தமிழ்நாடு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. பெரிய சிக்கலில் கலாஷேத்ரா: பொறுப்பில்லாத பதில்களால் விலகிய பெண் வழக்கறிஞர்!

கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள விசாரணைக்குழு உறுப்பினரான வழக்கறிஞர் அஜிதா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. பெரிய சிக்கலில் கலாஷேத்ரா: பொறுப்பில்லாத பதில்களால் விலகிய பெண் வழக்கறிஞர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி ஒன்றிய கலாச்சார துறையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்பட்டு வரும் இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. மாணவிகள் இதுபோன்ற புகாரை பலமுறை கல்லூரி நிர்வாகத்திடம் கூறியும் அவர்கள் இதற்காக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. பெரிய சிக்கலில் கலாஷேத்ரா: பொறுப்பில்லாத பதில்களால் விலகிய பெண் வழக்கறிஞர்!

இதைத்தொடர்ந்து அண்மையில் இந்த பிரச்சனை வெளியில் வந்தது. மேலும் இதனை அக்கல்லூரியின் முன்னாள் இயக்குநர் லீலா சாம்சனும் தனது சமூக வலைதள பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து மாணவர்களும் குற்றச்சாட்டு வைக்கப்பட்ட பேராசிரியர்களை நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் இறங்கினர்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. பெரிய சிக்கலில் கலாஷேத்ரா: பொறுப்பில்லாத பதில்களால் விலகிய பெண் வழக்கறிஞர்!

இந்த விவகாரம் பெரிய அளவில் தீவிரமாகவே இதற்கு மகளிர் ஆணைய தலைவி குமாரி பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் தலைமையிலான குழு தற்போது விசாரணை மேற்கொண்டு வரும் சூழலில், அங்கு படித்த முன்னாள் மாணவி, உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது பாலியல் புகார் கொடுத்தார். அதன்பேரில் தலைமறைவாக இருந்த ஹரி பத்மனை நேற்று அதிரடியாக தனிப்படை போலிஸார் கைது செய்தனர்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. பெரிய சிக்கலில் கலாஷேத்ரா: பொறுப்பில்லாத பதில்களால் விலகிய பெண் வழக்கறிஞர்!

இது விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமடையும் நிலையில், கைது செய்யப்பட்ட ஹரி பத்மனை விசாரித்து வருகின்றனர். முன்னதாக இந்த கல்லூரி சார்பில் internal complaints committee என்று சொல்லப்படும் உள் விசாரணை குழு இது போன்ற விவகாரங்களை விசாரிக்க அமைக்கப்பட்டிருந்தது. அதில் 3 பேர் உறுப்பினர்களாகவும், ரேவதி என்பவர் இயக்குனராகவும் செயல்பட்டு வருகிறார்.

ரேவதி ராமச்சந்திரன்
ரேவதி ராமச்சந்திரன்

இந்த விவகாரம் தொடர்பாக முதலில் விசாரணை மேற்கொண்டு அதில் எந்த ஒரு உண்மைத் தன்மையும் இல்லை என அறிக்கை சமர்ப்பித்தது இயக்குநர் ரேவதிதான். எனவே அவரிடம் விசாரணை மேற்கோள்ள நேற்று அவர் மகளிர் ஆணையத் தலைவர் குமாரி முன் நேரில் ஆஜரானார். தொடர்ந்து இந்த விவகாரம் சூடு பிடிக்கும் நிலையில், தற்போது இந்த குழுவில் இருந்த உறுப்பினரான சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அஜிதா அந்த குழுவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. பெரிய சிக்கலில் கலாஷேத்ரா: பொறுப்பில்லாத பதில்களால் விலகிய பெண் வழக்கறிஞர்!

இதுகுறித்து வழக்கறிஞர் அஜிதா எழுதியுள்ள கடிதத்தில், "கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் சிக்கல்களுக்கு நிர்வாகத்தின் பதிலால் நான் மிகவும் கலக்கமடைந்துள்ளேன். நிறுவனத்தில் தற்போது நிலவும் சூழ்நிலையும், பெண் மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பெரிய அளவிலான அதிருப்தியும், இந்த நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ள உள் புகார்க் குழுவின் (ICC) வெளிப்புற உறுப்பினராகத் தொடர வேண்டுமா என்று என்னை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. பெரிய சிக்கலில் கலாஷேத்ரா: பொறுப்பில்லாத பதில்களால் விலகிய பெண் வழக்கறிஞர்!

தற்போதைய சர்ச்சைக்கு நிர்வாகம் அளித்த பதில்களும் என்னை யோசிக்க வைக்கிறது. எனவே உங்கள் நிறுவனத்துடன் இனி என்னை தொடர்புப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை, குறிப்பாக IC இன் உறுப்பினராகத் தொடர நான் விரும்பவில்லை. IC இன் உறுப்பினர் பதவியிலிருந்து நான் ராஜினாமா செய்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார். இது தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கல்லூரியின் விசாரணை குழுக்களில் ரேவதி ராமச்சந்திரன் இயக்குநராகவும், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அஜிதா, RDCFA கல்லூரி ஆசிரியர் நந்தினி நாகராஜ், BASS பள்ளி தாளாளர் உமா மகேஷ்வரி ஆகியோர் உறுப்பினர்களாகவும் உள்ளனர். இதில் இப்போது வழக்கறிஞர் அஜிதா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories