தமிழ்நாடு

ரூ.2438 கோடி மோசடி செய்த ஆருத்ரா.. அடுத்தடுத்து சிக்கும் பா.ஜ.க நிர்வாகிகள் - RK.சுரேஷ் விரைவில் கைது?

ஆருத்ரா கோல்டு மோசடி செய்த வழக்கில், நடிகரும் பாஜக கலைப் பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நடத்த பொருளாதாரக் குற்றப்பிரிவு போலிஸார் முடிவு செய்துள்ளனர்.

ரூ.2438 கோடி மோசடி செய்த ஆருத்ரா.. அடுத்தடுத்து சிக்கும் பா.ஜ.க நிர்வாகிகள் - RK.சுரேஷ் விரைவில் கைது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் பேரிடம் 25 முதல் 30 சதவீதம் வட்டி தருவதாக கூறி 2438 கோடி ரூபாயை ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி செய்தது. இந்த வழக்கில் தற்போது பா.ஜ.கவின் விளையாட்டுப் பிரிவு மாநில செயலாளர் ஹரிஷ் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹரிஷ் எந்தவித சொந்த வருமானமும் அவருடைய பெயரில் இல்லாத நிலையில், பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்து இருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருடைய சொத்து மற்றும் வங்கி கணக்குகளை ஏற்கனவே பொருளாதார குற்றப்பிரிவு போலிஸார் முடக்கி உள்ளனர்.

ரூ.2438 கோடி மோசடி செய்த ஆருத்ரா.. அடுத்தடுத்து சிக்கும் பா.ஜ.க நிர்வாகிகள் - RK.சுரேஷ் விரைவில் கைது?

அந்த நிறுவனத்தின் மற்றொரு பெண் இயக்குனரான மாலதி என்பவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில், 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே 8 பேர் பொருளாதார குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆருத்ரா கோல்டு மோசடி செய்த வழக்கில், நடிகரும் பாஜக கலைப் பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நடத்த பொருளாதாரக் குற்றப்பிரிவு போலிஸார் முடிவு செய்துள்ளனர்.

முன்னதாக இந்த வழக்கில் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான ரூசோ என்பவரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், நடிகரும் பா.ஜ.க கலைப் பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் என்பவரிடம் வழக்கை ஒன்றிய அரசின் மூலம் இல்லாமல் செய்வதற்காக ரூ.12 கோடி கொடுத்துள்ளார். அந்தப் பணத்தின் மூலம் அதிகாரிகளிடம் பேச முயற்சி செய்து தோல்வி அடைந்ததாகக் கூறப்படுகிறது.

ரூ.2438 கோடி மோசடி செய்த ஆருத்ரா.. அடுத்தடுத்து சிக்கும் பா.ஜ.க நிர்வாகிகள் - RK.சுரேஷ் விரைவில் கைது?

பின்னர் ஆர்.கே.சுரேஷ் பணத்தை திருப்பி ஒப்படைக்க வில்லை என ரூசோ விசாரணையின் போது வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். இதனிடையே ஆருத்ரா மோசடி வழக்கை போலிஸார் விசாரிக்க தொடங்கியதுமே ஆர்.கே.சுரேஷ் சுற்றுலாவுக்காக துபாய் சென்றுள்ளார். ஆனால் வழக்கில் இருந்து தப்பிக்க அங்கேயே தலைமறைவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து ஆர்.கே.சுரேஷை சென்னை அழைத்து விசாரணை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு போலிஸார் தீவிர முயற்சி எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 28ம் தேதி ஆருத்ரா கோல்டு முறைகேடு வழக்கு விசாரணைக்கு வந்தது.

ரூ.2438 கோடி மோசடி செய்த ஆருத்ரா.. அடுத்தடுத்து சிக்கும் பா.ஜ.க நிர்வாகிகள் - RK.சுரேஷ் விரைவில் கைது?

அப்போது, ஹரீஸ், மாலா ஆகிய இருவரையும் 10 நாட்கள் போலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி கருணாநிதி வழக்கை விசாரித்து, இந்த வழக்கில் ஹரீஷை 4 நாட்கள் போலிஸ் காவலில் விசாரிக்கவும் மற்றொரு இயக்குனர் மாலதியை ஒரு நாள் விசாரிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

ஹரீஷிடம் 4 நாட்கள் போலிஸ் விசாரணை முடிவடைந்த நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பாபு ஆஜராகி, விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது. பல தகவல்கள் பெறப்படவுள்ளன. விசாரணையில்தான் அனைத்தும் தெரியவரும் என்றார்.

இதையடுத்து, ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் இயக்குனர் ஹரீஷை ஏப்ரல் 6ம் தேதிவரை போலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நேற்று முதல் ஹரீசிடம் போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories