தமிழ்நாடு

’நாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம்’.. மேலும் 2 புகார்: விரைவில் சித்த மருத்துவர் ஷர்மிகா கைது?

சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் இரண்டு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

’நாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம்’.. மேலும் 2 புகார்: விரைவில் சித்த மருத்துவர்  ஷர்மிகா கைது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க.வின் மாநில நிர்வாகியாக இருப்பவர் டெய்சியின் மகள்தான் மருத்துவர் ஷர்மிகா. சித்த மருத்துவம் படித்த இவர், பிரபல யூடியூப் சேனலுக்கு மருத்துவ குறிப்புகள் வழங்கி வருவார். உடல் உபாதைகள், இதை சாப்பிடலாம் - இதை சாப்பிடக்கூடாது என்று டிப்ஸ் வழங்கி வருவார்.

இப்படி மருத்துவர் என்ற போர்வைக்குள் இருந்து யூடியூப் சேனல் மூலம் மறைமுக மத பிரச்சாரத்தை செய்வதாக ஷர்மிகாவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். ஏனெனில் இவர் அளித்த பேட்டிகளில் மாட்டுக்கறி, கோழிக்கறி உட்பட அனைத்தையும் பற்றி கருத்து தெரிவித்திருந்தார்.

அதாவது அவர் அளித்த பேட்டி ஒன்றில், "மாட்டுக்கறி என்பது நாம் கடவுளாக பார்க்கும் ஒரு அழகான விஷயம். அதையும் மீறி சொல்ல வேண்டுமானால், இந்திய மக்கள் DNA-விலே தங்களை விட பெரிய மிருகங்களை சாப்பிட்டால் செரிமானம் ஆகக்கூடிய சக்தி இல்லை. ஆடு, கோழி, கெளதாரி என நம்மை விட சிறிய மிருகங்களை சாப்பிட்டால் நமக்கு ஒன்றும் ஆகாது. ஆனால் பெரிய மிருகங்களை சாப்பிட்டால் செரிமானம் பிரச்னை ஏற்படும்" என்றார்.

’நாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம்’.. மேலும் 2 புகார்: விரைவில் சித்த மருத்துவர்  ஷர்மிகா கைது?

தொடர்ந்து மற்றொரு பேட்டியில், "எடை குறைக்க 10 நாட்கள் சாப்பிடாமல் இருந்துவிட்டு, 3 கிலோ எடை குறைந்தால் கூட, பின்னர் ஒரே ஒரு குலாப் ஜாமுன் சாப்பிட்டால் அதே 3 கிலோ எடை ஒரே நாளில் ஏறும்" என்றார். இதனைத் தொடர்ந்து மற்றொரு பேட்டியில், "பெண்கள் அயோடின் உப்பை பயன்படுத்த கூடாது; பிராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி சிறந்தது. எனவே அதனை சாப்பிடுவதில் கவனம் வேண்டும்" என்றார்.

மேலும் "குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரும், நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாக மாறும், தினசரி 4 ஸ்பூன் நெய் சாப்பிட்டால் முகம் அழகாகும், ஷாம்பூ தான் முடிக்கு விஷம்.." என்று பல விதமான கருத்துக்களையும் வாரி வழங்கி வருகிறார் ஷர்மிகா. ஆரம்பத்தில் இவர் அளித்த டிப்ஸ்களை பெரிதாக பேசப்படாத நிலையில், இவர் தொடர்ந்து கூறி வந்த பொய்கள் வெளிவந்தன.

இதையடுத்து மருத்துவர் ஷர்மிகா,சித்த மருத்துவக் குறிப்பில் இல்லாதவற்றை பேசி வருவதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவரிடம் விளக்கம் கேட்டு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை நோட்டீஸ் அனுப்பியது.

’நாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம்’.. மேலும் 2 புகார்: விரைவில் சித்த மருத்துவர்  ஷர்மிகா கைது?

இதையடுத்து ஷர்மிகா ஜனவரி 24ம் தேதி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி இயக்குநரகத்தில் ஆஜரானார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் இரண்டு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சித்த மருத்துவர் ஷர்மிகாவின் மருத்துவ குறிப்பு வீடியோக்களை பார்த்து தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இரண்டு பேர் இந்திய மருத்துவ ஆணையரகத்திடம் புகார் கொடுத்துள்ளனர்.

ஏற்கனவே ஷர்மிகா மீது விசாரணை நடந்து வரும் நிலையில் மேலும் இரண்டு புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories