண்பர் யார்? : அண்ணாமலையை வறுத்தெடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி!

அதோடு அண்மையில் ஏப்ரல் 1-ம் தேதி ரபேல் பில்லை வெளியிடுவதாக அண்ணாமலை தெரிவித்தார். இதனால் மார்ச் 31-ம் தேதியே "நாளை ஏப்ரல் 1.. பில் எங்கே அண்ணாமலை.." என்று இணையத்தில் ட்ரெண்ட் ஆனது. இதனால் தான் ஏப்ரல் 14-ம் தேதி ரபேல் வாட்சுக்கான பில்லை வெளியிடுவதாக பகிரங்கமாக அறிவித்தார்.

இந்நிலையில் நேற்று சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் ரபேல் வாட்ச் பில்லை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், "ரபேல் வாட்ச் என்பது bell and ross உடன் சேர்ந்த டஸால்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. உலகத்திலேயே மொத்தமாக 500 வாட்ச்தான் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் என்னிடம் இருக்கும் வாட்ச் 147-வது ஆகும்.

இந்த வாட்சை மார்ச் மாதம் 2021-ல் கோவையை சேர்ந்த சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவர் வாங்கினார். எனக்கு இதுபோல் வாட்ச் இருப்பது பின்னர் தான் தெரியவந்தது. எனவே உடனே சேரலாதன் ராமகிருஷ்ணனை தொடர்பு கொண்டு அவரிடம் இருந்து பெற்றுக்கொண்டேன்" என்று கூறினார்.

மேலும் பில் காட்டுவதற்கு பதில் excel சீட் ஒன்றை காட்டி மீண்டும் ஏமாற்றியுள்ளார். அதோடு, ரபேல் வாட்ச் சர்ச்சை தொடங்கியபோது அண்ணாமலை அளித்த பேட்டியில், 500 வாட்சுகளில் நான் வைத்திருக்கும் இந்த வாட்சின் எடிஷன் (பதிப்பு) 149-வது ஆகும்" என்று தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது இவர் வைத்திருக்கும் வாட்ச் 147-வது எடிஷன் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அவர் கூறுவது அப்பட்டமான பொய் என்றும், மழுப்பல் என்றும் தெரிகிறது.

மாதம் ரூ. 3.75 லட்சம் வீட்டு வாடகை தரும் நண்பர் யார்? : அண்ணாமலையை வறுத்தெடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி!

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அரசுமீதும் அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளில் என்ன முகாந்தரம் இருந்தது? ஏதாவது ஒரு ஆதாரத்தைக் காட்டுங்கள்.

அண்ணாமலை குடியிருக்கும் வீட்டின் வாடகை மாதம் ரூ.3.75 லட்சம். மாதம் மாதம் இந்த வாடகையை யார் கொடுக்கிறார்கள் என்று அவர்களது பெயரை வெளியிட முடியுமா? வார் ரூமில் செய்யப்படும் வசூல்தான் உங்களது நண்பரா?

ரபேல் வாட்ச் நம்பரை அண்ணாமலை மாற்றி மாற்றிச் சொல்கிறார். பரிசாகக் கொடுத்தார்கள் என சொல்வதில் அண்ணாமலைக்கு என்ன தயக்கம்?. இதை மறைக்க ஆயிரம் பொய்களைச் சொல்கிறார் அண்ணாமலை?. என்னைப் பற்றி வெளியிட்டுள்ள தகவல் இது குறித்து அவர் மீது வழக்கு தொடர இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories