தமிழ்நாடு

பொதுமக்களிடம் ரூ.2438 கோடி சுருட்டிய ஆருத்ரா நிறுவனம் : மோசடி வழக்கில் பா.ஜ.க மாநில நிர்வாகி ஹரிஷ் கைது!

ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் நிறுவன இயக்குனர்களில் ஒருவரான பா.ஜ.க நிர்வாகி ஹரிஷ் மற்றும் மற்றொரு இயக்குனர் நாராயணா என்பவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

பொதுமக்களிடம் ரூ.2438 கோடி சுருட்டிய ஆருத்ரா நிறுவனம் : மோசடி வழக்கில் பா.ஜ.க மாநில நிர்வாகி ஹரிஷ் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த வழக்கில் ஆருத்ரா நிறுவன இயக்குனர்களில் ஒருவரான பா.ஜ.க நிர்வாகி ஹரிஷ் மற்றும் அந்த நிறுவனத்தின் மற்றொரு இயக்குனர் நாராயணா என்பவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் பேரிடம் 25 முதல் 30 சதவீதம் வட்டி தருவதாக கூறி 2438 கோடி ரூபாயை ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி செய்தது. இந்த வழக்கில் தற்போது பாஜகவின் விளையாட்டுப் பிரிவு மாநில செயலாளர் ஹரிஷ் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹரிஷ் எந்தவித சொந்த வருமானமும் அவருடைய பெயரில் இல்லாத நிலையில், பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்து இருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருடைய சொத்து மற்றும் வங்கி கணக்குகளை ஏற்கனவே பொருளாதார குற்றப்பிரிவு போலிஸார் முடக்கி உள்ளனர்.

பொதுமக்களிடம் ரூ.2438 கோடி சுருட்டிய ஆருத்ரா நிறுவனம் : மோசடி வழக்கில் பா.ஜ.க மாநில நிர்வாகி ஹரிஷ் கைது!

அந்த நிறுவனத்தின் மற்றொரு பெண் இயக்குனரான மாலதி என்பவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலிஸார் இன்று கைது செய்துள்ளனர். இந்த வழக்கில், 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே 8 பேர் பொருளாதார குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர்கள் ராஜசேகர் மற்றும் உஷா ராஜசேகர், மைக்கேல்ராஜ் என்ற மூன்று பேரும் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளனர். பொருளாதார குற்றப்பிரிவில் ஹரிஷ் மீது மோசடி வழக்கு இருக்கும் நிலையில் பா.ஜ.க-வில் சில மாதங்களுக்கு முன்பு ஹரிஷ் விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக நியமிக்கப்பட்டது சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories